
Sign up to save your podcasts
Or


சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | மறம் பாடுதல் | MaRam Paduthal
எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை
இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்
எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.
சக்யை (2019), குருதியுறவு (2020),
கடுவழித்துணை (2020), கடல் (2022).
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/03/24/மறம்-பாடுதல்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | விஜயபிரபா | சிறுகதை | நிழல் மகன் | VijayaPirabha | Short Story | Nizal Magan
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2024/03/24/நிழல்மகன்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan
அந்திமழை, ஏப்ரல் 2024 | நாஞ்சில் நாடன் | சிறுகதை | படையும் பாடையும் | story | AnthiMazhai | April | PadaiyumPaadaiyum
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை "படையும் பாடையும்"
நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.
நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.
நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.
நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது
To read: / முழுவதும் வாசிக்க
https://www.andhimazhai.com/literature/short-stories/padaiyum-paadaiyumshortstory
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Aravind Vadaseri | Short story |"PiRazhvu" | அரவிந்த் வடசேரி| ஆவநாழி | சிறுகதை | பிறழ்வு |
அசோகன் சருவில்
சிறுகதை, நாவல், கட்டுரை என உரைநடை படைப்புகளும் அசோகமித்திரனின் கரைந்த நிழல்களின் மொழிபெயர்ப்பும் அசோகன் சருவில் அவர்களின் படைப்புகளில் அடங்கும். அரசு அலுவலராக பணியாற்றிய இவர் முற்போக்கு கலை இலக்கிய அமைப்பின்
செயலாளராகவும் இருக்கிறார். கறப்பன், காட்டூர் கடவு, கங்காரு நிருத்தம் நாவல்களும் சூரியகாந்திகளின் நகரம், புளிநெல்லி ஸ்டேஷன், கல்பணிக்காரன் கதைத் தொகுப்புகளும் இவரின் முக்கிய படைப்புகள். கதையறியாதே எனும் கட்டுரைத் தொகுப்பும் மறவியில்
மறைந்தது மனிதன் எனும் நினைவோடைக் குறிப்பும் வெளியாகியுள்ளது. கேரள சாகித்ய அகாடமி அவார்ட், முட்டத்து வர்க்கி அவார்ட், பத்மராஜன் விருது உட்பட பல்வேறு
விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
எழுத்தாளர் அரவிந்த் வடசேரி- ஒரு சிறு முன்னுரை
வாசிப்பும் எழுத்தும் நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே பெரும் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் வாழ்வின் அழுத்தங்களினால் பல ஆண்டுகளாக இரண்டையும் விட்டுக்கொடுக்க நேர்ந்தது. ஓரிரு ஆண்டுகளாகத் தான் தொலைத்ததை மீட்டெடுக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன். நெடுநாள் நண்பர் எழுத்தாளரும் பதிப்பாளருமான சுதேசமித்திரனின் ஊக்கத்தினால் ஆவநாழி இதழில் எனக்குப் பிடித்த மலையாள ஆங்கில படைப்புகளை தமிழாக்கம் செய்துவருகிறேன். சொந்தமாக எழுதவும் முயல்கிறேன். ஆவநாழி தவிர இருவாட்சி இலக்கிய மலர்,கலகம் மற்றும் தாய்வீடு இதழ்களிலும் கதைகள் வெளியாகி உள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://tinyurl.com/m9zc64j9
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 17
ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.
திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.
ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.
ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/03/24/தெய்வநல்லூர்-கதைகள்-15/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam |Therisai Siva | Short Story | Uyirmey | சொல்வனம் | தெரிசை சிவா | சிறுகதை | உயிர்மெய் |
தெரிசை சிவா -ஒரு சிறு முன்னுரை
கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனம்கோப்பு பிறந்த ஊர். தற்போது துபாயில் வசிக்கும் இவர் இதற்கு முன்பு குட்டிக்கோரா, திமில் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இசை, சினிமா என சராசரி தேடுதல்களில் ஆரம்பித்து முகநூல் மற்றும் இலக்கிய வாசகர் வட்டங்களில் முனைப்புடன் இயங்கி வருகிறார். இவரது "சடலசாந்தி" சிறுகதை வாசகர்கள் மத்தியில் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றது. அமானுஷ்யங்களையும் அறிவியலையும் அசாதாரண சம்பவங்களால் கோர்த்து எழுதியிருக்கும் "ருபினி" என்ற புதினம் இவரது முதல் புனைவு நாவலாகும்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/03/24/உயிர்மெய்/
ஒலிவடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன் / Voice and Video: Saraswathi Thiagarajan
Solvanam | Milagu Novel-Part 67 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 67 | இரா. முருகன்
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/03/24/மிளகு-அத்தியாயம்-அறுபத்-4/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "ஓர் உயிர் விலை போகிறது..!" | M. A. Susila | Kalki Ithazh | VEtai Naay
எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா-
ஒரு சிறு முன்னுரை
காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா
தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில்
பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.
இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்,
நூல்திறனாய்வாளர் எனப் பல களங்களிலும் மும்முரமாக இயங்கி
வருகிறார்.
‘ஓர் உயிர் விலை போகிறது..!’ என்ற இவரது முதல் சிறுகதைக்கு
1979 ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப் போட்டியின் முதற்பரிசு
பெற்றார். இப்போது பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும்
சொந்தக்காரர். இவர் நிறைய சிறுகதைகள், நாவல், கட்டுரைகள்,
மொழியாக்கங்களைத் தந்துள்ளார். ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்
படைப்புகள் இவருக்கு மிகுந்த
ஈடுபாடு உண்டு.
To read: / முழுவதும் வாசிக்க
http://www.masusila.com/2012/08/blog-post_27.html?m=1
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
அபிதா- அத்தியாயம் 6 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 6 | நாவல் | LaaSaRamamirutham
எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.
லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.
இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்
சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.
லா.ச.ரா தமது 91-வது வயதில், சென்னையில் காலமானார்.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
அபிதா- அத்தியாயம் 5 | நாவல் | லா.ச. ராமாமிருதம் | Abhitha- 5 | நாவல் | LaaSaRamamirutham
எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம்- ஒரு சிறு முன்னுரை
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிருதம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.
லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.
இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்
சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.
லா.ச.ரா தமது 91-வது வயதில், சென்னையில் காலமானார்.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed