‘நல்லகண்ணு நாட்டை ஆளக் கூடாதா?, சங்கரய்யாவுக்கு என்ன குறைச்சல்?, சகாயத்தை முதல்வர் ஆக்குவோம்!, பொன்ராஜ்க்கு அந்தத் தகுதி இல்லையா?’ - அரசியல் எல்லைகளைக் கடந்து சிந்திப்பவர்கள் இப்படி எல்லாம் தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். அப்துல்கலாம் சொன்னது மாதிரி, ‘கனவு காணலாம்’. தவறே இல்லை. யாரையும் தடுக்க முடியாது. எந்தக் கனவும் யதார்த்தத்தோடு பொருந்திப்போக வேண்டும். பொருந்தாக் கனவு கானல்நீரே!
முதலமைச்சர் ஓமந்தூரார் நல்லவர்தான். அவரைவிட நல்லவர் இல்லை. நேர்மையாளர் இல்லை. ஆனால், அவரை இரண்டே ஆண்டுகளில் சென்னையைவிட்டே விரட்டிவிட்டார்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் சொந்தக் கட்சிக்காரர்களிடமும், கட்சித் தலைமையிடமும், தனது கட்சி
எம்.எல்.ஏ-க்களிடமும் தனக்குக் கீழ் இருந்த அதிகாரிகளிடமும் அவர்பட்ட துன்ப, துயரங்கள்தான் ஒரு நேர்மையாளன் அதிகாரத்துக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கான சாட்சிப் பத்திரங்கள்.
Podcast channel manager- பிரபு வெங்கட்