Maalaimalar Tamil

Maalaimalar Tamil

By Maalaimalar.comNewsDaily News
Download on the App Store

Maalaimalar Tamil episodes

  • மாலை செய்திகள் (25-05-2026)

    த.வெ.க.-வில் இணைந்த 3 அ.தி.மு.க எம்எல்ஏக்கள்!


    எஸ்பி வேலுமணி தரப்பு அதிமுக எம்எல்ஏக்களான மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செஞ்சிருக்காங்க. இவங்க 3 பேரும் ராஜினாமா செஞ்ச கையோட தவெக-ல இணைஞ்சிட்டாங்க.

    2 min
  • மாலை செய்திகள் (24-05-2026)

    கோவை சிறுமி கொலை: பெற்றோருக்கு ஆறுதல் கூறினார் முதலமைச்சர் விஜய்


    கோவையை அடுத்த சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலைக்கு ஆளான சிறுமியின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் முதலமைச்சர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். அப்போது, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும், அமைச்சர்கள் விஜய் தமிழன், சம்பத் குமார் ஆகியோர் சிறுமியின் பெற்றோரை சந்தித்து ரூ.7 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

    4 min
  • மாலை செய்திகள் (22-05-2026)

    தோற்றதற்கான காரணத்தை தேடுகிறது திமுக: ஒரு கட்சியின் தலைவரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதா?- ஆதவ் அர்ஜூனா


    4 min
  • மாலை செய்திகள் (21-05-2026)

    8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது மெட்டா நிறுவனம்


    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், மெட்டா நிறுவனம் உலகளாவிய பணியாளர்களில் இருந்து 8,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது. புதிய மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த வேலைவாய்ப்புப் பறிப்பு அரங்கேறியது. மனித உழைப்பைக் குறைத்து, AI மூலம் பணிகளை எளிதாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என மெட்டா நிறுவனம் தெரிவித்தது.

    3 min
  • மாலை செய்திகள் (20-05-2026)

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 94.31% மாணவர்கள் தேர்ச்சி


    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரர் ராஜ்மோகன் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இதில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.31 சதவீதம் ஆகும். மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

    4 min
  • மாலை செய்திகள் (19-05-2026)

    அம்மா உணவகங்களை சீரமைக்க முதலமைச்சர் பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்புக்குரியது- டி.டி.வி.தினகரன்.


    தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு வரவேறுப்புக்குரியது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

    3 min
  • மாலை செய்திகள் (18-05-2026)

    தி.மு.க. தான் ஆட்சியில் இருக்கிறது- மு.க.ஸ்டாலின் பேச்சு


    தஞ்சாவூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்" திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை தான் தற்போதைய அரசு நிறைவேற்றுகிறது. தி.மு.க. கொண்டுவந்த திட்டங்கள் அமலில் இருக்கும் வரை திராவிட முன்னேற்றக்கழகம் தான் தமிழகத்தை ஆள்கிறது" என்றார்.

    3 min
  • மாலை செய்திகள் (17-05-2026)

    முதலமைச்சர் விஜய் மீது நான் ஏன் பொறாமைப்பட வேண்டும் - ரஜினிகாந்த்


    சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் அரசியலில் இல்லாதபோது முதலமைச்சர் விஜய் மீது ஏன் பொறாமைப்பட வேண்டும். விஜய் முதலமைச்சராக கூடாது என்று திமுக - அதிமுக கட்சிகளை ஒன்றுசேர்க்க முயற்சிக்க சொல்லும் அளவுக்கு நான் தரங்கெட்டவன் கிடையாது. விஜய் தனி ஆளாகாக வெற்றி பெற்றிருக்கிறார். அது ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம். விஜய் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்

    4 min

About Maalaimalar Tamil

From the publisher's feed

LISTEN TO DAILY NEWS

More shows like Maalaimalar Tamil

3 Things by Express Audio

3 Things

56 Listeners