
Sign up to save your podcasts
Or


Solvanam | Thirumalai | short story | Avam | திருமலை | சொல்வனம் | சிறுகதை | அவம்
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/03/24/அவம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Christi Nallaratnam | Short Story | Avizhap Puthir
| கல்கி இதழ் | கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | அவிழாப் புதிர்
எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினம் - ஒரு சிறு முன்னுரை
மெல்பேர்ன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுத்துலகிற்கு புதியவர். கடந்த நான்கு ஆண்டுகளாக பல இலக்கிய தளங்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார்.
கல்கி சஞ்சிகையில் பல சிறுகதைகளும் இருபதுக்கும் அதிகமான கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
இவரது சிறுகதைகளில் வலுவான பாத்திரப்படைப்பு, மனித மென் உணர்வுகள் சார்ந்த கொந்தளிப்புகள், தனிமனித அனுபவங்களின் திரட்டு ஆகிய அம்சங்கள் முதன்மை பெறும்.
இவர் ஒரு ஓவியரும் கூட. பல சஞ்சிகைகளிலும் மின்னிதழ்களிலும் இவரின்ஓவியங்கள் வெளிவந்துள்ளன.
வர்த்தக வங்கி அதிகாரியான இவர் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைசங்கத்தின் உதவி செயலாளர் ஆவர்.
To read: / முழுவதும் வாசிக்க
https://kalkionline.com/magazines/kalki/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Kanthi Murugan | short story | Sathurangam | காந்தி முருகன் | சொல்வனம் | சிறுகதை | சதுரங்கம்
எழுத்தாளர் காந்தி முருகன் - சிறு முன்னுரை
மலேசியாவின் கெடா மாநிலத்தில் சுங்கைப்பட்டாணி வட்டாரத்தில் 1981ல்
பிறந்த காந்தி முருகன் கடந்த மூன்று ஆண்டுகளாக இலக்கியம் சார்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எழுத்தாளர் கே.பாலமுருகன் மற்றும் எழுத்தாளர் சிவா லெனின் இவருக்கு இலக்கிய உலகில் உறுதுணையாக உள்ளனர்
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு” மணல் மூட்டை “
இவ்வருடம் வெளியீடு காணும். பைந்தமிழ் இலக்கியப் பேரவையின்
கி.ரா விருது, மலேசிய பாரதி கற்பனைத் தளமும் தமிழ் நாட்டின் கலையரசர்
கலைத் தமிழ்ச் சங்கம் இணைந்து வழங்கிய 2021ஆம் ஆண்டின் சர்வதேச
சிங்கப் பெண்ணே விருது மற்றும் 2023 கவிக்கோ அப்துல் ரகுமான்
நினைவாக நடத்தப்பட்ட ஹைக்கூ கவிதை போட்டியில் ஆறுதல் நிலை
வெற்றி போன்றவை இவரது இலக்கிய முயற்சிக்குக் கிடைத்த
அங்கீகாரங்களாகும்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/03/24/சதுரங்கம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | எழுத்தாளர் | பாவண்ணன் |
எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை.
விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி.
இவரது இயற்பெயர் பாஸ்கரன்.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.
கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைஉடையவர்.
இலக்கிய சிந்தனை விருது, சாகித்திய அகாதெமியின் சிறந்தமொழி பெயர்ப்பாளருக்கான விருது, தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது, புதுமைப்பித்தன் விருது,
கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது மற்றும் எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2020/09/12/தரிசனம்-4/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ஆவநாழி | ஏப்ரல் மே 2024| நாஞ்சில் நாடன் | சிறுகதை | ஈயார் தேட்டை | story | Aavanalzhi |April May 2024| Eyaar ThEttai
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை "ஈயார் தேட்டை"
நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.
நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.
நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.
நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது
To read: / முழுவதும் வாசிக்க
https://tinyurl.com/m9zc64j9
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
விஜயகுமார் சம்மங்கரை | ஆவநாழி |சிறுகதை | "கப்பீஸ்" | Vijayakumar Sammangarai | Saloon SinthanaikaL
எழுத்தாளர் | விஜயகுமார் சம்மங்கரை | ஆவநாழி | சிறுகதை | "கப்பீஸ்"
Vijayakumar Sammangarai | Short Story | Guppies
ஆவநாழி
எழுத்தாளர் விஜயகுமார் சம்மங்கரை- சிறு முன்னுரை
கோவையில் வசிக்கும் இவர் தனியார் துறையில் பணி புரிகிறார்.
இவரது மிருக மோட்சம் என்ற சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகத்தின் மூலமாக வெளிவந்துள்ளது. தொடர்ந்து நிறைய சிறுகதைகள் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://tinyurl.com/m9zc64j9
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | உத்ரா | | Hello_Yarenum_Irukiriirgalaa | சொல்வனம் | உத்ரா | கட்டுரை | ஹலோ, யாரேனும் இருக்கிறீர்களா?
எழுத்தாளர் உத்ரா- சிறு அறிமுகம்
எழுத்தாளர் உத்ரா சொல்வனத்தில் தத்துவம், அறிவியல் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களில் பெரும்பாலும் பல்வேறு குறிப்புகளிலிருந்து தரவுகளை எடுத்து அதன் உதவியுடன் எழுதுகிறார்.
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/03/24/ஹலோ-யாரேனும்-இருக்கிறீர/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | இடைத்தேர்தல் | Short Story | Na. Krishna | Idaitherthal
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை
பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
NarayaNi KaNNaki | short story | IllaRath ThuRaivi | நாராயணி கண்ணகி | சிறுகதை | இல்லறத் துறவி
எழுத்தாளர் நாராயணி கண்ணகி- சிறு முன்னுரை
எழுத்தாளர் நாராயணி கண்ணகி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையைச் சேர்ந்தவர். திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். ஏற்கனவே பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதி வரும் இவர், யாவரும் பரிசு வென்ற "மென்முறை" குறுநாவலையும், Zero degree பரிசு வென்ற "வாதி" நாவலையும் எழுதியிருக்கிறார். "பிராந்தியம்" நாவலும் இவரது படைப்பே. சிறுகதைத் தொகுப்பான "சீதேவி பேசரி" வெளி வந்துள்ளது.
அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும், கல்கி நடத்திய குறுநாவல் போட்டியில் முதல் பரிசும், தமிழறிஞர் ம.நன்னன் நடத்திய புதினப் போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார்.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | கோடை மறைந்தால் இன்பம் வரும் | இலக்கியக் கட்டுரை | Meenakshi Balaganesh | Kodai MaRainthal Inbam Varum
எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை
அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.
நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.
தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/03/24/கோடை-மறைந்தால்-இன்பம்-வர/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed