
Sign up to save your podcasts
Or


தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை - மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து 36 பேர் கொண்ட குழுவினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, கழகத்தினரை மனம்விட்டுப் பேச அனுமதியுங்கள். தலைவரான என் மேலேயே குறை சொன்னாலும் பரவாயில்லை. அதைக் குறித்து வைத்து உங்களது அறிக்கையில் வழங்குங்கள் என தெரிவித்துள்ளார்.
மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 வரவு வைப்பு
தமிழகத்தில் தவெக தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், 15-ம் தேதியான இன்று மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில், முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை இன்று வரவு வைக்கப்பட்டது.
மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும்- முதலமைச்சர் விஜய் உறுதி
மகளிர் உரிமைத்தொகை வரவு வைப்பு குறித்து முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் வங்கிக்கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும். மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது என தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற த.வெ.க... தொடரும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு
தமிழக சட்டசபையில் இன்று அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானம் ஆளும்கட்சி சார்பில் முன்மொழியப்பட்டது. அதில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். தவெக அரசை ஆதரிப்பதாக 144 எம்எல்ஏக்கள் கூறியதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது. இதனால் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு தொடர்கிறது.
நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்! - மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வு கடந்த 3-ந்தேதி நடைபெற்ற நிலையில், நேற்று மாதிரி வினாத்தாள் கசிந்ததாக செய்தி வெளியானது. இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான் என தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபை கூட்டம் - முதல்வர் விஜய் பெரம்பூர் எம்எல்ஏவாக பதவியேற்பு
தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட மற்ற வெற்றி வேட்பாளர்களும் பதவியேற்றனர்.
ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்... உணர்ச்சி பொங்க பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இன்று நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. .வெ.க.வுக்கு ஆதரவளிக்கும் கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் திருமாவளவன் வழங்கியுள்ளார். வி.சி.க. ஆதரவு தந்ததால் த.வெ.க.வின் பலம் 118ஆக உயர்ந்துள்ளது.
த.வெ.க.-வுக்கு இடதுசாரிகள், விசிக, இ.யூ.மு.லீக் ஆதரவு: நாளை முதல்வராக பதவி ஏற்கிறார் விஜய்
From the publisher's feed

56 Listeners