எழுநா

எழுநா

Download on the App Store

எழுநா episodes

  • வடக்கு – கிழக்கு மாகாணத்தினுடைய வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும் | வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வளங்களும் உள்ளூர் பொருளாதார அபிவிருத்தியும் | அமரசிங்கம் கேதீஸ்வரன்

    பிரதேச மட்ட வளங்களின் பயன்பாடு குறித்து உச்ச மட்ட கவனத்தில் கொள்ளாது தேசிய மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார முன்மொழிவுகளினாலேயே சமமற்ற பிராந்திய வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற நியாயத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. இலங்கையின் மாகாணமட்ட அபிவிருத்தியில், மேல் மாகாணம் அதீத முன்னிலை பெறுவதற்கு இதுவே காரணமாகியுள்ளது.

    மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46 சதவீதமான பங்களிப்பை தனி ஒரு மாகாணமாக இம் மாகாணம் வழங்கி வருகின்றது. வடக்கு மாகாணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 711,459 மில்லியன் ரூபாயும் கிழக்கு மாகாணம் 866,121 மில்லியன் ரூபாயும் பங்களிப்புச் செய்து வருகின்றது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10.47 சதவீதம் மட்டுமே. இதில் வடக்கு மாகாணம் 4.7 சதவீத பங்களிப்பையும் கிழக்கு மாகாணம் 5.77 சதவீத பங்களிப்பை மட்டுமே வழங்கி வருகின்றது.

    நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ¼ பங்கை கொண்டுள்ள இவ்விரு மாகாணங்களும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தினை மட்டுமே வழங்கி வருகின்றமை உள்ளூர் வளங்களின் முறையற்ற பயன்பாட்டுத்தன்மையை வெளிக்காட்டும் அல்லது முழுமை பயன்பாட்டையும் பெறவில்லை என்பதனை வெளிக்காட்டும் ஒரு குறியீடாகவே கருத முடிகிறது.

    வடக்கு-கிழக்கு மாகாணங்களின் வளங்கள் பற்றிய பகுப்பாய்வும் பொருளாதார உந்தூக்கத்தை தரக்கூடிய நிலம், காடு, காலநிலை, சனத்தொகை, விவசாயம், கால்நடைவளர்ப்பு, மீன்பிடி, பொருளாதார உட்கட்டமைப்புக்கள், சமூகஉட்கட்டமைப்புக்கள், சக்திவளம், நீரும் நீர் மூலங்களும் போன்ற முக்கியமான வளங்களின் கிடைப்பனவும் பயன்பாடும் குறித்த விடயங்களை ஆய்வுக்குரியதாக்க வேண்டியது அவசியமாகும்.

    #fishing #fishinglife #fishing #coastalcommunity #coastalcommunities #Jaffna #fishingcommunity #fishingcommunities #northernsrilanka #ruraleconomics #ruraldevelopment #socialimpact #socialgood #resources #poverty #foodsecurity #sustainabledevelopment #communitydevelopment #farming #livestock #poultryfarming

    11 min
  • மரச்செக்கு நல்லெண்ணெய்க்கே கேள்வி அதிகம் | உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் | க. தர்மேஸ்வரன்

    நான்காவது தலைமுறையாக இந்த தொழிலைச் செய்து வருகின்றோம். 

    எங்களுடைய உற்பத்திக்கான எள்ளை வடமத்திய மாகாணத்திலிருந்து தான் கூடுதலாகப் பெற்றுக்கொள்கின்றோம். யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் எள் எங்களுடைய உற்பத்திக்கு போதுமானதாக இல்லை.

    மரச்செக்கில் ஆட்டி எடுத்த நல்லெண்ணெய்க்கே கேள்வி அதிகமாக உள்ளது. அதனால் மரச் செக்கையே தற்போதும் பயன்படுத்துகின்றோம். 

    மரச்செக்கில் எண்ணெயின் தன்மை மாறாது. எண்ணெய் எவ்வித இரசாயன மாற்றத்துக்கும் உட்படாது. அதேநேரம் எங்களுடைய சவாலும் மரச்செக்குத் தான். அதில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உற்பத்தி செய்ய இயலாது.

    #sesameseeds #sesameoil #நல்லெண்ணெய் #உள்ளூர்உற்பத்தி #entrepreneurjaffna

    20 min
  • இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் கோழிப் பண்ணைத் துறையும் | இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம் | Dr. சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

    கால்நடை வளர்ப்பு கிராமியப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான கூறாகும். இலங்கையின் கால்நடை வளர்ப்பின் மிக முக்கியமான கூறுகளான மாடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பைப் பற்றிய தொடராக இது அமையப்போகிறது.

    கால்நடை வளர்ப்புப் பொருளாதாரத்தின் அடிப்படைகள், சவால்கள், தீர்வுகள் ஏனைய நாடுகளின் நிலைமைகளை ஒப்பீடு செய்தல் என இது அமையப்போகிறது. 

    மக்களின் மிக முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் கோழி வளர்ப்பு இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதையும் அதன் தாக்கம் எதிர்காலத்தில் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனையும் விளக்குவதாக முதலாவது கட்டுரைத் தொடர் அமையப்போகின்றது.

    சந்தையில் கோழி முட்டை ஐம்பது ரூபா வரையிலும் கோழி இறைச்சி ஆயிரத்து ஐநூறைத் தாண்டியும் விற்பனையாகிறது. சில இடங்களில் இன்னும் அதிகமாக இருக்கலாம். இந்தக் கட்டுரை மனிதனுக்கு புரதம் முதலான ஊட்டச்சத்துக்களை வழங்கும் மிக முக்கியமான உணவுகளான கோழியிறைச்சி மற்றும் முட்டையை தரும் இலங்கையின் கோழிப் பண்ணைத் துறை நாட்டின் பொருளாதார பின்னடைவின் காரணமாக சந்திக்கும் சவால்களை ஆராய்கிறது. 

    #ruraleconomics #ruraldevelopment #socialimpact #socialgood #resources #poverty #foodsecurity #sustainabledevelopment #communitydevelopment #farming #livestock #poultryfarming

    14 min
  • மதுவுக்குள் சிக்குண்ட மலையகம் : அடிமைப்படுத்தலின் நவீன உத்தி | கண்டி சீமையிலே - 2 | இரா. சடகோபன்

    17 ஆம் ,18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுகளில் அந்நிய ஆக்கிரமிப்பு வெறியர்கள் ஏகாதிபத்தியங்களாக எழுச்சி பெற்று உலகம் முழுவதையும் தம் காலடியில் போட்டு மிதித்து விடவேண்டும் என்று வேட்கை கொண்டிருந்தனர். பிரிட்டிஷ்காரன் என்ற மகா பாதகன் ஆப்பிரிக்கக் கண்டத்தை சின்னா பின்னப்படுத்திய பின்னர் ஆசியாவை நோக்கி படை திரட்டிக்கொண்டு வந்தான். 

    பிரிட்டிஷார் தாம் அடிமைப்படுத்திய மக்களிடையே அறிமுகப்படுத்திய மதுப் பழக்கத்திலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களும் ஏன் ஏனைய மக்களும் கூட இன்றுவரை மீறமுடியாது உள்ளது. இலங்கைப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் ஆரம்ப காலகட்டமான 1830 களில் இருந்து தொழிலாளர்களின் வதிவிட எல்லைப்புறங்களில் சாராயம் மற்றும் கள்ளுத்தவறணைகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. அரசாங்கம் சாராயத் தவறணைகளை ஆரம்பித்தவுடனேயே கள்ளச்சாராய விற்பனையும், எரிசாராய உற்பத்தியும் பெருந்தோட்ட பகுதிகளில் பல்கிப் பெருகின. 

    அரசாங்க அனுமதி பெற்ற சாராயக் கடைகளில் கிடைத்த சாராயத்தை விட மலிவு விலையில் கிடைத்தமையே இவற்றின் பெருக்கத்துக்கு காரணமாக இருந்தது. 1897ஆம் ஆண்டளவில் தோட்டங்களை அண்டிய பிரதான பாதைகளின் இரு மருங்குகளிலும் சாராயத் தவறணைகள் அமைக்கப்பட்டிருந்தன தொழிலாளர் என்ற மந்தைக் கூட்டத்தில் எந்தவிதமான எழுச்சிகரமான சிந்தனையும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் நீண்டகாலமாக மதுபோதை அடிமைத்தனத்தினை ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்கள் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். 

    #realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம் #தோட்டத்தொழிலாளர்கள் #தேயிலைத்தோட்டம் #educationinupcountry #arrack

    9 min
  • இலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாற்றையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்திக் காட்டும் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வுகள்- பகுதி 2 | இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள் | பேராசிரியர் பரமு. புஷ்பரட்ணம

    கட்டுக்கரையில் நுண்கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாகப் பெருங்கற்காலப் பண்பாடு தோன்றியுள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட இரு அகழ்வாய்விலும் இப்பண்பாடு பற்றிய ஆதாரங்களே அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை வடஇலங்கை வரலாற்றுக்கு சிறப்பாக இலங்கைத் தமிழர் வரலாற்றிற்குப் புதுவெளிச்ச மூட்டுவதாக உள்ளன. பெருங்கற்காலப் பண்பாடு  என்பது இறந்தவர்களுக்கான ஈமச் சின்னங்கள் பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டதால் தோன்றிய பெயராகும்.

    வட இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பெருங்கற்காலக் குடியிருப்பு மையமாகக் கட்டுக்கரை காணப்படுகின்றது. இதை அநுராதபுரத்திற்கு அடுத்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய குடியிருப்பு பிரதேசம் எனக் கூறலாம். 

    கட்டுக்கரைத் தொல்லியல் ஆய்விலேயே பெருங்கற்கால மக்களின் சமய நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் அதிகளவிலான  சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நாக வழிபாட்டுக்கு உரிய சான்றாதாரங்கள் மிகப்பெரிய அளவில் கிடைத்திருப்பது சிறப்பாக நோக்கத்தக்கது. 

    கட்டுக்கரை அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பெருங்கற்கால மட்பாண்டங்களில் சிலவகையான குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒரு குறியீடு சிந்துவெளி நாகரிக காலச் சிறப்புக் குறியீடாகக் காணப்படுகின்றது. 

    #கட்டுக்கரைஅகழ்வாய்வு #Kaddukkaraiarchaeologicalstudies #malvathuoya #Aruviyaru #kaddukkarai #kaddukkaraikulam #NorthernSriLanka #Universityofjaffna #Historicalheritage

    16 min
  • பேண்தகு விவசாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் | உணவு நெருக்கடி | கலாநிதி எஸ்.ஜே அரசகேசரி

    உணவு நெருக்கடிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் உணவு உற்பத்தியின் எல்லையை நாங்கள் இப்போது அடைந்திருக்கின்றோம் என்பதுதான் உண்மை. 

    உள்ளூரில் உள்ள உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணம் அறுவடைக்குப் பிந்திய இழப்பு அதிகரித்துள்ளமை தான். அதைவிட உள்ளூர் உற்பத்தியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற பொழுது உள்ளூரில் உணவு உற்பத்தி குறைகிறது. எங்களது பகுதிக்கு பொருத்தமில்லாதவற்றை நாங்கள் முயற்சி செய்கின்ற போது உணவு உற்பத்தி குறைகிறது. 

    விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளை விட இடைத்தரகர்களின் ஈடுபாடு அதிகமாக இருப்பதால் இயற்கையாகவே சந்தையிலே பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. 

    நீரை எப்படியாவது வழங்க வேண்டும் என்பது விவசாயிகளினுடைய கடமை. இதற்கு எரிபொருளிலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. 

    மக்கள் பிரச்சினை வருகின்ற போது தான் உற்பத்தி செய்வார்கள், பிரச்சினை முடிந்தவுடன் அந்த உற்பத்தியை விட்டு விடுவார்கள் என்ற நிலைமை மாற வேண்டும். தொடர்ந்து நாம் தன்னிறைவோடு வாழ வேண்டும் என்றால் நாம் வீட்டுத்தோட்டம் அல்லது தன்னிறைவு விவசாயத்தில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். 

    #srilanka #protests #economiccrisis #foodcrisis #foodinsecurity #hunger #community #endhunger #foodwaste #food #foodsecurity #foodbank #socialimpact #covid #giveback #poverty #charity #foodrescue #zerohunger #support #homelessness #feedthehungry #zerowaste #communitysupport #endpoverty #selfrelianteconomy

    20 min
  • திரிகடுகம் | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம்

    கி.பி.15ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செகராஜசேகரன் என்னும் பெயருடன் நல்லூரில் இருந்து ஆட்சிசெய்த மன்னன் ஒருவனே செகராசசேகரமாலை என்னும் சோதிடநூலும் செகராசசேகரம் என்னும் வைத்தியநூலும் தோன்றக் காரணமாயிருந்தான் என்பதற்கான வரலாற்றுச்சான்றுகள் உள்ளன.

    செகராசசேகரம் என்னும் மருத்துவ நூலின் ஒரு சில பாகங்களே அச்சில் வெளிவந்துள்ளன. செகராசசேகரத்தின் சிலபகுதிகள் நூல் உருப்பெறவில்லை.

    அதிர்ஷ்டவசமாக 'செகராசசேகரத்துக்குரிய இரசவர்க்கம்' என்னும் பகுதியைக் கொண்ட ஏட்டுப்பிரதி பாரம்பரிய மருத்துவர்களான எமது மூதாதையரிடம் இருந்து எமக்கு வந்துசேர்ந்துள்ளது. உடலுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும் மருந்துப்பொருள்களின் குணங்களை எடுத்துரைக்கும் இந்தப்பகுதி வெண்பாக்களால் ஆனது.

    நூற்றி எட்டுப்பாடல்கள் மாத்திரமே எமக்குக் கிடைத்த ஏட்டுச்சுவடிகளில் காணப்படுகின்றன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றின் பெயர் திரிகடுகம்.  சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூன்று மூலிகைகளை உள்ளடக்கியது திரிகடுகம் என்னும் ஆயுள்வேத மருந்து.

    ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே திரிகடுகம் என்னும் மருந்து தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான ஒன்றாக இருந்துள்ளது என்பதை ஊகிக்கமுடிகின்றது.

    #Tirikaṭukam #ginger #milaku #pepper #thippili #Longpepper #ayurveda #ayurvedalifestyle #health #ayurvedic #healthylifestyle #ayurvedalife #wellness #ayurvedaeveryday #ayurvedicmedicine #natural #meditation #vegan #organic #fitness #ayurvedafood #சித்தமருத்துவம் #சித்தர்கள் #திரிகடுகம் #சுக்கு #மிளகு #திப்பிலி #பதினெண்கீழ்க்கணக்கு


    12 min
  • ஆபிரகாம் லிங்கனது மறைவும் நேத்தன் உவோட்டின் நினைவுகளும் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்

    1865 ஆம் ஆண்டு ஏப்பிரல் 14 ஆம் திகதி அமெரிக்காவின் 16 ஆவது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்,வோசிங்டன் டி.சி. யிலுள்ள போட்சினது நாடக அரங்கிலே ஜோன் உவில்க்ஸ் பூத் என்ற நடிகரால் சுடப்பட்டார். மறுநாள் லிங்கனது உயிர் பிரிந்தது. ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்ட அன்று யாழ்ப்பாணத்தில் பிறந்தவரும் மருத்துவர் நேத்தன் உவோட்டின் இளையமகனுமாகிய மருத்துவர் சாமுவேல் ரெட் உவோட்டும் இந்த நாடகத்தைப் பார்வையிட, போட்சினது நாடக அரங்கில் பார்வையாளர் வரிசையில் இருந்தார். 

    1846 இல் யாழ்ப்பாணத்தை கொலரா நோய் மிகக் கடுமையாகத் தாக்கியது. 10000 பேர் வரையில் கொலரா நோயினால் உயிரிழந்தார்கள். மருத்துவர் நேத்தன் உவோட் 13 வருடங்கள் யாழ்ப்பாணத்திலே சேவையாற்றினார். 1846 இல் நேத்தன் உவோட்டும் அவரது மனைவியும் நோய்வாய்ப்பட்டனர். இதனால் அமெரிக்காவுக்குத் திரும்பினர். 1859 இல் உவோட் நோயிலிருந்து முற்றாக விடுபட்டார். இதனால் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று கடமையாற்ற விரும்பி பிறதேசங்களுக்கு தொண்டர்களை அனுப்பும் அமெரிக்க மிசன் சங்கத்துக்கு விண்ணப்பித்தார். 

    மருத்துவர் உவோட் மனைவியுடன் 1860 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி போஸ்ரன் துறைமுகத்திலிருந்து ‘கடலரசன் (Sea-King’) என்ற பாய்மரக் கப்பலில் யாழ்ப்பாணம் நோக்கிய தனது 2 ஆவது பயணத்தை ஆரம்பித்தார். கடற்பயணம் ஆரம்பமாகி 3 வாரங்கள் கழிந்த நிலையில் உவோட்டுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. கடலிலே மருத்துவர் உவோட்டின் உயிர் பிரிந்தது. 

    #abrahamlincoln #americanboardofcommissionersforforeignmissions #ABCFM #idascudder #johnscudder #scudderfamily #TheScudderAssociationFoundation #firstmedicalmissionary #missionaries #missionaryjaffna #Vellore #CMCWorld #Zenana_missions_SriLanka #JaffnaCollege

    9 min
  • டொனமூர்க் குழுவினரின் சிபார்சுகளும் தமிழ் தலைவர்களின் நிலைப்பாடும் | இலங்கையில் அடையாள அரசியல் | கலாநிதி சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம்
    “பிரதானமாக, வடமாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் காணப்படும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் நிலை எமக்கு மிகுந்த கவலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்கட்கென எவ்வகையான ஒரு பிரதிநிதித்துவத்தையேனும் ஏற்படுத்துதல் வேண்டும் என்பது பற்றியே நாம் இங்கு ஆராய்தல் வேண்டும். நாம் காட்டிய பொதுக்காரணங்களைத் தவிர்த்தாலும், அம்மக்கட்கு வாக்குரிமை அளிக்கப்படுதலும், அவர்கட்குச் சமமான போதிய கல்வி வாய்ப்புக்கள் அளிக்கப்படுதலுமே அவர்களின் நிலையைச் சீர்த்திருத்துவதற்கான வழிகள் என்று நாம் கருதுகிறோம்.” (டொனமூர் அறிக்கை)
    எமது சுதந்திரப் போராட்ட தலைவர்களை விட எம்மை பொருளாதார ரீதியாகச் சுரண்டி ஆட்சி செய்த காலனித்துவ வாதிகள் மக்களின் அரசியல் சுதந்திரத்தையும் சமூகவிடுதலையையும் கூடுதலாக நேசித்துள்ளார்கள் எனலாம். இது போன்றதொரு நேசிப்பை யாழ்ப்பாண மாணவ காங்கிரசிடமும் காணக்கூடியதாக இருக்கின்றது.
    1920ம் ஆண்டில் மானிங்கினால் அறிமுகப்படுத்தப்பட்ட இனவாரிப் பிரதிநிதித்துவத்தினை, பிரித்தானியரின் பிரித்தாளும் நடவடிக்கை இது என பல அரசியல் அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.இவ்வாறு பிரித்தாளும் தந்திரங்கள் பற்றி சிலாகித்துப் பேசுவோர் இவ்வாறு பிரித்தாள்வதற்கு அடிப்படையாக அமையும் அந்த அடையாளங்கள் பற்றி மௌனம் காக்கின்றனர். அல்லது அவற்றை மூடி மறைக்க முற்படுகின்றனர்.
    #buddhism #srilankawar #racism #SriLankaEconomicCrisis #TamilGenocide #SrilankanTamils #DonoughmoreConstitution #constitutionlk
    27 min
  • சுயபுலம்பெயரிகள்: இலங்கைக்கு தாமே வந்த தோட்டத்தொழிலாளர்கள் | கண்டி சீமையிலே - 2 | இரா. சடகோபன்

    இலங்கையின் மத்திய மலைநாட்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக தொழில்புரிய வந்தவர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதி வரை இந்த நாட்டில் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. இவர்கள் வேலை இல்லாத காலப்பகுதிகளில் தமிழ்நாட்டின் தமது சொந்த கிராமங்களுக்கு சென்று சிறிது காலம் தம் உறவினருடன் இருந்துவிட்டு மீண்டும் இங்கே வந்தனர்.

     இவ்விதம் மீண்டும் வருபவர்கள் “பழையல்கள்” (பழையவர்கள்) என அழைக்கப்பட்டனர். பழையவர்கள் மீண்டும் தமது தோட்டங்களுக்கு வந்தபோது மேலும் பல உறவினர்களையும் ஊரவர்களையும் தம்முடன் கூட்டிக்கொண்டு வந்தனர். இவர்கள் ஒரு கங்காணியின் கீழ் வந்தவர்களாக கருதப்படாமல் சுயமாக புலம்பெயர்ந்தவர்கள் எனக் கருதப்பட்டனர். வேலைதேடி இலங்கை நாட்டுக்குள் நுழைபவர்களுக்கு, இலங்கைத் தேயிலை தோட்டங்களில் உடனடியாக வேலை வழங்கப்படும் என்று உறுதிமொழி இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு எப்போதும் விரும்பியபடி வந்து போகலாம் என்ற விதத்தில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன. 

    1923 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு திருத்தத்தின் பின்னர் இந்தியர் சார்பாக குரல் கொடுக்க இரண்டு அங்கத்தவர்கள் சட்டசபைக்கு நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் பிற்காலத்தில் மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் முதல் தொழிற்சங்கவாதியாக பிரபலமடைந்த கோதண்டராமையர் நடேசய்யர் ஆவார். சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட 2 இந்திய வம்சாவழி சட்டசபை அங்கத்தவர்களும் கொழும்பில் வாழ்ந்த இந்திய வர்த்தகர்களின் நலனின் அக்கறை செலுத்துவதற்காகவே நியமிக்கப்பட்ட போதும் நடேசய்யர் முற்றிலும் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினைகள் பற்றி குரல் கொடுப்பதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் 

    #realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம் #தோட்டத்தொழிலாளர்கள் #மலையகப்பெண்கள் #தேயிலைத்தோட்டம் #1000ரூபாசம்பளம் #educationinupcountry

    10 min

About எழுநா

From the publisher's feed

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.