திலீப்குமார், இலக்கிய திறனாய்வாளர், சிறுகதையாசிரியர். குஜராத்தி மொழியினை தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் பற்று கொண்டவர். சிறுகதை, இலக்கிய திறனாய்வு என இரு துறைகளிலும் எழுதிவருபவர். இவருடைய கதைகள் யதார்தத்தின் கனத்தினை வெளிப்படுத்துபவை. தெளிந்த பாத்திரப்படைப்பு, மெல்லிய நகைச்சுவை, அனுபவப்பூர்வமான வாழ்க்கையின் தேடல்கள் கொண்டவை இவருடைய கதைகள். 2002இல் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாஷா பாரதி" என்ற மதிப்புமிக்க விருதினைப் பெற்றவர். பல இந்திய இலக்கியத் திட்டங்களுக்கு ஆலோசகராகவும், சிறந்த மொழி பெயர்ப்புக்காக வழங்கப்பெறும் தேசிய விருதுக்கான தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும் பணிபுரிந்தவர். இவரது ’மூங்கில் குருத்து’ சிறுகதை மிக முக்கியக் கதையாக கருதப்படுகிறது.