Tamil Spiritual Talks

Tamil Spiritual Talks

By Bremma Sri Kundalini SiddharReligion & SpiritualitySpirituality
Download on the App Store

Tamil Spiritual Talks episodes

  • அகத்தியர் song 119

    பண்ணப்பா குஷ்டமொடு கறப்பான் போக

    பண்பொன்று சொல்லுகிறேன் மைந்தா கேளு

    நண்ணப்பா பரங்கியுட பட்டை வாங்கி

    நலமான பழச்சாற்றில் ஊறல் போட்டு

    விண்ணப்பா ரவிபடவே உலறப் போட்டு

    விசையாக இப்படியே பத்து முறை பண்ணு

    தண்ணப்பா நன்றாக உலர்ந்த பின்பு

    தாக்கி நன்றாய் இடித்து வடிக் கட்டிடாயே

    கட்டாகச் சிவனார் தன் வேம்பை வாங்கி

    கண்டமதாய் நருக்கிக குழித் தயிலம் வாங்கி

    திட்டம தாய் தயிலமதில் பட்டைத் தூளும்

    சேர்த்து நன்றாய்ப் பிசைந்துருட்டி வைத்துக்

    கொண்டு

    மட்டாத நெல்லிக்காய் அளவு கொண்டால்

    மாறாத கிரந்தியொடு சூலை புண்கள்

    தொட்டவுடன் ஓடுகின்ற குஷ்ட ரோகம்

    சொரி சிரங்கு பெருஞ்சிரங்கு இனங் ககேளே


    அகத்தியர் பாடல்

    5 min
  • தேரையர் song 120

    ஒடுமே வலியோங்குங் குடைச்சலும்

    காடு வசம்பு கருது மமுக்கரா

    தேடு மதுரந் தேர்ந்த ரோகணியும்

    நீடு மல்லி நெருங்கு மனிச்சையே

    ஏகு மெண்ணெ யெழிலான வாமணக்

    பாகு மொன்றாய்க் கலந்துமே காச்சியே

    பாகு மேனியில் பகரவே பூசிடியில்

    போகு மேல்வலி பொருந்தப் பறக்குமே.


    தேரையர் பாடல்

    3 min
  • சிவவாக்கியர் song ep 118

    மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும்

    மூன்றுமஞ் சும்எழுத்துமாய் முழங்குமவ் எழுத்துளே

    ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும்

    தோன்றுமண்டத்திலே சொல்லவெங்கும் இல்லையே.


    சிவவாக்கியர் பாடல்

    3 min
  • சட்டைமுனி ep song 117

    மோகமென்ற வுரலுக்குள் மனந்தான் சிக்கி

    முசியாம லிடிப்பதற்கைம் பொறியுங் கோல்தான்

    பாகமென்ற கோபம் வந்தே யுருவாய் நின்று

    பதையாமற் சண்ணிச்சே யுலக மெல்லாந்

    தாகமென்ற ஞானம்வந் தென்ன செய்யும்?

    சண்டாள இந்திரியச் சார்பி னாலே

    வேகமென்ற மனலகரி யைத்தான் கொண்டு

    விண்ணுக்கு ளேநிற்க வெளியாய்ப் போமே.


    சட்டைமுனி பாடல்

    4 min
  • சிவவாக்கியர் song ep 116

    மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்

    நாலுநாளு முன்னிலோரு நாட்டமாகி நாட்டிடில்

    பாலனாகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம்

    ஆலமுண்ட கண்டராணை அம்மையாணை உண்மையே.


    சிவவாக்கியர் பாடல்

    3 min
  • சிவவாக்கியர் song ep 115

    ஒன்றுமொன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே

    அன்றுமின்றும் ஒன்றுமே அனாதியான ணதொன்றுமே

    கற்றல்நின்று செம்பொனைக் களிம் பறுத்து நாட்டினால்

    அன்றுதெய்வ ம்உம்முளே அறிந்ததே சிவாயமே.


    சிவவாக்கியர் பாடல்

    4 min
  • சிவவாக்கியர் song ep 114

    நீரிலே முளைத்தெழுந்த தாமரையின்ஓரிலை

    நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல்

    பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்

    பாரினோடு கூடிநின்ற பண்புகண்டு இருப்பிரே.


    சிவவாக்கியர் பாடல்

    3 min
  • சிவவாக்கியர் சித்தர் song 111

    மூலநாடி தன்னிலே முளைதேழுந்த சோதி   நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின் பாலனாகி வாழலாம் பரப்பிரம்ம ஆகலாம்

    ஆலமுண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே 


    சிவவாக்கியர் சித்தர்

    3 min
  • சிவவாக்கியர் song ep 112

    ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால்

    நம்புலன்க ளாகிநின்ற நாதருக்க தேறுமோ

    ஐம்புலனை வென்றிடா தவத்தமே உழன்றிடும்

    வம்பருக்கும் ஈவதுங் கொடுப்பதும் அவத்தமே.


    சிவவாக்கியர் பாடல்

    2 min
  • சிவவாக்கியர் song 110

    காக்கைமூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம்

    நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய்

    ஏக்கைநோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில்

    பார்த்தபார்த்த திக்கெலாம் பரப்பிரம்ம மானதே.


    சிவவாக்கியர் பாடல்

    3 min

About Tamil Spiritual Talks

From the publisher's feed

We post ancient siddhargal songs and their correct explanation to help people evolve themselves and understand what real spirituality is all about

More shows like Tamil Spiritual Talks

Ramya duraiswamy | Tamil cover songs by Ramya Duraiswamy

Ramya duraiswamy | Tamil cover songs

0 Listeners