ஆரம்பக் கல்வியை தன் தந்தையிடமும், அதன்பின் கதிரைவேல் பிள்ளையிடமும் தமிழ் கற்ற திரு.வி.க., பின்பு சுவாமிநாத பண்டிதர், மயிலை மகாவித்துவான் தணிகாசலம், சிதம்பர முதலியார் போன்றோரிடம் திருமறைகள், நீதி நூல்கள், ஞான நூல்கள், இலக்கணம், இலக்கியங்கள் ஆகியவற்றைக் கசடறக் கற்றார். அயோத்தி தாசரிடமிருந்து பெளத்தக் கல்வியையும் கற்றார். எல்லா ஆசிரியர்களுமே அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்த அறிவையும் திறமையையும் கண்டு வியந்தனர்; மதித்தனர்