சஷி தரூர். பாராளுமன்ற உறுப்பினராக பலகாலம் பணிசெய்தவர். தன் அபாரமான பேச்சாற்றலால், கல்லையும் கரைத்துவிடும் சாமர்த்தியசாலி. இவர் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு, ஆக்ஸ்போர்டு அகராதியே மற்றொரு அகராதியைப் புரட்ட வேண்டும். இத்தகுப் பேச்சாளரை ஆக்ஸ்போர்டு யூனியன் விவாத களத்திற்கு பிரிட்டன் மக்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இரு அணியாகப் பிரிந்து, "பிரிட்டன் தன் காலனி நாடுகளுக்கு, இழப்பீடு வழங்க கடமைப்பட்டுள்ளதா இல்லையா?" என்ற தலைப்பில் விவாதம் செய்ய கூடியிருந்த பொழுதில்.. ஆதரித்துப் பேசிய இவரது தனிப்பேச்சு அனைத்துத் தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது. நூற்றாண்டுகால அடிமை வரலாற்றை, பிரிட்டன் மக்கள் முன்னதாகவே அச்சுப்பிசாகமல் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும், கோகினூர் வைரத்தைவிட பல கோடி மதிப்புடையது. நாடாளுமன்ற கூட்டமொன்றில், கட்சி வேறுபாட்டைக் களைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே, "உங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் இந்திய மக்களின் மனச்சாட்சியை பார்க்க முடிந்தது" என்று பாராட்டிச் சிறப்பித்த அந்தப் பேச்சின் முழுவடிவம் இதோ..