
Sign up to save your podcasts
Or


யமுனா ஹர்ஷவர்தனா | கார்த்திக் | மொழிபெயர்ப்பு | பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -3
எழுத்தாளர் கார்த்திக் - சிறு முன்னுரை
இளங்கலை கணினி பட்டதாரியான கார்த்திக், இணையத்தில் பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார் . இணையத் தளங்கள் வடிவமைப்பு செய்வதும், இணையத் தளங்களை பராமரித்தலும் இவரது முழு நேர தொழில். "பாகீரதி" என்ற இணைய இதழையும் நடத்தி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/01/26/பல்லாயிரம்-ஆண்டுகளுக்க-3/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi
ரா. கிரிதரன் | குறுங்கதைகள் | இதயத்துடிப்பு தூரம் | R. Giridharan | Kurung Kathaigal |Ithayaththudipu Thuram
எழுத்தாளர் ரா. கிரிதரன்- ஒரு அறிமுகம்
புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் பொறியியலில் பட்டம் பெற்றவர், அதன்பின் தகவல் தொழில் நுட்பத்தில் படிப்பு. இந்திய நகரங்களில் வேலை செய்தபின் 2006- ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கிறார். பதாகை இணைய இதழின் சிறப்பிதழுக்குப் பொறுப்பாசிரியர். கர்னாடக சங்கீதம்– ஓர் எளிய அறிமுகம், ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை‘, “காற்றோவியம்” நூலும் வெளியாகி இருக்கின்றன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/01/26/ரா-கிரிதரன்-குறுங்கதைகள்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Milagu Novel-Part 87 | Era Murukan | சொல்வனம் | மிளகு நாவல்- 87 | இரா. முருகன்
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது, விஷ்ணுபுரம் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/01/26/மிளகு-அத்தியாயம்-87/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
மாலன் | தோழி 2- அத்தியாயம் 2| நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-22 | Kalkionline.com
எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை
வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருது ஆகியவற்றைப் பெற்றதுடன் 2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://maalan.co.in/தோழி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Karoor Neelakanda Pillai | Malayalam | T. R. Meena | Mara Bommaigal | தி.இரா.மீனா | மர பொம்மைகள்
இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் ஏ. ஜே. தாமஸ் – ஒரு கவிஞர், ஆசிரியர் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் மொழிபெயர்ப்பாளர். அவர் சாகித்ய அகாடமியின் இருமாத இதழான இந்திய இலக்கியத்தின் முன்னாள் ஆசிரியர் ஆவார். லிபியாவின் பெங்காசி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பித்துள்ளார்; இக்னோ (IGNOU)வில் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். அவர் கதா விருது, ஏ.கே.எம்.ஜி பரிசு மற்றும் மொழிபெயர்ப்புக்கான வோடபோன் குறுக்கெழுத்து விருதைப் பெற்றவர். தாமஸ் இந்திய அரசாங்கத்தில் சீனியர் பெல்லோஷிப்பைப் பெற்றுள்ளார். மேலும் தென் கொரியா அரசாங்கத்தின் கலாச்சாரத் துறையில் கௌரவ உறுப்பினராகவும் இருந்தார்.
எழுத்தாளர் தி.இரா.மீனா - முன்னுரை
மதுரை தியாகராசர் கல்லூரியில் ’ வட்டார நாவல்கள் ’ குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று
பெங்களூர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
பதாகை ,சொல்வனம், குவிகம் ,அம்ருதா முதலிய இதழ்களில் இந்திய மொழிக் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/01/12/மர-பொம்மைகள்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | ஸ்ரீதர் நாராயணன் | கட்டுரை | புதிர்பாதையினூடே, ஒரு புனைவு பயணம்
Sridhar Narayanan | article
எழுத்தாளர் ஸ்ரீதர் நாராயணன்- அறிமுகம்
ஸ்ரீதர் நாராயணன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்ப் புனைவுலகில்
தொடர்ந்து பங்காற்றி வருவதுடன் கவிதை மொழிபெயர்ப்பு போன்ற
தளங்களிலும் தடம் பதித்துள்ளார்.
அறிபுனை சிறுகதைப் போட்டியில் இவர் 2008 ல் எழுதிய முதல் சிறுகதை "ரசவாதம்"
எழுத்தாளர் ஜெயமோகனின்
தேர்வில் பரிசு பெற்றது.
சொல்வனம், பதாகை, தமிழினி போன்ற இணைய பத்திரிகைகளிலும்
ஆனந்த விகடனிலும் பல சிறுகதைகள் எழுதியுள்ளார்
சென்னை நகர சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு வென்றதுடன் 2019 ல்
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான கத்திக்காரன் இரா முருகன் அவர்களின்
முன்னுரையுடன் வெளியானது.
To read: /முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2025/01/12/புதிர்பாதையினூடே-ஒரு-பு/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 3
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 3
எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு
பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை
பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/01/12/அதிரியன்-நினைவுகள்-குற-3/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
அருணாசலம் ரமணன் |அறிவியல் கட்டுரை |
புள்ளிகளும் கோடுகளும் படிக கட்டமைப்புகளும் |Arunachalam Ramanan | article | PuLLigaLum KodukaLum Padiga KattamaippukaLum
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2025/01/12/புள்ளிகளும்-கோடுகளும்-பட/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் |எழுத்தாளர் | சசி | சிறுகதை | "நேர்காணல்" | Solvanam | Sasi | Short Story | NerkaaNal
எழுத்தாளர் சசி- ஒரு சிறு அறிமுகம்.
சசி என்ற புனைபெயர் கொண்ட சசிதரன் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆவர். இவர் சொல்வனம், ஆனந்த விகடன், வாசகசாலை மற்றும் இணைய இதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர் வசிப்பது சென்னையில்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/01/12/நேர்-காணல்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | கலித்தேவன் | சிறுகதை | புத்தனின் புன்னகை | Kalithevan | Short Story | Bhddhanin Anubhavam
கலித்தேவன்- ஒரு சிறு முன்னுரை
வி.கலியபெருமாள் என்ற இயற்பெயர் கொண்ட கலித்தேவன் ITI தொழில் படிப்பு முடித்து சொந்தமாகத் தஞ்சாவூரில் பணி புரிந்து வருகிறார்.
40 ஆண்டுகளாக வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர்.
சமீபத்தில் நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இலக்கிய கூட்டங்கள் நடத்தியும், சொல்வனம், நடுகல், மயிர் , அகழ் இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2025/01/12/புத்தனின்-புன்னகை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed