
Sign up to save your podcasts
Or


னை ஒரு காலத்திலே எங்கள் வாழ்வியலுடன் ஒன்றித்துப் போயிருந்தது. இலங்கை தேசம் பல்லினப் பனை மரங்களின் இருப்பிடமாக, வாழிடமாகத் திகழ்ந்திருந்ததன் சான்றுகளாக காலனித்துவ கால நூல்களே இன்று எம் மத்தியில் எஞ்சியிருக்கின்றன.
தாளிப்பனையின் ஓலையை விரித்து வைத்தால் 12 தொடக்கம் 15 அடி ஆரையுள்ள அரை வட்டத்தை ஆக்கமுடியுமெனவும் அதன் பரப்பளவு அண்ணளவாக 150 சதுர அடிகளாகவிருக்கும் எனவும் காலனித்துவ கால நூல்களிலே குறிப்பிடப்படுகிறது. தாளிப்பனை மட்டையின் நடுப்பகுதியை உரலிலே இடித்து மாவாக்கி பணியாரம் செய்து உண்ணும் வழக்கம் இலங்கை மக்களிடம் காணப்பட்டதாகவும் அப்பணியாரத்தின் சுவை பாணின் சுவையை ஒத்ததாகவிருந்ததாகவும் தாவரவியல் பேராசிரியராகவிருந்த ஈதல் பேர்ள் ப்லட்டர் என்பவர் ‘பிரித்தானிய இந்தியா, சிலோனின் பனைத் தாவரங்கள்’ என்ற தனது நூலிலே குறிப்பிடுகிறார்.
அன்றொரு நாள் வரமாக, எங்கள் அன்றாட வாழ்வின் பல நூற்றுக்கணக்கான தேவைகளைப் பூர்த்திசெய்த தாளிப்பனைகளை இன்று காண்பதுவே அரிதாகிவிட்டது.
#talipotpalm #Peradeniya #botanicalgarden #SriLanka #MarianneNorth #palmtrees #FloraPanama #CoryphaUmbraculifera #தாளிப்பனை #வடக்கின்விருட்சம்
காலனிய காலத்திலிருந்தே “இலங்கையின் கிழக்குக்கரை” கிழக்கு மாகாணத்தை சாதாரணமாகக் குறிப்பிடப் பயன்பட்டு வந்த சொல் தான். ஆனால் அதை சமூகவியல் ரீதியில் வரையறுக்கப்பட்ட கலைச்சொல்லாக முன்வைக்கவேண்டிய தேவை ஐரோப்பிய அறிஞர்களுக்கு ஏற்பட்டிருந்தது. தமிழ் அறிஞர்கள் ஊன்றிக் கவனிக்கத் தவறிய, அல்லது மேலோட்டமாக மட்டும் தொட்டுச் சென்ற முக்கியமான இரு பண்பாட்டு அம்சங்களை “இலங்கையின் கிழக்குக் கரை”யில் அவர்கள் அடையாளம் கண்டார்கள்.
முதலாவது, பொதுத் தமிழ்ப் பண்பாட்டுக்கோளத்துக்குப் புறநடையாக பிராமணரோ வேளாளரோ அல்லாத சமூகங்கள் (அதாவது, முக்குவர், சீர்பாதர், திமிலர் சமூகங்கள்) இங்கு சாதிய அதிகார அடுக்கில் மேலே நீடித்து வந்திருக்கின்றன.
இரண்டாவது, இங்கு பெரும்பான்மையாக வாழ்ந்த தமிழர் மற்றும் சோனகர் ஆகிய இரு இனக்குழுமங்களிடம் மட்டும் இன்று அவதானிக்க முடிகின்ற தாய்வழிக் குல அடையாளங்களான “குடிகள்”
“கிழக்குக்கரை”யின் தனித்துவம், கேரளத்து மருமக்கட்தாயம் போல, இவை தாய்வழியில் தான் கடத்தப்படும் என்பது.
சைவக் கோவில்களின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாயுள்ள வண்ணக்கர், கணக்குப்பிள்ளை போன்ற பதவிகளும், பள்ளிவாசல்களின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாயுள்ள மரைக்காயர் பதவிகளும் குடிமுறைமையை அடிப்படையாகu வைத்தே இன்றும் தெரிவு செய்யப்படுகின்றன.
மலையகத் தமிழரிடையே படிப்பறிவு விகிதம் குறைவாக உள்ளதோடு, பாடசாலை செல்லாதோர் விகிதம், பாடசாலைக்கல்வியை இடைநடுவில் விட்டு விலகுவோரின் விகிதம் என்பன உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றன.
மலையக மாணவர்களின் குடும்ப பொருளாதார நிலைமை, பிள்ளைகளின் கல்வி தொடர்பான அவர்களது பெற்றோரின் அலட்சியப்போக்கு, பிள்ளைகளிடம் கல்வியில் ஆர்வம் போதாமை, இரண்டாம் நிலைக்கு அப்பால் கல்வியைத் தொடர்வதில் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்கள், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்களைக் கற்பிப்பதற்கு மலையகத் தமிழ்ப்பாடசாலைகளில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் போதாமை, பாடசாலைகளில் ஏனைய பௌதீக வளங்கள் குறைவாகவிருத்தல் போன்றவற்றாலேயே மலையக மாணவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ளனர்.
கடந்த காலங்களில் தோட்ட இளைஞர், யுவதிகளிடையே வேலையின்மை ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கவில்லை. பருவ வயதையடைந்த உடனேயே அவர்கள் தோட்டத் தொழிலாளராகப் பதிவுசெய்யப்பட்டதால் கல்விகற்பதிலோ, தமது வினைத்திறன்களை அபிவிருத்தி செய்து கொள்வதிலோ அவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், கடந்த சுமார் இரு தசாப்தங்களில் தோட்டப்புறங்களில் ஆரம்பக்கல்வியையும் கனிஷ்ட இரண்டாம் நிலைக்கல்வியையும் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளும், வாய்ப்புக்களும் அதிகரித்துள்ள நிலையில் அவர்களிடையே கல்வியறிவானது ஓரளவு உயர்ந்துள்ளதுடன், தொழில் தொடர்பான அவர்களது அபிலாசைகளும் மாற்றமடையத் தொடங்கியுள்ளன.
மலையக மாணவர்கள் பாடசாலைக்கல்வியில் மட்டுமன்றி தொழில்நுட்பக்கல்வி, தொழிற்பயிற்சி என்பவற்றிலும் முன்னேற்றமடைவதன் மூலமே சிறந்த தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஐடா ஸ்கடர் 1912 இல் பெண்களுக்கென தனியான ஒரு மருத்துவக்கல்லூரியை ஆரம்பிக்கும் எண்ணத்தை வெளியிட்ட போது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புக்களை எதிர்கொண்டார். அமெரிக்க மிசனரியினரும் ஆரம்பத்தில் அனுமதியளிக்கவில்லை. ஐடா ஸ்கடரின் பிரார்த்தனை 1918 இல் நிறைவேறியது.
ஆசியாவில் பெண்களுக்கான முதலாவது மருத்துவக் கல்லூரி 1918.08.12 அன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. அமெரிக்க மருத்துவ மிசனரிகள் மட்டுமன்றி, இங்கிலாந்தின் ஸெனனா மருத்துவ மிசனரியினரும் (Church of England Zenana Missionary Society) 19ஆம் – 20 ஆம் நுாற்றாண்டுகளில் இலங்கையின் வடபகுதியில் மருத்துவ சேவைக்காகத் தங்களது வாழ்வைத் தியாகம் செய்து அருந்தொண்டு ஆற்றியிருக்கிறார்கள்.
இணுவில் மக்லியோட் மகப்பேற்று மருத்துவமனையில் 40 ஆண்டுகளாக மகப்பேற்று மருத்துவராக அரும்பணியாற்றிய மருத்துவர் இசபெல்லா கேர் அம்மையார் பற்றி மிசனரி வரலாற்றாசிரியர்கள் அதிகம் எழுதவில்லை; உலகம் இவரது தன்னலமற்ற சேவையை அறியவில்லை. “கேர் அம்மா என்றும் இணுவில் அம்மா என்றும் யாழ்ப்பாணத்தவர்களால் அழைக்கப்பட்ட இவ் அம்மையாரது சேவையை யாழ்ப்பாணத்துப் பெண்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.”
#idascudder #johnscudder #scudderfamily #TheScudderAssociationFoundation #firstmedicalmissionary #missionaries #missionaryjaffna #Vellore #CMCWorld #Zenana_missions_SriLanka
ஜனாதிபதியொருவர் தனது பதவிக் காலம் நிறைவடையும் முன்னர் பதவியிலிருந்து விலகினால் அதைத் தொடர்ந்து இடம்பெறும் அரசியலமைப்புச் செயன்முறை என்ன என்பது தொடர்பில் இந்தக் காணொலியில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் விளக்கியுள்ளார்.
#SriLankaCrisis #GotabayaRajapaksa #SriLankaprotest #GotabayaResign #SLFPChairman #SriLanka #LK #SriLankaCrisis #SriLankaEconomicCrisis #SriLankaParliament #SriLankaNewPresident #RanilWickremesinghe #SriLankapresident #SriLankanpoliticalcrisis #nextpresidentsrilanka
'யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்' என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும் பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.
இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.
உள்ளூரில் கிடைக்கும் மூலப் பொருட்களை பெறுமதி சேர்த்து உற்பத்தி செய்வது எங்களுடைய நோக்கம்.
இடம்பெயர்ந்து சொந்த இடங்களுக்குத் திரும்பிய பின்பு நாங்கள் விவசாயத்தைத் தான் மேற்கொண்டோம். விவசாயம் இலாபகரமாக இல்லாமையால், மலியுற நேரங்களில் கிடைக்கின்ற காய்கறிகளை காயவைத்து சந்தைப்படுத்த தொடங்கினோம். அதனூடாக எங்களுடைய உற்பத்தியை விரிவுபடுத்தினோம்.
சிறுதொழில் உற்பத்தியாளர்களுக்கு உற்பத்தி செய்வோரோடு தொடர்பின்மையும், சரியான திட்டமிடலின்மையும் பெரும் பிரச்சினையாக உள்ளது.
எங்களுக்கும் இதே பிரச்சினை இருந்தது. ஆனாலும் நாங்கள் திரும்பத் திரும்ப முயற்சி செய்தோம். நாங்கள் பெரியளவில் இலாபத்தை சந்திக்காவிட்டாலும் தொழிலைத் தொடர்ந்து செய்யக்கூடிய நிலைக்கு வந்துவிட்டோம்.
#shopsmallbusiness #entrepreneur #organic #womeninbusiness #lovelocal #supportlocal #supportsmallbusiness #supportlocalbusiness #localbusiness #buylocal #drinklocal #covid #community #support
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் நாட்டில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி காரணமாக கொழும்பை மையமாகக் கொண்ட தொழிலாளர் அமைப்புகள் உருவாகின.
ஏ. ஈ. குணசிங்க என்ற ஆரம்பகால தொழிலாளர் தலைவர், நகர்ப்புற தொழிலாளர்களான துறைமுக, ரயில்வே , டிராம்வே தபால் துறை, கரத்தை (வண்டியில்) இழுப்பவர்கள், சலவைத் தொழிலாளர்கள், அச்சுத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களை ஒன்று திரட்டி வெற்றிகரமான போராட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் முன்னெடுத்தார்.
இத்தகைய தொழிலாளர் எழுச்சிகள் எந்தவிதத்திலும் மலைநாட்டு தோட்டத் தொழிலாளர் மத்தியில் பரவிவிடக்கூடாது என்பதில் தோட்டத் துரைமார்கள் மிகுந்த கரிசனை எடுத்துக்கொண்டனர்.
#realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம் #தோட்டத்தொழிலாளர்கள் #மலையகப்பெண்கள் #தேயிலைத்தோட்டம் #1000ரூபாசம்பளம்
தமிழர்கள் தங்களுடைய போராட்ட அரசியலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 70 வருடங்கள் எனலாம். இந்த எழுபது வருட காலத்தில் தமிழர்களின் அடிப்படைக் கொள்கையும் அதனை அடைவதற்கான போராட்ட வடிவங்களும் அணுகுமுறைகளும் பலவாறு மாற்றம் அடைந்து வந்திருக்கின்றன. இருந்தபோதிலும் இவை தமிழர்களுடைய அடிப்படை அரசியல் இருப்பை, அதனூடான அரசியல் உரிமைகளை எந்தளவுக்கு தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்திருக்கின்றன என்றொரு கணக்கெடுப்புக்கு வருவோமாயின் நிச்சயமாக மறை பெறுமானத்தில் தான் எமது விடை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
இது ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என்பது பற்றிய ஒரு கோட்பாட்டுப் புரிதலை நாம் இதுவரை செய்யாமல் நாம் தொடர்ந்து அதே வாய்ப்பாடுகளை கூறிக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் பழியைச் சுமத்திக் கொண்டு இன்னும் 100 வருட காலத்துக்கு இதே வகையான அரசியல் செய்வோமாக இருந்தால் எமக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை என்றொரு நிலையில் வந்து நிற்போம் என்பது புலனாகிறது. எமது அரசியல் தலைவர்கள் வரலாறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு அரசியல் செய்யாமல், தேர்தல் அரசியலையும் தங்களுக்கான சுயநல அரசியலையுமே செய்து வந்திருக்கிறார்கள்/ செய்து வருகிறார்கள்.
இவ்வாறான நிலையிலிருந்து எமது போராட்ட வரலாற்றையும் அதில் நாம் விட்ட தவறுகளையும் விமர்சன பூர்வமாக அறிந்து அவற்றிலிருந்து புதிய தத்துவார்த்த தளத்தை உருவாக்கி அதற்கான புதிய அணுகுமுறைகளை இன்றைய புத்திஜீவிகளும் அரசியல் தலைவர்களும் செய்யவேண்டியவர்களாக உள்ளோம். அந்த வகையில் அடையாள அரசியல் பற்றிய கோட்பாட்டுப் புரிதலில் இலங்கையினுடைய அடையாள அரசியலின் வரலாற்றுப் போக்கினையும் தமிழ் தலைவர்களின் அணுகுமுறைகளையும் விமர்சன நிலையில் நோக்குவதற்கு இக்கட்டுரை முனைகிறது.
#buddhism #srilakawar #racism #SriLankaEconomicCrisis #TamilGenocide #SrilankanTamils
அமெரிக்காவின் ஹமில்டன் ரிசர்வ் வங்கியானது தாங்கள் முதலீடு செய்த 257.5 மில்லியன் டொலர் மற்றும் முதலீட்டுக்கான வட்டியை செலுத்துமாறு கோரி இலங்கை மீது நியூயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு இலங்கை மீது தொடரப்படுவதற்கான காரணங்கள் மற்றும் இந்த வழக்கு இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் ஏற்படுத்தவுள்ள தாக்கம் தொடர்பில் இந்தக் காணொலியில் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் விளக்கியுள்ளார்.
#Srilanka #lka #debt #EconomicCrisisLK #CancelTheDebt #SriLankaDebt #SriLankaDefault #SriLankaEconomy #SriLankaEconomicCrisis #HamiltonReserveBank #DefaultLK #FuelCrisisLK #sovereignbond
From the publisher's feed