Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • யமுனா ஹர்ஷவர்தனா | கார்த்திக் | மொழிபெயர்ப்பு | பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1

    யமுனா ஹர்ஷவர்தனா | கார்த்திக் | மொழிபெயர்ப்பு | பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1


    எழுத்தாளர் கார்த்திக் - சிறு முன்னுரை


    இளங்கலை கணினி பட்டதாரியான கார்த்திக், இணையத்தில் பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார் . இணையத் தளங்கள் வடிவமைப்பு செய்வதும், இணையத் தளங்களை பராமரித்தலும் இவரது முழு நேர தொழில். "பாகீரதி" என்ற இணைய இதழையும் நடத்தி வருகிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/12/22/பல்லாயிரம்-ஆண்டுகளுக்கு/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi

    13 min
  • சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | தீச்சொல் நிகண்டு | சிறுகதை | Solvanam | NanjilNadan | Story |Theechol Nigandu

    சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | தீச்சொல் நிகண்டு | சிறுகதை | Solvanam | NanjilNadan | Story |Theechol Nigandu


    நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.

    நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

    நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

    நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/12/22/தீச்சொல்-நிகண்டு/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    16 min
  • சொல்வனம் | சித்ரா பாலசுப்ரமணியன் | கட்டுரை | "நற்றிணை" | Chithra Balasubramanian | article | NatriNai

    சொல்வனம் | சித்ரா பாலசுப்ரமணியன் | கட்டுரை | "நற்றிணை" | Chithra Balasubramanian | article | NatriNai

    எழுத்தாளர் சித்ரா பாலசுப்ரமணியன்- சிறு முன்னுரை


    எழுத்தாளர் சித்ரா பாலசுப்ரமணியன் மிகுந்த

    காந்திய ஆர்வலர். 'மண்ணில் உப்பானவர்கள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர். காந்தியின் தீண்டாமை யாத்திரை குறித்தும் அவர் குறித்தான பிற செய்திகள் பற்றி எழுதியும் பேசியும் வருகிறார். தமிழ்ப் பேராசிரியையாகவும், வானொலி மற்றும் பொதிகை போன்ற ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியவர்.

    காந்தி சார்ந்த பல நூல்களை அறிமுகம் செய்து பேசியிருக்கிறார்.

    சங்க இலக்கியம் குறித்து இணையத்தில் வகுப்புகள் எடுத்து வருகிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/12/22/நற்றிணை/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    8 min
  • Solvanam | Milagu Novel-Part 84 | Era Murukan | சொல்வனம் | மிளகு நாவல்- 84| இரா. முருகன்

    Solvanam | Milagu Novel-Part 84 | Era Murukan | சொல்வனம் | மிளகு நாவல்- 84| இரா. முருகன்


    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/12/22/மிளகு-அத்தியாயம்-85/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    21 min
  • S. Ramakrishnan | short story | Sila Puthirgal | எஸ். ராமகிருஷ்ணன் | குறுங்கதை | சில புதிர்கள் |

    S. Ramakrishnan | short story | Sila Puthirgal | எஸ். ராமகிருஷ்ணன் | குறுங்கதை | சில புதிர்கள் |

    எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்- ஒரு சிறு அறிமுகம்

    கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம்,

    குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்றுபல்வேறு

    தளங்களிலும் இவர் தீவிரமாக இயங்கி வருகிறார்.


    நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இரண்டு வரலாற்று நூல்களைஎழுதியிருக்கிறார்.

    இவரது சஞ்சாரம் நாவலுக்காக 2018ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருதுபெற்றதுடன்,

    கனடாவின் இயல் விருது, தமிழக அரசின் விருது, சிகேகே இலக்கிய விருது, மாக்சிம்கார்க்கி விருது , முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்தநாவலுக்கான விருது, ஞானவாணி விருது, நல்லி திசை எட்டும் விருது, விஸ்டம்விருது, கண்ணதாசன் விருது, பெரியார் விருது, துருவா விருது, எஸ்.ஆர்.வி. இலக்கிய விருது, சேலம் தமிழ் சங்க விருது, விகடன் விருது, கொடீசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, இயற்றமிழ் வித்தகர் விருது. இலக்கியச்சிந்தனைவிருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

    தேசாந்திரி என்ற தனது பதிப்பகத்தையும் திறம்பட நடத்தி வருகிறார்.

    இவர் தனது குடும்பத்துடன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.


    To read முழுவதும் வாசிக்க

    https://www.sramakrishnan.com/சில-புதிர்கள்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    4 min
  • எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "கடல் ஆமை விஞ்ஞானி" | A. Muttulingam | Short story | "Kadal Amai Vinjaani"

    எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "கடல் ஆமை விஞ்ஞானி" | A. Muttulingam | Short story | "Kadal Amai Vinjaani"


    எழுத்தாளர் அ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை.


    ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது‘அக்கா’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.

    நிறைய சிறுகதைத் தொகுப்புகள் , நாவல்கள், கட்டுரைகளுக்கு இவர்சொந்தக்காரர்.

    இவருடைய கதைகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப்பரிசுகள் கிடைத்துள்ளன. இலங்கை சாகித்திய அகாதமி பரிசு வென்ற இவருக்கு2022ல் கி. ரா. விருதும் கிடைத்தது.

    கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பிற்கு வித்திட்டவர் இவரே.

    To read: / முழுவதும் வாசிக்க

    http://amuttu.net/2023/01/24/கடல்-ஆமை-விஞ்ஞானி/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    17 min
  • Shyamala Gopu | Kalaimaga l Story | Ammachi | சியாமளா கோபு | சிறுகதை | "அம்மச்சி" |

    Shyamala Gopu | Kalaimaga l Story | Ammachi | சியாமளா கோபு | சிறுகதை | "அம்மச்சி" |

    எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை

    நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.

    இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

    இவரது மோகமே மௌனமாய்,

    அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

    காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    17 min
  • யூன் சோய் | மைத்ரேயன் | ஸ்கின்ஷிப் – பகுதி 1 | மொழிபெயர்ப்புச் சிறுகதை| Maithreyan | Translation | Skinship_paguthi1

    யூன் சோய் | மைத்ரேயன் | ஸ்கின்ஷிப் – பகுதி 1 | மொழிபெயர்ப்புச் சிறுகதை| Maithreyan | Translation | Skinship_paguthi1

    யூன் சோய்

    யூன் சோய் கொரியாவில் பிறந்து தனது மூன்று வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் நிறுவனத்தில் எம்ஏ பட்டம் பெற்றவர். மற்றும் ஸ்டான்போர்டில் முன்னாள் ஸ்டெக்னர் ஃபெலோ (Stegner Fellow) ஆவார். அவரது கதைகள் மற்றும் கட்டுரைகள் New England Review, Michigan Quarterly Review, Narrative Magazine, and The Best American Short Stories 2018 (நியூ இங்கிலாந்து விமர்சனம், மிச்சிகன் காலாண்டு விமர்சனம், கதை இதழ் மற்றும் சிறந்த அமெரிக்க சிறுகதைகள் 2018) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. அவர் கலிபோர்னியாவின் அனாஹெய்மில் வசிக்கிறார்.


    மொழிபெயர்ப்பாளர்: மைத்ரேயன். சொல்வனம் பதிப்புக் குழு உறுப்பினர். சுமார் பதினைந்தாண்டுகளாகக் கதைகள், கட்டுரைகளை இங்கிலிஷிலிருந்து தமிழுக்கு மடை மாற்றி வருகிறார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/12/08/ஸ்கின்ஷிப்/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi

    56 min
  • சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 16 | மூலம்: காளிதாஸன்

    சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | குமார-சம்பவம்-மஹா-காவ்யம்- 16 | மூலம்: காளிதாஸன்

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/12/08/குமார-சம்பவம்-மஹா-காவ்யம-15/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    9 min
  • சொல்வனம் | Banumathi N. | article | Uyire Uyire | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | உயிரே உயிரே!

    சொல்வனம் | Banumathi N. | article | Uyire Uyire | சொல்வனம் | பானுமதி ந. | கட்டுரை | உயிரே உயிரே!



    எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை

    எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார்.

    2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார்.


    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/12/08/உயிரே-உயிரே/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    18 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com