எழுத்தாளர் திரு. தியா காண்டீபன் அவர்கள் சமீபத்தில் எழுதிய ‘எறிகணை’ நூலின் அறிமுக விழா டிசம்பர் 11ஆம் தேதி அன்று பேஸ்புக் நேரலை வாயிலாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்புத்தகத்தைப் பதிப்பித்த டிஸ்கவரி புக் பேலஸ் திரு. வேடியப்பன், ஈழ எழுத்தாளர் கவிஞர் திரு. தீபச்செல்வன், பனிப்பூக்கள் பதிப்பாளர் திரு. யோகி அருமைநாயகம், முதன்மை ஆசிரியர் திரு. ரவிக்குமார் சண்முகம், பொறுப்பாசிரியர் திரு. மதுசூதனன் ஆகியோர் கலந்துக்கொண்டு நூலாசிரியரை வாழ்த்திப் பேசினர். சாகித்திய விருது பெற்ற மூத்த ஈழ எழுத்தாளர் திரு. அண்ணாமலை பாலமனோகரன் அவர்கள் நேரலையில் கலந்துக்கொள்ள முடியாததால், தனது ஆய்வுரையைப் பதிவு செய்து அனுப்பியிருந்தார். அவ்வுரை விழாவில் ஒளிப்பரப்பப்பட்டது. இந்நிகழ்வின் இறுதியில் தனது நன்றியுரையைப் பதிவு செய்தார் நூலாசிரியர் திரு. தியா காண்டீபன் அவர்கள்.
இந்த நிகழ்வை திரு. சரவணகுமரன் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்க, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை திரு. ராஜேஷ் கவனித்துக் கொண்டார்.
இந்த நிகழ்வின் காணொலியை இங்குக் காணலாம்.