
Sign up to save your podcasts
Or


புதுமைப்பித்தன் | சிறுகதை | பொய்க் குதிரை | PuthumaiPithan | Short Story | Poyk Kuthirai
எழுத்தாளர் புதுமைபித்தன்- ஆசிரியர் குறிப்பு
சொக்கலிங்கம்பிள்ளை-பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு 1906 ஏப்ரல் 25ம் தேதி பிறந்தவர்.
புதுமைபித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.
தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில்பெற்றார்.
தாசில்தாராகப் பணியாற்றிய அவரின் தந்தை ஓய்வுபெற்றதும் 1918 இல் சொந்தஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில்படித்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் படித்து, 1931இல் பி.ஏ. பட்டம் பெற்றார்.
1942ல் கமலாவுடன் திருமணம். புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் மும்முரமாக இருந்தது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம்தான். 108 சிறுகதைகள் எழுதியுள்ளார்.
50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.
15 கவிதைகள் எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்றப்பட்ட இவர் தனது 42 ஆவது வயதிலேயே காச நோய் தாக்கி இறந்தார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2014/07/16/பொய்க்-குதிரை-புதுமைப்ப/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 3 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal
இந்திரா பார்த்தசாரதி- ஒரு சிறு முன்னுரை
இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் எனப் பல படைப்புகள் படைத்துள்ளார். இவர் எழுதிய "நந்தன் கதை" , ராமானுஜர், ஔரங்கசீப் என்னும் நாடங்களும், "ஏசுவின் தோழர்கள்" போன்ற படைப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் தனது குருதிப்புனல் நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றதுடன் தமிழக அரசு விருது, சரஸ்வதி சம்மான், பாரதீய பாஷா பரிஷத், மற்றும் 2010-ல் பத்ம ஸ்ரீ விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | மு. வெங்கடேஷ் | சிறுகதை |
கொரங்கி | M. Venkatesh | Short Story | Korangi
எழுத்தாளர் மு. வெங்கடேஷ்- சிறு அறிமுகம்
திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட இவர் டவுண் லிட்டில் ஃப்ளவர் பள்ளியில் படித்து, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் பயின்றார். தற்போது சென்னை தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
எழுத்து மீதும் வாசிப்பு மீதும் ஏற்பட்ட தீராப்பற்றால் வாசிக்கத் துவங்கி எழுதவும் ஆரம்பித்தார். இவரது கதைகள் சொல்வனம், பதாகை இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது “கொரங்கி” என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com//2016/07/17/கொரங்கி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 26
எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை
ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இவரது மிகச்சிறந்த படைப்பான ராக் தர்பாரி ஆங்கிலத்திலும் மற்றும் 15 இந்திய
மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சுக்லா 2011 ஆம் ஆண்டில் ஞானபீட விருதைப் பெற்றார். இவரது முதல் பெரியவிருது 1969 ஆம் ஆண்டில் இவரது
ராக் தர்பாரி நாவலுக்காகக் கிடைத்த சாகித்யஅகாடமி விருது ஆகும். மேலும் வியாஸ் சம்மன் விருதைப் பெற்ற இவருக்கு 2008 ஆம் ஆண்டில், இந்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்து கெளரவித்தது.
இவர் 2011ஆம் ஆண்டில்காலமானார்.
எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத்- ஒரு சிறிய முன்னுரை.
இவர் ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியில் இருந்து சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் என்று பல வகை இலக்கியப்படைப்புக்களை
மொழியாக்கம் செய்துள்ளார்.
இவர் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதை 1993ஆம்ஆண்டில் பெற்றார்.
இவரது படைப்புகள்
தர்பாரி ராகம், ராஜநர்த்தகி, கூர்ஜரத்தின் செல்வன், ஜெயசோமநாத், தேவதாசி,
புயலும் ஒளியும், வீரசுதந்திரம்,
சப்தபதி, கங்கை தாய் ஆகும்.
இவர் 1999ஆம் ஆண்டில் காலமானார்
To read: / முழுவதும் வாசிக்க
https://archive.org/details/DarbariRagamShukla
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 25
எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை
ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இவரது மிகச்சிறந்த படைப்பான ராக் தர்பாரி ஆங்கிலத்திலும் மற்றும் 15 இந்திய
மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சுக்லா 2011 ஆம் ஆண்டில் ஞானபீட விருதைப் பெற்றார். இவரது முதல் பெரியவிருது 1969 ஆம் ஆண்டில் இவரது
ராக் தர்பாரி நாவலுக்காகக் கிடைத்த சாகித்யஅகாடமி விருது ஆகும். மேலும் வியாஸ் சம்மன் விருதைப் பெற்ற இவருக்கு 2008 ஆம் ஆண்டில், இந்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்து கெளரவித்தது.
இவர் 2011ஆம் ஆண்டில்காலமானார்.
எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத்- ஒரு சிறிய முன்னுரை.
இவர் ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியில் இருந்து சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் என்று பல வகை இலக்கியப்படைப்புக்களை
மொழியாக்கம் செய்துள்ளார்.
இவர் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதை 1993ஆம்ஆண்டில் பெற்றார்.
இவரது படைப்புகள்
தர்பாரி ராகம், ராஜநர்த்தகி, கூர்ஜரத்தின் செல்வன், ஜெயசோமநாத், தேவதாசி,
புயலும் ஒளியும், வீரசுதந்திரம்,
சப்தபதி, கங்கை தாய் ஆகும்.
இவர் 1999ஆம் ஆண்டில் காலமானார்
To read: / முழுவதும் வாசிக்க
https://archive.org/details/DarbariRagamShukla
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
லாவண்யா சுந்தரராஜன் | சிறுகதை அவன் இனி காப்பி குடிக்க மாட்டான் | LavaNya Sundrarajan | Avan Kapi Kudikkamaatan
கவிஞர் லாவண்யா சுந்தரராஜன்- சிறு அறிமுகம்
திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்து தற்சமயம் பெங்களூரில் வசிக்கும் கவிஞர்லாவண்யா சுந்தரராஜன் மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரிகிறார்.
இவரது நான்கு கவிதை தொகுப்புகள் நீர்க்கோலவாழ்வை நச்சி, இரவைப் பருகும்பறவை, அறிதலின் தீ, மண்டோவின் காதலியும்,
இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் புறாக்களை எனக்கு பிடிப்பதில்லை, முரட்டுப்பச்சை
மற்றும் ஒரு நாவல் காயாம் பூவும் வெளிவந்துள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2021/04/25/அவன்-இனி-காப்பி-குடிக்க-ம/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi
மதியழகன் சுப்பையா | சிறுகதை | ஆதலினால் காமம் செய்வீர்
எழுத்தாளர் மதியழகன் சுப்பையா - சிறு முன்னுரை
திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் மும்பையில் பிறந்துவளர்ந்தவர்.
தமிழ், இந்தி, மராத்தி, ஆங்கிலம் தெரிந்த இவர் ஆங்கில இலக்கியத்தில்முதுகலைப் பட்டம் பெற்றவர்.
நாடகங்களை எழுதி இயக்கவும் செய்ததுடன்
விளம்பரப்படங்களில் மொழிபெயர்ப்பு மற்றும் இயக்கப் பணிகளில் நல்லஅனுபவம் கொண்ட இவர் சிறுகதைகள் கவிதைகள் மற்றும் மொழிப்பெயர்ப்புகளும் செய்துள்ளார்.
பல ஆண்டுகளாக இந்தி மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் உதவி இயக்குனராகமற்றும் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி உள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/11/30/ஆதலினால்-காமம்-செய்வீர்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Jeyamohan| Short story | Pathmaviyuham | ஜெயமோகன் | சிறுகதை | பத்மவியூகம்
எழுத்தாளர் ஜெயமோகன்- ஒரு சிறு முன்னுரை
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான இவர் மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார்.
இவர் புதின, சிறுகதை எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், கட்டுரையாளர், திரைக்கதை, வசனம் எழுதுவது என்று பல திறக்குகளில் மிளிர்கிறார்.
இவரதுகுறிப்பிடத்தக்க படைப்புகளில் சில:
வெண்முரசு, விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல்,
கொற்றவை காடு ஆகியவை.
நவீன தமிழிலக்கிய அறிமுகம் ,அறம் சிறுகதைகள்
ஆகும்.
இவர் கதா விருது, இயல் விருது, சம்ஸ்கிருதி சம்மான் தேசியவிருது, பாவலர் விருது, முகம் விருது, கனடா தமிழ்இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது போன்ற பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க/
https://www.jeyamohan.in/43970/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
கணேஷ் ராம் | சிறுகதை | கடாரம் கொண்டான் | Solvanam | Ganesh Ram | Short Story | Kadaram Kondan
எழுத்தாளர் கணேஷ் ராம்- சிறு முன்னுரை
வங்கியில் பணி புரியும் இவர் 35 ஆண்டுகளுக்கு முன் வங்கியின் நாடக ஆசிரியராக இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். தூர்தர்ஷனில் நாடகம் மற்றும் பாக்யா இதழில் சிறுகதையும் எழுதும் வாய்ப்பு வந்தது.
வங்கிகளுக்கு இடையேயான நாடகப் போட்டியில் இவரது வங்கிக்கு விருது பெற்றுத் தந்தது
இவர் எழுதிய நாடகம்.
பிலாய் தமிழ் மன்றத்திற்கு சில நாடகங்களை எழுதினார்.
குவிகம் அழகிய சிங்கரின் நண்பரான இவர் எழுத்தாளர் வண்ணதாசனைப் பற்றி - "வண்ணதாசனும் கல்யாண்ஜியும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். நவீன விருட்சம், சிறகு, பூபாளம் போன்றவற்றில் வெளியான இவரது கட்டுரைகள் மற்றும் கவிதைகள் தவிர, இவர் 15 சிறுகதைகள், 4 அல்லது 5 நாடகங்கள் மற்றும் ஒரு குறு நாவல் எழுதியிருக்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/07/23/கடாரம்-கொண்டான்/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
மீனாக்ஷி பாலகணேஷ் | கட்டுரை | இழப்பினில் அடைந்த காதல் சுவர்க்கம் | Meenakshi Balaganesh | article | Izhaipinil_adaintha_kathal__suvarkam
எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை
அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்
அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.
நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.
தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/07/23/இழப்பினில்-அடைந்த-காதல்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed