பின்நவீனத்துவ அணுகுமுறை, இலக்கியக் கோட்பாடுகள், படைப்புகள் ஆகியவற்றைத் தமிழில் அறிமுகம் செய்து, அது குறித்த விவாதங்களை உருவாக்கி, தமிழ் இலகக்கிய அறிவுலகப் போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றியவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் பிரேம்-ரமேஷ். பின்நவீனத்துவ படைப்பிலக்கியவாதிகளாகவும் விமர்சகர்களாகவும் அறியப்படுபவர்கள். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக் கட்டுரைகள் இவர்கள் இலக்கியப் பங்களிப்புகள். புதுச்சேரி அரசின். ”கம்பன் புகழ் விருது” இரண்டு முறை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2007 முதல் இருவரும் இணைந்து எழுதுவதை விடுத்து தனித்தனியே தமது எழுத்துகளை அளித்துவருகின்றனர்.