Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • சொல்வனம் | கமல தேவி | கட்டுரைத்தொடர் | "கவிதாயினி- சங்கப்பெண்கவிகள்" | Solvanam | Kamala Devi |

    சொல்வனம் | கமல தேவி | கட்டுரைத்தொடர் | "கவிதாயினி- சங்கப்பெண்கவிகள்" | Solvanam | Kamala Devi |

    எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை

    இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்

    எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.

    சக்யை (2019), குருதியுறவு (2020),

    கடுவழித்துணை (2020), கடல் (2022).


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/07/23/சங்கப்பெண்கவிகள்-2/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    19 min
  • ஸிந்துஜா | சிறுகதை | கேட்டதும் கண்டதும் | Cyndhujhaa | Short Story | Kettathum Kandathum

    ஸிந்துஜா | சிறுகதை | கேட்டதும் கண்டதும் | Cyndhujhaa | Short Story | Kettathum Kandathum

    எழுத்தாளர் ஸிந்துஜா

    எழுத்தாளர் ஸிந்துஜா திருவையாறைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு மேலாக எழுத்து உலகத்தில் இருக்கிறார்.

    இவர் 150க்கும் மேலாக சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

    இவர் சிறு இலக்கியப் பத்திரிக்கைகளிலேயே அதிகம் எழுதியுள்ளார். கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

    ஸிந்துஜா சிறுகதைகள், பின்தொடரும் ஒற்றைத்தடம், கரையைக் கடந்து செல்லும் நதி என்ற இவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2023/07/23/கேட்டதும்-கண்டதும்/

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன் /Voice, : Saraswathi Thiagarajan

    22 min
  • சொல்வனம் | தேஜு சிவன் | சிறுகதை | குப்பைத் தொட்டி | Theju Sivan | Kuppai Thotti

    சொல்வனம் | தேஜு சிவன் | சிறுகதை | குப்பைத் தொட்டி | Theju Sivan | Kuppai Thotti


    எழுத்தாளர் தேஜு சிவன் - ஒரு சிறிய முன்னுரை


    சந்தானகிருஷ்ணன் என்ற இயற்பெயருடைய எழுத்தாளர்

    தேஜுசிவன் தஞ்சாவூரில் வசிக்கிறார்.

    இவர் 1980 இல் எழுதத் தொடங்கி தனது சிறுகதைகளை

    கணையாழி உட்பட அந்தக் காலத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும் மதுமிதா என்ற புனைப்பெயரில் எழுதினார். 25 வருட நீண்ட இடைவெளிக்குப்பிறகு மறுபடியும் தேஜூ சிவன் என்ற புனைப்பெயரில் எழுத்துலகில் கால் பதித்துள்ளார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/07/23/குப்பைத்-தொட்டி/


    ஒலி வடிவம், :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    12 min
  • சொல்வனம் | குமரன் கிருஷ்ணன் | அனுபவக் கட்டுரை | நாங்கல்லாம் மதுர காரங்ய…! | Solvanam

    சொல்வனம் | குமரன் கிருஷ்ணன் | அனுபவக் கட்டுரை | நாங்கல்லாம் மதுர காரங்ய…! | Solvanam

    எழுத்தாளர் குமரன் கிருஷ்ணன்- சிறு முன்னுரை

    மதுரையில் பிறந்து வளர்ந்து தற்சமயம் பெங்களூரில் மென்பொறியாளராக பணிபுரிகின்றார். சில ஆண்டுகளாக சொல்வனம், பதாகை, திண்ணை போன்றவற்றில் அவ்வப்போது எழுதி வரும் குமரன் கிருஷ்ணன், பழந்தமிழ் இலக்கியங்களின் மீது பிரமிப்பும் காதலும் கொண்டு அவற்றை ஆழமாக அறியவும், அது சார்ந்த சிந்தனைகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலிலும் எழுதுகிறார்.."



    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/07/23/நாங்கல்லாம்-மதுர-காரங்ய/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan

    12 min
  • எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "வெந்துயர்க் கோடை" | Adithya Srinivas | story |"Venthuyar Kodai"



    எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை

    திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ் தற்சமயம் கர்நாடகாவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது இயற்பெயர் திரு. க. ஸ்ரீநிவாஸ். இவர் தனது வலைப்பதிவில் தன் இலக்கிய வாசிப்பனுபவத்தையும், படைப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/07/23/வெந்துயர்க்-கோடை/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    15 min
  • Solvanam | Milagu Novel-Part 50| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 50| இரா. முருகன் |

    Solvanam | Milagu Novel-Part 50| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 50| இரா. முருகன் |


    Description

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/07/23/மிளகு-அத்தியாயம்-ஐம்பத/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    27 min
  • ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 7 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 7

    ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 7 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 7

    ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.


    திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.

    ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.

    ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com//2023/07/23/தெய்வநல்லூர்-கதைகள்-7/

    14 min
  • சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 11 | நாவல்

    சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 11 | நாவல்


    எழுத்தாளர் அமர்நாத்- ஒரு

    சிறு முன்னுரை

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.



    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/07/23/உபநதிகள்-11/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    14 min
  • Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள் 18"

    Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள் 18"

    எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

    பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

    பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

    இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/07/09/அதிரியன்-நினைவுகள்-17/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    18 min
  • எழுத்தாளர் | பாவண்ணன் | சரித்திரக் கதை | போர்க்களம் | Pavannan | Historic Story| PorkaLam

    எழுத்தாளர் | பாவண்ணன் | சரித்திரக் கதை | போர்க்களம் | Pavannan | Historic Story| PorkaLam

    எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை.

    விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி.

    இவரது இயற்பெயர் பாஸ்கரன்.

    பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

    கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைஉடையவர்.

    இலக்கிய சிந்தனை விருது, சாகித்திய அகாதெமியின் சிறந்தமொழி பெயர்ப்பாளருக்கான விருது, தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது, புதுமைப்பித்தன் விருது,

    கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது மற்றும் எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://www.sirukathaigal.com/சிறப்புக்-கதை/போர்க்களம்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    57 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com