Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 21

    ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 21


    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/archives/47382

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi

    19 min
  • மூலக்கதை எஸ். திவாகர் | கு. பத்மநாபன் | மொழிபெயர்ப்பு | உறுதி | Ku. Padmanapan | Translation | Uruthi


    மூலக்கதை எஸ். திவாகர் | கு. பத்மநாபன் | மொழிபெயர்ப்பு | உறுதி | Ku. Padmanapan | Translation | Uruthi

    எழுத்தாளர் எஸ். திவாகர்

    எஸ் திவாகர் பெங்களூர் மாவட்டம் சோமத்தனஹள்ளியில் பிறந்தார். தேவனஹள்ளியிலும் பெங்களூரிலும் கல்வி. கர்நாடகப் பல்கலைக்கழகத்தில் பட்டம். பல்வேறு இதழ்களில் செய்தியாளர், துணையாசிரியர், ஆசிரியர், ஆசிரியர்க்குழு ஆலோசகர் உள்ளிட்ட பணிகள். 1989 முதல் 2005வரை சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரகத்தில் பணி. சிறுகதை, கவிதை, விமர்சனம், பத்தி எழுத்து, கட்டுரை, வாழ்க்கை வரலாற்று எழுத்துகள், மொழிபெயர்ப்பு என பல்வேறு களங்களில் பங்களிப்பவர். காப்ரியல் கார்சியா மார்க்கஸ், தாமஸ்மன் முதலிய புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர்களின் 50 சிறுகதைகளைக் கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். அமெரிக்காவின் அய்யோவா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தும் எழுத்தாளர் கூடுகையில் 2002ஆம் ஆண்டில் பங்கேற்றார். இந்திய அரசின் பண்பாட்டுத்துறை சார்பில் சீனியர் ஃபெலோஷிப் நல்கை, கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது, கர்நாடக சாகித்ய அகாதெமி விருது, குவெம்பு பாஷாபாரதி விருது ஆகியவை இவர் பெற்ற விருதுகளில் முதன்மையானவை. மாஸ்தி என்று அறியப்பெறும் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், சிவராமகரந்த் உள்ளிட்ட முதன்மையான கன்னட எழுத்தாளர்களின் பெயர்களில் வழங்கப்பெறும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/06/25/உறுதி/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice Saraswathi Thiagarajan

    17 min
  • சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 9 | நாவல்

    சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 9 | நாவல்


    எழுத்தாளர் அமர்நாத்- ஒரு

    சிறு முன்னுரை

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.



    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/06/25/உபநதிகள்-ஒன்பது/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    41 min
  • ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 5

    எழுத்தாளர் ஜா. ராஜகோபாலனின் குறுநாவல் "தெய்வநல்லூர் கதைகள்" – 5

    ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 5

    ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.


    திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.

    ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.

    ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com//2023/06/25/தெய்வநல்லூர்-கதைகள்-5/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    33 min
  • மீனாக்ஷி பாலகணேஷ் | கட்டுரை | ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’ | Meenakshi Balaganesh | article | Urvasi-Vikramorevaseeyam

    மீனாக்ஷி பாலகணேஷ் | கட்டுரை | ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’ | Meenakshi Balaganesh | article | Urvasi-Vikramorevaseeyam

    எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை


    அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்

    அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்

    பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.


    நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.


    தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/06/25/ஊர்வசி-காதலில்-கண்விழித்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    23 min
  • Solvanam | KaN Sadasivam | short story | சொல்வனம் | கண்.சதாசிவம்| சிறுகதை | ஓ மீ மக்காய் -சிண்டுவின் சிறு குறிப்புகள்

    எழுத்தாளர் கண்.சதாசிவத்தின் சிறுகதை "ஓ மீ மக்காய் -சிண்டுவின் சிறு குறிப்புகள்"

    Solvanam | KaN Sadasivam | short story | சொல்வனம் | கண்.சதாசிவம்| சிறுகதை | ஓ மீ மக்காய் -சிண்டுவின் சிறு குறிப்புகள்

    எழுத்தாளர் கண்.சதாசிவம்- ஒரு சிறு குறிப்பு

    நாகப்பட்டினத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் இலக்கியங்களில், குறிப்பாகச் சைவ பக்தி இலக்கியங்கள், புதினங்களில் ஆர்வம் கொண்டவர். சிறுகதைகள்.com, சொல்வனம் இணைய இதழ்களில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. வரும் வருடங்களில் இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்களைப் புத்தகங்களாக வெளிவர விருப்பம் கொண்டுள்ளார்.


    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/06/25/ஓ-மீ-மக்காய்-சிண்டுவின்-ச/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    15 min
  • சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 21

    சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 21

    எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை

    ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.


    இவரது மிகச்சிறந்த படைப்பான ராக் தர்பாரி ஆங்கிலத்திலும் மற்றும் 15 இந்திய

    மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


    சுக்லா 2011 ஆம் ஆண்டில் ஞானபீட விருதைப் பெற்றார். இவரது முதல் பெரியவிருது 1969 ஆம் ஆண்டில் இவரது

    ராக் தர்பாரி நாவலுக்காகக் கிடைத்த சாகித்யஅகாடமி விருது ஆகும். மேலும் வியாஸ் சம்மன் விருதைப் பெற்ற இவருக்கு 2008 ஆம் ஆண்டில், இந்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்து கெளரவித்தது.

    இவர் 2011ஆம் ஆண்டில்காலமானார்.


    எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத்- ஒரு சிறிய முன்னுரை.


    இவர் ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியில் இருந்து சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் என்று பல வகை இலக்கியப்படைப்புக்களை

    மொழியாக்கம் செய்துள்ளார்.


    இவர் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதை 1993ஆம்ஆண்டில் பெற்றார்.

    இவரது படைப்புகள்

    தர்பாரி ராகம், ராஜநர்த்தகி, கூர்ஜரத்தின் செல்வன், ஜெயசோமநாத், தேவதாசி,

    புயலும் ஒளியும், வீரசுதந்திரம்,

    சப்தபதி, கங்கை தாய் ஆகும்.

    இவர் 1999ஆம் ஆண்டில் காலமானார்


    To read: / முழுவதும் வாசிக்க

    https://archive.org/details/DarbariRagamShukla

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, o: Saraswathi Thiagarajan

    25 min
  • Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள் 16"

    Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள் 16"

    எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

    பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

    பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

    இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/06/25/அதிரியன்-நினைவுகள்-16/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    22 min
  • Solvanam | Jaganmithra | short story | சொல்வனம் | ஜெகன்மித்ரா | சிறுகதை | போர்

    Solvanam | Jaganmithra | short story | சொல்வனம் | ஜெகன்மித்ரா | சிறுகதை | போர்

    எழுத்தாளர் ஜெகன்மித்ரா- ஒரு சிறு குறிப்பு

    இராஜபாளையத்தைப் சொந்த ஊராகக் கொண்ட இவர்

    வேலைக்காக தற்போது அமெரிக்காவிலுள்ள ராலேயில் வசிக்கிறார்.

    தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தீவிர வாசிப்பை தாண்டி எழுதுவது இந்த ஆண்டில் தான். செவ்வியல் ஆக்கங்களை எழுதுவதே இவர் லட்சியம், அதற்கான மொழியை உருவாக்கி வருகிறார். ஜெகன்நாதன் என்ற இயற்பெயரில் அபுனைவு எழுதி வருகிறார்.



    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/06/25/2023/06/25/போர்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    13 min
  • சுஜாதா | ஸ்ரீரங்கத்து தேவதைகள்- ராமன் | Sujatha | Raman Video link

    எழுத்தாளர் சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்"

    "ராமன்"

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்

    munnurai font 431 size36

    எழுத்தாளர் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்

    (ஒலி வடிவில்)

    சுஜாதா | ஸ்ரீரங்கத்து தேவதைகள்- ராமன் | Sujatha | Raman



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan


    26 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com