எழுநா

எழுநா

Download on the App Store

எழுநா episodes

  • இலங்கையில் தேயிலையின் தந்தை ‘ஜேம்ஸ் டெய்லர்’ | கண்டி சீமை - 2 | இரா. சடகோபன்

    இலங்கையில் தேயிலைத் தொழில்துறை அதன் நூற்றி ஐம்பது வருடகால வரலாற்றைப் பதிவு செய்து கொண்ட போது (1867- 2017), தேயிலைத் தொழிலின் தந்தையெனப் போற்றப்படும் ஜேம்ஸ் டெய்லரும் கௌரவிக்கப்பட்டு நினைவு கூரப்பட்டார். 

    ஜேம்ஸ் டெய்லரும் ஏனைய தோட்டத்துரைகளை போலவே ஒரு தோட்டத் துரையாக இருந்தவர் தான். ஆனால் ஒரு சராசரி தோட்டத் துரையாக இருந்து விட்டு போய் விடாமல் தனது மிகக் கடின உழைப்பால் தேயிலைப் பொருளாதாரம் உருவாகக் காரணமாக இருந்து, இந்த நாட்டின் வரலாற்றில் நிரந்தரமான ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர். இவர் தனது தோட்டத்தில் கூலி வேலை செய்த தொழிலாளர்கள் மீது அன்பும் பரிவும் காட்டியதனால் அவர்கள் அவரை “சாமித்துரை” என்ற பட்டப்பெயர் வைத்து அவரைப் போற்றிப் புகழ்ந்தனர். இலங்கையின் மலைநாட்டுப் பகுதியில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான கோப்பித் தோட்டங்கள் உருவாகியிருந்தன.

     அக்காலத்தில் ஜேம்ஸ் டெய்லரின் தோட்டம் எல்லாவற்றுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது. ஒவ்வொரு நாளும் அவரையும் அவரது தோட்டத்தையும் பார்த்துவிட்டுப் போகவென பல விருந்தாளிகள் வந்த வண்ணமிருந்தனர். அப்படி வந்து போனவர்கள் தோட்டத்தில் அவரது செயற்பாடுகளைப் பார்த்துவிட்டு அவர்களும் தமது தோட்டங்களில் ஜேம்ஸ் டெய்லரின் செயல்முறைகளைப் பின்பற்றத் தொடங்கினர். 

    #realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம் #தோட்டத்தொழிலாளர்கள் #தேயிலைத்தோட்டம் #educationinupcountry #arrack

    11 min
  • 18ம் நூற்றாண்டில் வடஇலங்கையின் வேளாளர்கள் : நிலமும் உழைப்பும் சமூக உறவுகளும் – பகுதி 3 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம்

    'யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்' என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது.

    இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

    19 min
  • கடலோர வேட்டுவ சமூகங்களுள் காணப்படும் குடிவழமைகள் | வேடர் மானிடவியல் | பத்திநாதன் கமலநாதன்

    ஒவ்வொரு சமூகக்குழுக்களும் தமக்கு  வாலாயமான பண்பாட்டு நகர்வுகளுள் பல முன்னெடுப்புக்களை, கால வர்த்தமானங்களுக்கு அமைவாக ஈடேற்றிக் கொண்டுள்ளமையே வரலாறாகின்றது. அவ்வாறான நிலைப்பாடானது இயல்பான முறையிலும், வலிந்து புகுத்தப்பட்ட வடிவிலும்  குறித்தவொரு சமூகத்தில் தாக்கம் செலுத்தியே வந்துள்ளது. இதற்கு தீவின் ஆதிப்பிரஜைகளான வேடரும் விதிவிலக்கல்லர்.

    வேடர்கள் என்போர் இன்று நாம் காணுகின்ற ஈழத்து சமூகங்களில் ஆதிப்பிரசைகள் எனக் கொள்ளப் போதிய சான்றுகள் உள்ளன. ஆரியக் குடியேற்றங்களிலும் சரி, பௌத்த மதப் பரம்பலிலும் சரி அவற்றின் திடீர்ப் புனைவு நிலைக்குள் உள்வாங்கப்படாமல், சவால் விட்ட  பெருமளவு இயக்கரும் நாகரும் வேடர் என்ற சமூக அமைப்பினுள் இருந்தே வந்தவர்கள் என்பதே நிதர்சனத் தெளிவு.

    தீவின் கிழக்குக் கரையோரத்தினை அண்டியே பெரும்பாலான கடலோர வேட்டுவக் குடிகள் இன்றும் காணப்படுகின்றனர். ஆரம்ப கால கடலோர வேட்டுவக்குடிகளின் ஆதிக் கிராமமாக இன்று மட்டக்களப்புத் தமிழகத்தின்  செங்கலடிப் பிரதேச பிரிவுக்குள் காணப்படுகின்ற “களுவன்கேணி” எனும் மீன்பிடிக்கிராமமானது திகழ்கின்றது.

    #aboriginalculture #indigenouspeoples #tamil  #SriLanka #veda #historysrilanka #biodiversity #பழங்குடிகள் #பூர்வகுடிகள் #traditional_medicine_healing_methods #ayurveda #ceylon

    15 min
  • இரசவர்க்கம் – திரிபலை | யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம் | முனைவர் பால.சிவகடாட்சம்

    கடுக்காய்த்தூள், தான்றிக்காய்த்தூள், நெல்லிக்காய்த்தூள் மூன்றையும் சம அளவில் கலந்து தயாரிக்கப்படும் திரிபலை சூரணம் (Triphala churna) ஆயுள்வேத மருத்துவர்களின் கைகண்டமருந்தாகும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இம்மருந்து பயன்படுத்தப்படுகின்றது. திரிபலைச் சூரணத்தைத் தொடர்ந்து எடுத்துவந்தால் இரத்தத்தில் உள்ள கொலெஸ்றோலைக் குறைக்கமுடியும்.

    திரிபலை சூரணம் இருதயம் ஈரல் சமிபாட்டுத்தொகுதி கண்கள் போன்ற உடல் உறுப்புக்கள் பலவற்றுக்கும் நன்மை பயப்பதுடன் உடல் நிறையைக் குறைக்கவும் உதவுகிறது. கண்ணில் ஏற்படக்கூடிய வியாதிகளைத் தடுத்து கண்களுக்கு வலுவூட்டும் மருந்தாக திரிபலைச் சூரணம் கருதப்படுகிறது.

    கடுக்காய் - இழையங்களுக்கு வலுவும் ஊட்டமும் கொடுப்பதன்மூலம் கடுக்காய் பெருங்குடல், ஈரல், நுரையீரல் என்பவற்றுக்கு வலு ஊட்டுகிறது. இது ஒரு பயன் தரக்கூடிய அதே சமயம் பாதுகாப்பான மலமிளக்கி (laxative) யாகும். சமிபாட்டுக்குடலில் சேரக்கூடிய இயற்கையான நச்சுப்பொருட்களை அகற்றிக் குடலைச்சுத்தம் செய்கிறது. எந்தவிதமான பக்கவிளைவும் இன்றி இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.

    நெல்லிக்காய்த்தூளைத் தயிருடன் சேர்த்து உண்டால் சீதபேதி (dysentery) எனப்படும் வயிற்றோட்டம் குணமாகும். இந்தக்குடிநீரைச் சர்க்கரை சேர்த்துக்குடித்தால் தலைச்சுற்று குணமாகும். வயிற்றில் மேலதிக அமிலச்சுரப்பினால் ஏற்படும் நெஞ்செரிவு மற்றும் குடற்புண் என்பவற்றுக்கு நெல்லி பயன் தரக்கூடிய மருந்து என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லிக்காய்த் தூளில் குடிநீர் காய்ச்சிக்குடித்தால் வயிற்றில் உள்ள அமிலத்தினால் ஏற்படும் நெஞ்செரிவு மற்றும் அல்சர் வராமல் தடுக்கலாம்.

    தான்றிக்காயும் அதன் பருப்பும் பல்வேறு ஆயுள்வேதத் தயாரிப்புகளில் இடம்பெறுகின்றன. கண்வியாதிகள் சிலவற்றுக்குப் பயன்படுத்தப்பெறும் மருந்துத் தயாரிப்புக்களில் தான்றிக்காய் முக்கிய இடம்பெறுகின்றது. விதையில் இருந்துபெறப்படும் எண்ணெய் கூந்தலைச் செழிக்கவைக்கின்றது. மூட்டுவாதத்துக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

    #சித்தமருத்துவம் #சித்தர்கள் #பதினெண்கீழ்க்கணக்கு #திரிபலைசூரணம் #திரிபலை #triphala #ayurveda #yoga #organic #immunity #wellness #ayurvedicmedicine #ayurvedatips #ayurvedalifestyle #கடுக்காய் #நெல்லிக்காய் #தான்றிக்காய் #EyeCare #SkinProtectant #triphalapowder


    9 min
  • சிங்கோனா: திடீர் எழுகையும் வீழ்கையும் | கண்டி சீமையிலே - 2 | இராமையா சடகோபன்

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தம் வரை இலங்கையின் பொருளாதாரத்தில் சக்கரவர்த்தி என கோலோச்சிய கோப்பி பல தனவந்தர்களையும் வங்கிகளையும் கூட வங்குரோத்து ஆக்கிவிட்டு அகாலத்தில் மாண்டு போனது. அதன் புதைகுழியிலிருந்து பீனிக்ஸ் பறவை என தேயிலை என்ற கரும்பச்சை நிறச்செடி புறப்பட்டு வந்தது என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 

    இதன் ஒரு விளைவாக 1860 ஆம் ஆண்டளவில் ஒருதொகை சிங்கோனா விதைகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கையின் பேராதனைத் தாவரவியல் பூங்காவின் பணிப்பாளராக அப்போது செயற்பட்டு வந்த கலாநிதி ஜி. எச். துவாய்ட்சுக்கு அனுப்பப்பட்ட இந்த விதைகளை, அவர் பரீட்சித்துப் பார்ப்பதற்காக நுவரெலியா, ஹக்கல பூங்காவின் பொறுப்பாளர் மெக்னிகோல் (maknicall) என்பவருக்கு அனுப்பி வைத்தார். 

    கோப்பிச் செய்கையின் அழிவால் பாதிக்கப்பட்ட பல பெருந்தோட்ட சொந்தக்காரர்களும் சிங்கோனா, கரும்புத் தோட்டம், றப்பர், கொக்கோ போன்ற வேறு பயிர்களை நாடிச் சென்றனர். இதே காலப்பகுதிகளில் கோப்பியின் இடத்துக்கு தேயிலையை பிரதியீடாக கொண்டு வந்து விட வேண்டும் என்று பலரும் பல பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்த போதும் அவை அநேகமாக தோல்வியிலேயே சென்று முடிவடைந்தன. 

    கோப்பியைத் தொடர்ந்து சிங்கோனாவே அதிகம் லாபம் தரும் பயிர்ச்செய்கையாக இருந்தது என பலரும் கருதினர். தேயிலைக் கைத்தொழிலின் தந்தை என்று வர்ணிக்கப்படும் ஜேம்ஸ் டெய்லர் கூட லூல் கந்துரா என்ற தனது முதல் தேயிலைத் தோட்டத்தில் சிங்கோனாவையே பயிரிட்டு அறுவடை செய்தார். 

    #realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம் #தோட்டத்தொழிலாளர்கள் #தேயிலைத்தோட்டம் #educationinupcountry #arrack #cinchona

    10 min
  • பசியும், பிணியும் போக்கும் அரிசி | மாறுபாடில்லா உண்டி | தியாகராஜா சுதர்மன்

    தாவரப் பொருட்களில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் பிரதான உணவாக நெல், குரக்கன், தினை, வரகு, சாமை போன்ற தானியங்களே அமைந்துள்ளன. இவற்றிலும் நெல்லில் இருந்து பெறப்படும் அரிசி, அரிசி மா என்பன பிரதான உணவு வகைகளில் முதன்மையாக இருக்கின்றன. 

    பொதுவாக நெற்பொரியானது உணவாகப் பயன்படுத்தப்படாவிடினும் நோய்நிலைகளில் முக்கியமாக குழந்தைகள், சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்றது. காய்ச்சல், வாந்தி, கழிச்சல் போன்ற நிலைகளில் உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கவும், காய்ச்சலினைக் குறைக்கவும் வீடுகளிலேயே நெற்பொரியினை அவித்து, அதன்மூலம் வரும் நெற்பொரித் தண்ணீரைக் கொடுப்பது நமது பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றாகும். 

    யாழ்ப்பாணத்தில் புளிக்கஞ்சியானது காய்ச்சல் உள்ளபோது, நோய்கள் வந்து மாறியபின், உடல் அசதி ஏற்படும்போது கொடுக்கப்படுகின்றது. இது உடலில் பசியைத் தூண்டுவதுடன், வியர்வையையும் உண்டு பண்ணுகின்றது.

     நோய்நிலைகளில் வாயில் உணவு உட்கொள்ளமுடியாத நிலைகளில் புளிக்கஞ்சி வாய்க் கைச்சலை இல்லாது செய்கின்றது. புனற்பாக கஞ்சி தீவிர நோய்நிலைகளில் நோய்க்குப் பத்தியமாகக் கொடுக்கக்கூடியது. கஞ்சியை மீள மீள வடித்து நீரினை வெளியகற்றி, சோறு நன்றாகக் கரைந்து நீராக வரும்வரை மீள மீள புதிதாக நீர்விட்டு காய்ச்சி எடுத்து நீராகாரமாக வழங்கப்படும் கஞ்சி ஆகும். இதனை சித்தமருத்துவம் “தாரக பத்தியம்” என்கிறது. 

    #ayurveda #ayurvedalifestyle #health #ayurvedic #healthylifestyle #ayurvedalife #wellness #ayurvedaeveryday #ayurvedicmedicine #natural #meditation #healthyfood #vegan #organic #fitness #ayurvedafood #சித்தமருத்துவம் #சித்தர்கள் #தற்சார்பு

    24 min
  • தமிழ் அடையாளத்தினூடாக யாழ். உயர்வர்க்க நலன் பேணல் | இலங்கையில் அடையாள அரசியல் | கலாநிதி சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம்

    யாழ். உயர்வர்க்கம் தமது நலன்களுக்காக தமிழ்த் தேசிய உணர்வினையும் அவ்வடையாளத்தினையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்துள்ளதை இலங்கை அரசியல் வரலாறு எடுத்துக் காட்டுகின்றது.

    சிங்களத் தேசிய வாதம் தமிழர்களையும் காலனித்துவ ஆட்சியாளர்களையும் மிகவும் தந்திரோபாய ரீதியில் கையாண்டு தமிழ் தேசிய வாதத்தினை முறியடிப்பதிலும் தமது தேசிய வாதத்தினை வளர்த்தெடுப்பதிலும் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டு வந்திருப்பதை வரலாறு முழுக்க அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் டொனமூர் அரசியல் திட்டம் சிங்களத் தேசிய வாதத்துக்கு கிடைத்த பெரும் கொடை எனலாம்.

    இனவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கேட்டு ஒற்றைக்காலில் நின்று குரலெழுப்பிய தமிழ்த் தேசியவாதிகள் தமக்கு அளிக்கப்பட்ட பதவிகளுக்குள் கட்டுப்பட்டு அமைச்சரவைக்கும் டொனமூர் அரசியலமைப்புக்கும் தேசாதிபதிக்கும் விசுவாசமானவர்களாக விளங்கினார்கள். தமக்குக் கிடைத்த பதவிகள் மூலம் தேசாதிபதியின் நம்பிக்கையினைப் பெற்று வடகிழக்குத் தமிழர்களுக்கான ஆட்சியுரிமையினை பெற்றுக்கொடுப்பதற்கான எந்தவொரு செயலையும் இவர்கள் முன்னெடுக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். இதனை சந்தர்ப்பவாத தமிழ்த் தேசியத்தின் வெளிப்பாடாகக் கொள்ளமுடியும்.

    #buddhism #srilankawar #racism #SriLankaEconomicCrisis #TamilGenocide #SrilankanTamils #DonoughmoreConstitution #constitutionlk

    30 min
  • யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை அழித்தல் | மரபுரிமைகளை பறைதல் | பாக்கியநாதன் அகிலன்

    ஓகஸ்ட் 2021 இல் எழுதப்பட்ட இக்கட்டுரை அக்காலப் பகுதியில் வெளியான மாநகர முதல்வரின் நாவலர் மண்டபம், ஆஸ்பத்திரி வீதி தொடர்பான கருத்துக்கள் மீதான உரையாடல் ஆகும்.

    14 min
  • பெருந்தோட்டத் தமிழ்மக்களின் சமூக அபிவிருத்திக்கு உந்துதல் அளிக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்குதல் | மலையகம் : சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் | பேராசிரியர் முத்துவடிவு சின்னத்தம்பி

    இலங்கையின் பெருந்தோட்டச் சமூகமானது நிறைவேற்றப்படாத பல மனிதத்தேவைகளையும், தரங்குன்றிய ஒரு வாழ்க்கைமுறையையும் கொண்டதாக சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்துள்ளது. நாட்டின் ஏனைய சமூகங்களிலிருந்து இச்சமூகத்தை தனிமைப்படுத்திவைத்த பல்வேறு வரலாற்று ரீதியான காரணங்களினாலேயே அது இந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

    தோட்டமக்களின் சமூகஅபிவிருத்திக்கும் சமூகஅணிதிரட்டலுக்கும் பங்களிக்கும் இன்னொரு முக்கிய குழுவினர் உள்நாட்டு – வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களாகும்.

    சமூக அணிதிரட்டலுக்கு ஒரு சமூகத்தில் உள்வாரியானதும் வெளிவாரியானதுமான இருவிதமான காரணிகள் பிரச்சினைகளை உருவாக்கலாம்.

    தோட்டங்களிலே காணப்படும் இறுக்கமானதும், படிமுறையானதுமான முகாமை அமைப்பு ஆரம்பகாலந்தொட்டே தோட்டமக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்துள்ளது.

    பெருந்தோட்டங்களின் ஆரம்பகாலங்களில் காலனித்துவ ஆட்சியும், அதனைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக உற்பத்தியை மையமாகக்கொண்ட ஒரு அமைப்பில் தனித்துவமான ஒரு கலாசாரத்தைக் கொண்டதும், மூடியதுமான அவர்களது வாழ்க்கைமுறையும் அவர்களது மனப்பாங்குகளில் பெரும் செல்வாக்கு செலுத்தின. இம்மக்களிடையே அர்த்தமுள்ள சமூக அபிவிருத்தி ஏற்படவேண்டுமாயின் இந்த மனப்பாங்குகளில் மாற்றங்கள் ஏற்படுவது இன்றியமையாததாகும்.

    பெருந்தோட்டமக்களின் சமூக அபிவிருத்திக்கு வரையறைகளை அல்லது தடைகளை ஏற்படுத்தும் பல்வேறு காரணிகளை இனங்கண்டு, அவற்றை அகற்றி அல்லது வலுவிழக்கச்செய்து அம்மக்களின் சமூகஅபிவிருத்திக்கு உந்துதல் அளிக்கக் கூடிய ஒரு சமூக – கலாசார – பொருளாதார சூழலை உருவாக்குவதே அம்மக்களிடையே சமூக அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான சிறந்த வழியாகும்

    #realestate #upcountry #kandy #upcountrysrilanka #TeaWorkers #upcountrypoliticians #teaplantation #teaestates #teaharvester #மலையகம்  #தோட்டத்தொழிலாளர்கள் #மலையகப்பெண்கள்  #தேயிலைத்தோட்டம்  #1000ரூபாசம்பளம்

    28 min
  • தமிழ் மக்களின் அரசியல் இலக்கும் வழிவரைபடமும் | தமிழ் அரசியல் இலக்கும் வழி வரைபடமும் | சி. அ. யோதிலிங்கம்

    இனப்பிரச்சினை என்பது தமிழ் மக்கள் ஒரு தேசமாக அல்லது தேசிய இனமாக இருப்பது அழிக்கப்படுவதே! அதாவது தேசம் அல்லது தேசிய இனத்தின் தூண்களாக இருக்கின்ற நிலம், மொழி, பொருளாதாரம், கலாச்சாரம், மக்கள் கூட்டம் என்பன அழிக்கப்படுவதே! 

    இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது என்ற சிங்கள மக்களின் ஏகோபித்த கருத்து நிலையை நடைமுறைப்படுத்துவதற்காகவே அவை அழிக்கப்படுகின்றன.

    ஒற்றையாட்சிக் கட்டமைப்பும் அதனூடாக சிங்கள மக்களிடம் மட்டும் உள்ள அரசியல் அதிகாரமும் இவ்வழிப்புக்கு கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

    தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பது இவ்வழிப்பிலிருந்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும். அதற்கு கோட்பாட்டு ரீதியாக தமிழ் மக்களை ஒரு தேசமாக அல்லது தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும். தமிழ் மக்களின் இறைமையும் அதன் அடிப்படையிலான சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

    இச்சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிப்பதற்கான அரசஅதிகாரக் கட்டமைப்பு உருவாக்கப்படல் வேண்டும். இக்கட்டமைப்பு உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டிக்கட்டமைப்பாக இருத்தல் வேண்டும்.

    #tamilethnicity #tamilar #தமிழ்த்தேசியம் #Eelam #justice4tamils #SriLankatamil #Tamilnationalism #Federalism #tna #samanthan #சமஸ்டி #சுயநிர்ணயஉரிமை #இறைமை #தமிழ்தேசம் #Eelam #EelamTamils #LTTE #Jaffna #SL #LKA

    22 min

About எழுநா

From the publisher's feed

2012 இல் உருவான எழுநா ஈழத்துத் தமிழியல் ஆய்வுப் பரப்பில் கருத்துருவாக்கம், நூல் உருவாக்கம், பரவலாக்கம் சார்ந்து செயற்பட்டு வரும் அமைப்பு ஆகும். ஈழமும் தமிழியல் ஆய்வுகளும் இடைவெட்டும் பரப்புக்களைக் கவனத்தில் எடுத்து ஈழத்துத் தமிழியல் அல்லது ஈழத்துக் கற்கைகள் என்ற ஆய்வு அணுகுமுறையினை முன்வைப்பதாக எழுநா தன்னைப் புதுப்பித்துக் கொண்டு செயற்படுகிறது.