
Sign up to save your podcasts
Or


இது ஸ்பெய்ன் நாட்டின் ஒரு பகுதியான கேட்டலானில்
சொல்லப்படும் கதை.
ஒரு அடுப்புக் கரி செய்பவர்(Charcoal Maker)
அவருடைய ராஜாவுக்கு சொன்ன புதிர்.
ராஜாவை எங்கே, எப்படி சந்தித்தார்?
என்ன புதிர் சொன்னார்? என்பது தான் கதை.
முந்திய கதையின் புதிருக்கான விடையும்
இதில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதில் 3 குட்டிக் கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
1.கடவுள் கொடுத்த ஒரே ஒரு வரம்:
2.சிங்க ராஜாவின் வாய் துர் நாற்றம்:
3.ஒரு ரூபாய்க்கு 4 பொருள்கள்:
ஒவ்வொரு கதை முடிவிலும், ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கும்.
விடையை நீங்கள் தான் சொல்ல் வேண்டும்......
இது ஒரு பிரன்சு கானடா (குபெக்) நாட்டுக் கதை.
டமபோசா நாட்டு இளவரசி ரொம்ப அழகானவள்.
ஆனால் அவளுக்கு மூக்கு நீளம்-ஒரு அடி நீளம்.
பிறந்த போதா? இல்லை-பின் எப்படி வந்தது?
விடை கதையில்............
இது ஒரு மேற்கு ஆப்ரிக்கா நாட்டுக் கதை:
கனு என்ற ஒரே பெயருள்ள இரண்டு பேரை பற்றிய கதை.
ஓரு கனு பூமியில் இருக்கும் அரசன். நல்லவன்
இன்னோரு கனு ஆகாயத்தில் இருக்கும் அரக்கன்..கெட்டவன்
அரசன் கனுவின் மகளை அரக்கன் கனு தூக்கி கொண்டு போய்விட்டான்
அரசன் கனு தன் நாட்டில் இருக்கலாம் என்று சொன்ன 4 "வெளியாட்கள்"
அரசன் மகளை மீட்டி கொண்டு வந்தார்கள்.
யார் இவர்கள்?...... எப்படி மீட்டார்கள்?
கதையை கேளுங்கள்..........
ஆதி கால முதலாக,சாத்தானின் குறிகோள்
மக்களை ஆசை காட்டி கெட்ட வழிகளில்
செல்ல வைத்து, கடவுளிடமிருந்து பிரிப்பது தான்.
இந்த கதையும் சாத்தானுக்கும் ஒரு கடவுள் பக்தனுக்கும்
நடக்கும் போராட்டத்தை பற்றியது.
யாருக்கு வெற்றி?
சாத்தானுக்கா ? பக்தனுக்கா?
கதையை கேளுங்கள்........
இது ஒரு சீன நாட்டுக் கதை.
ஒரே மாதிரி உருவமுள்ள
ஐந்து சீன சகோதரர்களை பற்றிய கதை.
மரண தண்டனை விதிக்கப்பட்ட மூத்த சகோதரனை
மற்ற நாலு பேரும் எப்படி காப்பாற்றினார்கள் என்பது கதை
இது ஒரு அரபு நாட்டுக் கதை.
ஜமீலா, ஒரு அழகான,புத்திசாலியன இளவரசி
3 இளவரசர்கள்-அப்துல்லா,கரீம்,ஜமால்-அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் பட்டார்கள்
ஜமீலாவுக்கு ஜமால் பேரில் ஆசை.
எப்படி அவள் ஆசை நிறைவேறிய து...........என்பது தான் கதை
அரபு நாட்டுக் கதை ஆயிற்றே-
மாய கண்ணாடி,பறக்கும் கம்பளம்,மாய பழம்-எல்லாம் வரும்
இது ஒரு ஆப்ரிக்க நாட்டு கதை.
வெகுளியான ஏழை அகிம்பாவுக்கு கடவுள் அருளால் கிடைத்த
மாய பொருள்களை ஏமாற்றி பறித்து கொண்ட பும்பாவிடமிருந்து
எப்படி அகிம்பா திரும்ப அடைந்தான்......
கதை இதோ........
இது ஜப்பான் நாட்டு கதை.ஒரு ஊரின் பிரபு,65 வயதானவர்கள்
உபயோகமில்லாதவர்கள் என்று சொல்லி
அவர்களை காட்டில் விடும்படி உத்தரவு போட்டான் .
பக்கத்து நாட்டு அரசன் புதிர்கள் போட்டு நாட்டை
கைப்பற்ற முயற்ச்சி பண்ணும் போது அந்த புதிர்களுக்கு
விடை அளித்து நாட்டை காப்பாற்றிய்து யார்?
ஒரு 67 வயதான பாட்டி..........அவர்கள் கதை
From the publisher's feed