Quran Circle Tamil

Quran Circle Tamil

Download on the App Store

Quran Circle Tamil episodes

  • நல்லோர்களின் மரணம்

    உயிரை கைப்பற்றும் வானவர் அவரை நோக்கி நல்ல ஆத்மாவே! ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உடலிலிருந்து வெளியேறி விடு என கூறுவார்.

    15 min
  • ஜகாத் யாருக்கு கொடுக்க வேண்டும்?

    யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

    [அல்குர்ஆன் 9:60]

    15 min
  • திருக்குர்ஆனின் பிற்கால சேர்க்கைகள் - பகுதி 1

    திருக்குர்ஆனை 30 ஜுஸ்வுகளாக, 7 மன்ஜில்களாக, 558 ருகூவுகளாக பிரித்ததற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. 

    ஸஜ்தா செய்யவேண்டிய ஆயத்துகள் உண்மையில் எத்தனை?

    16 min
  • திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு - பகுதி 2

    உஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் 'இஸ்தன்புல்' நகரத்தில் உள்ள Topkapi Palace அருங்காட்சியகத்திலும், இன்னொன்று ரஷியாவின் 'தாஷ்கண்ட்' நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    14 min
  • திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு - பகுதி 1
    இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.
    [அல்குர்ஆன் 29:49]
    18 min
  • திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு
    இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்-குர்ஆன் 2:185)
    36 min
  • அல்லாஹ்விற்குரிய நோன்பில் மனத்தூய்மை

    அல்லாஹ் கூறுகிறான்,

    நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பு (குர்பானியு)ம் என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்” என்று (நபியே) நீர் கூறுவீராக! “அவனுக்கே யாதோர் இணையுமில்லை – இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் – (அவனுக்கு) வழிப்பட்டவர்களான – முஸ்லிம்களில் – நான் முதன்மையானவன் (என்றும் கூறும்). (அல்குர்ஆன் 6:162, 163)

    16 min
  • பாவமன்னிப்பிற்கான மாதம்
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    அல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும்போதுஇ கீழ் வானிற்கு இறங்கிவந்து, ‘நானே அரசன்; நானே அரசன்! என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன்’என்று கூறுகிறான். ஃபஜ்ர் நேரத்தின் வெளிச்சம் வரும்வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான். (முஸ்லிம் – 1387)
    14 min

About Quran Circle Tamil

From the publisher's feed

தமிழில் இஸ்லாமிய மார்க்க செய்திகள் அதன் தூய வடிவில்