Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • தி. ஜானகிராமன் | நாவல் | செம்பருத்தி பாகம் 1 | அத்தியாயம் 13 | T. Janakiraman| Novel | Chembaruthi 13

    தி. ஜானகிராமன் | நாவல் | செம்பருத்தி பாகம் 1 | அத்தியாயம் 13 | T. Janakiraman| Novel | Chembaruthi 13

    எழுத்தாளர் தி. ஜானகிராமன்- ஒரு சிறு முன்னுரை

    தி.ஜா. என்று அழைக்கப்படும் தி. ஜானகிராமன் ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காகத் தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். தமிழின் மிகப்புகழ் பெற்ற நாவல்களான செம்பருத்தி, மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்றவற்றை எழுதியவர்.


    தேர்ந்த இசைக் கலைஞரான தி.ஜா. இசையை எழுத்தாக்கிய அபூர்வ எழுத்தாளர். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்துத் தேவங்குடியில் 1921-ஆம் ஆண்டு பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவர்; பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் கணையாழி மாத இதழில், ஆசிரியராகப் பணியாற்றி வந்த தி. ஜானகிராமன் 1982-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சிறு உடல் நலக் குறைவிற்குப் பிறகு இயற்கை எய்தினார்.


    இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர்.


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    21 min
  • சொல்வனம் | | இரா. முருகன் | குறுநாவல் சிவிங்கி அத்தியாயம் 1 | Chivingi Chapter 1 | Era Murugan

    சொல்வனம் | | இரா. முருகன் | குறுநாவல் சிவிங்கி அத்தியாயம் 1 | Chivingi Chapter 1 | Era Murugan


    Description

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/series/சிவிங்கி/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    9 min
  • ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை அத்தியாயம் 35

    ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை அத்தியாயம் 35


    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/2023/10/15/நாவல்-தினை-அத்தியா-13/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    14 min
  • Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 23

    Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 23

    எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

    பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

    பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

    இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/10/08/அதிரியன்-நினைவுகள்-23/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    24 min
  • சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 16 | நாவல்

    சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 16 | நாவல்


    எழுத்தாளர் அமர்நாத்- ஒரு

    சிறு முன்னுரை

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.



    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/10/08/உபநதிகள்-பதினாறு/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    18 min
  • மீனாக்ஷி பாலகணேஷ் | பாமினி விலாஸ | மொழிபெயர்ப்பு | Jaganatha Panditha Raja 1 | Bamini Vilasa |

    மீனாக்ஷி பாலகணேஷ் | பாமினி விலாஸ | மொழிபெயர்ப்பு | Jaganatha Panditha Raja 1 | Bamini Vilasa |

    எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை


    அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்

    பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.


    நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.


    தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/10/08/ஜகன்னாத-பண்டித-ராஜா/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    18 min
  • Ezuthalar | A. Muttulingam | short story "Ainthu Kal Manithan" | எழுத்தாளர் அ. முத்துலிங்கம் சிறுகதை | "ஐந்து கால் மனிதன்"

    Ezuthalar | A. Muttulingam | short story "Ainthu Kal Manithan" | எழுத்தாளர் அ. முத்துலிங்கம் சிறுகதை | "ஐந்து கால் மனிதன்"

    எழுத்தாளர் ஆ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை.


    ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது ‘அக்கா’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.


    நிறைய சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கட்டுரைகளுக்கு இவர்சொந்தக்காரர்.


    இவருடைய கதைகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப்பரிசுகள் கிடைத்துள்ளன. இலங்கை சாகித்திய அகாதமி பரிசு வென்ற இவருக்கு 2022ல் கி. ரா. விருதும் கிடைத்தது.


    கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பிற்கு வித்திட்டவர் இவரே.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://amuttu.net/2019/12/12/ஐந்து-கால்-மனிதன்-2/


    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    15 min
  • எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கட்டுரை "ஊருண்டு, காணி இல்லேன்!" NanjilNadan Article Param Irupathu Evvidam June 2023

    எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கட்டுரை "ஊருண்டு, காணி இல்லேன்!" NanjilNadan Article Param Irupathu Evvidam June 2023


    நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.

    நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

    நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

    நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற சூடிய பூ சூடற்க சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

    To read முழுவதும் வாசிக்க

    https://drive.google.com/file/d/1KjfZxcOLmylfdhaw01ImVuIqrzW7V0E4/view?fbclid=IwAR3AGMaO_3CDAqdHqt2tGikMU59GIQw0gSrcpr8eWwRib9Ecl9pXWI-5CqU

    ஒலி வடிவம், காணொளி சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    54 min
  • எழுத்தாளர் | ஸாதத் ஹஸன் மண்ட்டோ | மொழிபெயர்ப்பு சிறுகதை | பென்னேசன் | இறுதி சல்யூட் | Pennesan | Iruthi Salute |

    எழுத்தாளர் | ஸாதத் ஹஸன் மண்ட்டோ | மொழிபெயர்ப்பு சிறுகதை | பென்னேசன் | இறுதி சல்யூட் | Pennesan | Iruthi Salute |

    எழுத்தாளர் ஸாதத் ஹஸன் மண்ட்டோ — ஆசிரியர் குறிப்பு


    1912 ல் பிறந்த எழுத்தாளர் ஸாதத் ஹஸன் மண்ட்டோ முக்கியமாக உருதுமொழியில் எழுதி, 22 சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஐந்து தொடர்வானொலி நாடகங்கள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் இரண்டுதனிப்பட்ட ஓவியங்களின் தொகுப்புகள் ஆகியவற்றைத் தயாரித்தார்.


    1936-ல் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘மண்ட்டோ கி. அஃப்சானே’ வெளியானது. 1955 ம் ஆண்டு காலமானார்.


    இவர் பாகிஸ்தானிய Nishan-e-Imtiaz விருதை மறைவுக்குப்பின் பெற்றார்.

    எழுத்தாளர் பென்னேசன் - சிறு முன்னுரை


    ராகவன் தம்பி என்ற புனைபெயர் கொண்ட பென்னேசன் ஒரு நாடக இயக்குனர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர் ஆவார்.




    யதார்த்தா என்ற நாடகக் குழுவைத் துவங்கி வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள் இயக்கியும் தயாரித்ததுடன் பிறமொழி நாடகங்களைத் ( The Lesson, சாம்ப சிவபிரஹஸ்னா, கள்ளங்கேறிய வீடு, பாபி, Memory ) தமிழில் பெயர்த்தும் டெல்லியில்மேடையேற்றி உள்ளார்.


    ராகவன் தம்பி என்ற புனைபெயரில் பல்வேறு இந்தியப் படைப்பாளிகளின் சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். வடக்கு வாசல் என்ற இலக்கிய சிற்றிதழை சில காலம் நடத்தி வந்ததுடன் சில ஆவணப்படங்களும் எடுத்துள்ளார். டெல்லியில் பிரபல நாளேடு ஒன்றின் தலைமை செய்தியளராகவும்மாநிலங்களவை ஊடக ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும்இருந்திருக்கிறார்.


    நாற்பது ஆண்டுகால டெல்லி வாசத்திற்குப் பின்னர் தற்போது கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/09/24/இறுதி-சல்யூட்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    33 min
  • சொல்வனம் | கமல தேவி | கட்டுரைத்தொடர் | "மொழியென்னும் ஆடி" | Solvanam | Kamala Devi |

    சொல்வனம் | கமல தேவி | கட்டுரைத்தொடர் | "மொழியென்னும் ஆடி" | Solvanam | Kamala Devi |

    எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை

    இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்

    எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.

    சக்யை (2019), குருதியுறவு (2020),

    கடுவழித்துணை (2020), கடல் (2022).


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/09/24/மொழியென்னும்-ஆடி/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    11 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com