பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast

பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast

Download on the App Store

பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast episodes

  • விக்கு வினாயக்ராம் ஏற்படுத்திய பிரமிப்பு : கடம் சுரேஷ் வைத்தியநாதன்
    உலகளவில் கடம் இசைக்குப் பெயர் பெற்று விளங்கும் இசை கலைஞர் திரு. சுரேஷ் வைத்தியநாதன் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் அவர்கள் நடத்திய சுவையான உரையாடலை இங்குக் காணலாம். உரையாடலின் முதல் பகுதியான இதில், சுரேஷ் அவர்கள் தனது இளம் வயது நினைவுகளை மற்றும் அவரது பெற்றோர், ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

     
    பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்
    தொகுப்பு – சரவணகுமரன்
     
    காணுங்கள்.. பகிருங்கள்..
     
     
    56 min
  • பத்மஸ்ரீ காயத்ரி சங்கரனுடன் உரையாடல்

    பத்மஸ்ரீ, கலைமாமணி போன்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இசை கலைஞர் முனைவர் திருமதி. காயத்ரி சங்கரன் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் அவர்கள் நடத்திய இசை அனுபவம் குறித்த உரையாடலை இங்கு காணலாம்.
    தொகுப்பு – சரவணகுமரன்.
    54 min
  • புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 2
    சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய அரசு குறித்து திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்களும், திரு. சரவணகுமரன் அவர்களும் உரையாடி வரும் வலையொலி பகுதி தொடர்கிறது. இந்தப் பகுதியில் புதிய அமைச்சரவை குறித்தும், புதிய அரசின் முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் திரு. ரவிக்குமார் அவர்கள் பேசியுள்ளார்.

     
    கேளுங்க.. பகிருங்க..
    9 min
  • கோவிட் தடுப்பூசி பயமா? இதைக் கேளுங்க!!
    கோவிட் தடுப்பூசி மீதான பயத்தையும், தயக்கத்தையும் போக்கும் வகையில் இந்த வலையொலி பகுதியில், யூனிவர்சிடி ஆஃப் மினசோட்டாவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றும் திருமதி. அமுதா முத்துசாமி அவர்கள் தடுப்பூசி குறித்து எளிமையான முறையில் விளக்கம் தந்துள்ளார்.

    கேளுங்கள்.. பகிருங்கள்..
    உரையாடியவர் – சரவணகுமரன்.
    22 min
  • புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 1
    சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய திமுக அரசு குறித்தும் இந்த வலையொலி பகுதியில் திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்களும், திரு. சரவணகுமரன் அவர்களும் உரையாடியுள்ளனர்.

    கேளுங்கள்.. பகிருங்கள்..
    14 min
  • சுருதி பாலமுரளியின் இசை பயணம்

    கனடாவை சேர்ந்த பன்முக இளம் இசை கலைஞரான சுருதி பாலமுரளி அவர்களுடனான இசை அனுபவங்கள் குறித்த உரையாடலை இந்தக் காணொலியில் காணலாம்.
     
    உரையாடியவர் – லக்ஷ்மி சுப்ரமணியன்
    ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்
    இயக்கம் – சரவணகுமரன்
    தயாரிப்பு – பனிப்பூக்கள்
    27 min
  • போடுங்கம்மா ஓட்டு!!
    தமிழகத்தின் தேர்தல் நாளன்று தேர்தல் வரலாறு, தேர்தல் நடைமுறைகள் குறித்து பனிப்பூக்கள் அரட்டையின் இந்த பகுதியில் உரையாடுகிறார்கள் திரு. மதுசூதனன் மற்றும் திரு. சரவணகுமரன்.

    காணுங்கள்.. பகிருங்கள்.. முக்கியமா, இன்று மறவாமல் ஓட்டு போடுங்கள்..
    23 min
  • தேர்தல் சத்தியங்களும் சாத்தியங்களும் – பாகம் 2
    தேர்தலுக்குச் சில நாட்களே இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதியையும் வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து அறிந்து கொள்ள இந்த வலையொலி நிகழ்ச்சி உதவும். தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம் என்று முடிவெடுக்கவும் இது உதவும் என்று நம்புகிறோம்.



    கேளுங்கள்.. பகிருங்கள்.. ஜனநாயகக் கடமையைச் சரிவரச் செய்திடுங்கள்..
    நிகழ்ச்சியின் முதல் பகுதி.
    பங்கேற்றோர் – திரு. ரவிக்குமார் சண்முகம், திரு. சரவணகுமரன்.
    50 min
  • முட்டாள்களின் தினமா ஏப்ரல் 1?

    முட்டாள்களின் தினமாக ஏப்ரல் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுவதின் பின்னணி குறித்தும், ஏப்ரல் ஒன்றாம் தின அனுபவங்கள் குறித்தும் இந்த பனிப்பூக்கள் அரட்டையில் உரையாடுகிறார்கள் மதுசூதனன் & சரவணகுமரன்.
     
    புகைப்படங்கள் – ராஜேஷ் கோவிந்தராஜ்
    தொகுப்பு – சரவணகுமரன்
    15 min
  • தமிழகத் தேர்தல் – சத்தியங்களும் சாத்தியங்களும்
    2021 ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுப்பிடித்திருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கும் வாக்குறுதிகள் குறித்து திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள் இந்த வலையொலி நிகழ்ச்சியில் விரிவாக பேசியுள்ளார். நிகழ்ச்சியைத் தொகுத்தளித்திருப்பவர், திரு. சரவணகுமரன்.



    முதல் பாகமான இதில் தேர்தல் அறிக்கையின் முக்கியத்துவம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு முறை ஆகியவற்றுடன் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து விவரிக்கிறார் திரு. ரவிக்குமார் சண்முகம்.
    22 min

About பனிப்பூக்கள் தமிழ் வலையொலி / Panippookkal Tamil Podcast

From the publisher's feed

மினசோட்டாவில் இருந்து வெளிவரும் பனிப்பூக்களின் கலை, இலக்கியம், அறிவியல், அரசியல், சமூகம் எனப் பல்சுவை கொண்ட தமிழ் வலையொலி. Panippookkal’s Tamil Podcast in variety of topics including Arts, Literature,…