வாசகர் வட்டம் : Vaasagar Vattam

வாசகர் வட்டம் : Vaasagar Vattam

By IISc Thamizh PeravaiArtsBooks
Download on the App Store

வாசகர் வட்டம் : Vaasagar Vattam episodes

  • அன்றாட பொருட்களின் வடிவமைப்பு - டான் நார்மன் : கூட்டம் - 204 : புத்தக வாசிப்பு

    வாசிப்பவர்: சு.க.பரிதி

    வடிவமைப்பு என்றால் என்ன? 

    மோசமான வடிவமைப்பு என்றால் என்ன? 

    ஒரு கதவிடம் சென்று தள்ளுவதா ? இழுப்பதா ? என்று சிந்தித்தது உண்டா. இத்தககைய சந்தேகத்திற்குரிய கதவுகள் “நார்மன் கதவுகள்” என்று இப்புத்தகத்தின் ஆசிரியர் பெயரிலேயே வெகுவாக அழைக்கப்படுகின்றன. இந்த புத்தகத்தின் ஆசிரியர் நார்மன், ஒரு அமெரிக்க ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியர். பயனர் மைய வடிவமைப்பு [User Centric Design] என்ற துறையை இவர் பிரபலப்படுத்தினார். அன்றாட பயன்படுத்தும் பொருட்கள், அழகாக இருந்து மட்டும் பயனில்லை, மனிதர்களால் எளிதில் பயன்படுத்த ஏகுவாக இருக்க வேண்டும் என்பதே இப்புத்தகத்தின் அடிப்படை நோக்கமாகும். அவ்வாறாக பயனர் பயன்பாடு தெளிவில்லாத பொருட்களின் ஆய்வு தொகுப்பே இப்புத்தகம்.

    1 hr 8 min
  • பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் - ஜார்ஜ்.எஸ். கிளாசன் : கூட்டம் - 203 : புத்தக வாசிப்பு
    வாசிப்பவர் : ராஜா செல்வம் | “உன் நண்பனுக்கு உதவ முடிவு செய்தால் அவன் சுமை உன் தலையில் விழாத வகையில் உதவி செய்”  இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தி வரும் நிதி சார்ந்த கொள்கைகள் அனைத்தும் பாபிலோனில்தான் பிறந்து வளர்ந்தது. ஏனெனில் அங்கு வாழ்ந்த குடிமக்கள் மிகப்பெரிய பணக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் பணத்தின் மதிப்பை போற்றினார்கள். பணத்தை சேமிப்பதில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள்.  அவர்களைப்போல் பொருளாதார வெற்றியை விரும்பும் அனைவருக்கும் எவ்வாறு பணம் சம்பாதிப்பது, சாம்பாதித்ததை எப்படி சேமிப்பது, சேமித்ததை முதலீடு செய்து, மேலும் எவ்வாறு சம்பாதிப்பது என்பதைக் கற்றுத் தருவதுதான் இந்தப் புத்தகத்தின் முக்கிய நோக்கம்.
    58 min

About வாசகர் வட்டம் : Vaasagar Vattam

From the publisher's feed

இந்திய அறிவியல் கழகத்தில் ‘வாசகர் வட்டம்’ கூட்டம் கடந்த மூன்று வருடத்திற்கும் மேலாக ஒவ்வொரு வாரமும் பெரும்பாலும் செவ்வாய் கிழமை இரவு நடைபெற்று வருகிறது. இதுவரை பல்வேறு சிறந்த படைப்பாளிகளின் கதை,…