
Sign up to save your podcasts
Or


சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 24
எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை
ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இவரது மிகச்சிறந்த படைப்பான ராக் தர்பாரி ஆங்கிலத்திலும் மற்றும் 15 இந்திய
மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சுக்லா 2011 ஆம் ஆண்டில் ஞானபீட விருதைப் பெற்றார். இவரது முதல் பெரியவிருது 1969 ஆம் ஆண்டில் இவரது
ராக் தர்பாரி நாவலுக்காகக் கிடைத்த சாகித்யஅகாடமி விருது ஆகும். மேலும் வியாஸ் சம்மன் விருதைப் பெற்ற இவருக்கு 2008 ஆம் ஆண்டில், இந்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்து கெளரவித்தது.
இவர் 2011ஆம் ஆண்டில்காலமானார்.
எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத்- ஒரு சிறிய முன்னுரை.
இவர் ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியில் இருந்து சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் என்று பல வகை இலக்கியப்படைப்புக்களை
மொழியாக்கம் செய்துள்ளார்.
இவர் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதை 1993ஆம்ஆண்டில் பெற்றார்.
இவரது படைப்புகள்
தர்பாரி ராகம், ராஜநர்த்தகி, கூர்ஜரத்தின் செல்வன், ஜெயசோமநாத், தேவதாசி,
புயலும் ஒளியும், வீரசுதந்திரம்,
சப்தபதி, கங்கை தாய் ஆகும்.
இவர் 1999ஆம் ஆண்டில் காலமானார்
To read: / முழுவதும் வாசிக்க
https://archive.org/details/DarbariRagamShukla
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi
சொல்வனம் | சுஜாதா | சிறுகதை | மறு | Solvanam: Suujatha | Short Story | மறு
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan
ஞானப்பால் | சிறுகதை | ந. பிச்சமூர்த்தி | Njanapaal | Short Story | N. Pichamoorthy
எழுத்தாளர் ந. பிச்சமூர்த்தி - சிறு முன்னுரை
1900 ம் ஆண்டு பிறந்த இவர் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவர். இவரது இயற்பெயர் வெங்கட மஹாலிங்கம். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அறியப்படுபவர். தத்துவார்த்தச் சாயலுடன் எளிய மக்களைப் பற்றி ஆழ்ந்த மனிதாபிமானத்துடன் எழுதியவர் பிச்சமூர்த்தி.
25 சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ளதுடன் கவிதைகளாக காட்டு வாத்து , வழித்துணை, குயிலின் சுருதி முதலியனவும் படைத்துள்ளார்.
குடும்ப ரகசியம் என்ற நாவலும், காளி என்ற நாடகமும் எழுதியுள்ளார்.
இவர் 1976ம் ஆண்டு காலமானார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://azhiyasudargal.wordpress.com/2010/05/26/ஞானப்பால்-ந-பிச்சமூர்த்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
பச்சைக் கனவு | சிறுகதை | லா.ச. ராமாமிருதம் | Pachai Kanavu | Short Story | LaaSaRamamirtham
Intro Laa
எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்- ஒரு சிறு முன்னுரை
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.
லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.
இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்
சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.
லா.ச.ரா தமது 91-வது வயதில்,
சென்னையில் காலமானார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://azhiyasudargal.wordpress.com/2010/08/31/பச்சைக்-கனவு-லா-ச-ராமாமிர/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 23
எழுத்தாளர் இரா முருகன்-
சிறு முன்னுரை
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://puthu.thinnai.com/archives/47544
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | சி. சு. செல்லப்பா | குறுநாவல் | வாடிவாசல் | C. S. Chellappa | Short Novel | Vadivasal
எழுத்தாளர் சி. சு. செல்லப்பா- ஒரு சிறு குறிப்பு
சின்னமனூரில் 1912 ஆம் ஆண்டு பிறந்து வத்தலகுண்டில் வளர்ந்தார்.
மதுரைக் கல்லூரியில் பி.ஏ படிப்பினை முடித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
சரசாவின் பொம்மை எனும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை சி. சு. செல்லப்பா வுக்கு அளித்தது.
1934இல் எழுதத் தொடங்கிய இவர் சிறுகதை,, கவிதை, கட்டுரை, நாடகம், நாவல்என 29 நூல்களைக் தந்துள்ளார்.
சி. சு. செல்லப்பா விமர்சனத்துக்கு என எழுத்து என்ற இதழைத் தொடங்கினார்.
இவரை நினைத்தாலே மனதுக்கு வருவது வாடிவாசல், சரஸாவின் பொம்மை, மற்றும் நாவல்களான ஜீவனாம்சம், சுதந்திர தாகம் ஆகும்.
இவரது சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
சி. சு. செல்லப்பா 1998ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | KaN Sadasivam | short story | சொல்வனம் | கண்.சதாசிவம்| சிறுகதை | உங்க வீட்ல தங்க விளைய..
எழுத்தாளர் கண்.சதாசிவம்- ஒரு சிறு குறிப்பு
நாகப்பட்டினத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் இலக்கியங்களில், குறிப்பாகச் சைவ பக்தி இலக்கியங்கள், புதினங்களில் ஆர்வம் கொண்டவர். சிறுகதைகள்.com, சொல்வனம் இணைய இதழ்களில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. வரும் வருடங்களில் இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்களைப் புத்தகங்களாக வெளிவர விருப்பம் கொண்டுள்ளார்.
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/07/09/உங்க-வீட்ல-தங்க-விளைய/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "யானை வெரூஉம்" | Adithya Srinivas | story |"Yaanai VerUum"
எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை
திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ் தற்சமயம் கர்நாடகாவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது இயற்பெயர் திரு. க. ஸ்ரீநிவாஸ். இவர் தனது வலைப்பதிவில் தன் இலக்கிய வாசிப்பனுபவத்தையும், படைப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/07/09/யானை-வெரூஉம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | கட்டுரை "பரம்-இருப்பது-எவ்விடம்?" | NanjilNadan | Article | "Param Irupathu Evvidam?" | June 2023
நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.
நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.
நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.
நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://nanjilnadan.com/2023/06/24/பரம்-இருப்பது-எவ்விடம்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Jabalan | short story | Chrisopathesam | ஜாபாலன்| சிறுகதை | மாரியின் மனைவி
எழுத்தாளர் ஜாபாலன்- ஒரு சிறு குறிப்பு
எழுத்தாலும், இசையாலும் எதையோ தேடிக்கொண்டிருக்கும் ஒரு பிறவி
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/07/09/மாரியின்-மனைவி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed