Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • Solvanam | Milagu Novel-Part 63| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 63 | இரா. முருகன் |

    Solvanam | Milagu Novel-Part 63| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 63 | இரா. முருகன் |


    Description

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/01/28/மிளகு-அத்தியாயம்-அறுபத்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    39 min
  • விஜயபிரபா | சிறுகதை | எலும்புச் சடங்கன்கள் | VijayaPirabha | Short Story |

    விஜயபிரபா | சிறுகதை | எலும்புச் சடங்கன்கள் | VijayaPirabha | Short Story |

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2024/01/14/எலும்புச்-சடங்கன்கள்/


    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன் /Voice, Video: Saraswathi Thiagarajan

    20 min
  • சொல்வனம் | Amarnath | story | Vethanth Vetantham | எழுத்தாளர் | அமர்நாத் | வேதாந்த் வேதாந்தம் | சிறுகதை

    சொல்வனம் | Amarnath | story | Vethanth Vetantham | எழுத்தாளர் | அமர்நாத் | வேதாந்த் வேதாந்தம் | சிறுகதை


    எழுத்தாளர் அமர்நாத்- ஒரு

    சிறு முன்னுரை

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.



    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/01/28/வேதாந்த்-வேதாந்தம்/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    15 min
  • Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 14

    Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 14

    எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை

    நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.

    இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

    இவரது மோகமே மௌனமாய்,

    அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

    காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    19 min
  • வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள் | Velayutha Muthukumar | article | Vannadasan Varikal Varainthu selkinRa azhiya Chithiranggal

    வண்ணதாசனின் வரிகள் வரைந்து செல்கின்ற அழியாச் சித்திரங்கள் | Velayutha Muthukumar | article | Vannadasan Varikal Varainthu selkinRa azhiya Chithiranggal

    எழுத்தாளர் வேலாயுத முத்துக்குமார்- சிறு முன்னுரை


    கல்லிடைக்குறிச்சியில் பிறந்து மனிதவள மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர், தற்போது வசிப்பது திருநெல்வேலியில். கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பன்முக இலக்கியத் தளங்களில் பயணித்து வருபவர்.

    இவர் எழுதி வெளிவந்துள்ளவை.

    கவிதைத் தொகுப்புகள் :

    இசைக்குறிப்புகளை மொழிபெயர்த்தல் , நியாசுரம்

    கட்டுரைத் தொகுப்புகள் : ஒரு வயலினும் சில நினைவுக் குறிப்புகளும், கதையாகாத நினைவுகள்

    தொகுப்பு நூல்கள் : கடல் படு மணல் – தி.க.சி, தி.க.சி நேர்காணல்கள், காலத்தின் குரல் – தி.க.சி, தி.க.சி.யின் நாட்குறிப்புகள், தி.க.சி நாடகங்கள், தி.க.சி திரைவிமர்சனங்கள், தி.க.சி கவிதைகள், நினைவோடைக் குறிப்புகள்

    மொழிபெயர்ப்புகள்: கு. அழகிரிசாமி – நிலை பெற்ற நினைவுகள்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/07/23/வண்ணதாசனின்-வரிகள்-வரைந்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    31 min
  • எழுத்தாளர் | சுரேஷ்குமார இந்திரஜித் | சிறுகதை | அங்கயற்கண்ணி Sureshkumara Indrajith | Short Story | AngayaRkaNNi

    எழுத்தாளர் | சுரேஷ்குமார இந்திரஜித் | சிறுகதை | அங்கயற்கண்ணி

    Sureshkumara Indrajith | Short Story | AngayaRkaNNi


    எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்- சிறு அறிமுகம்

    அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் மதுரை மாவட்ட

    வருவாய்த் துறையில் பணிபுரிந்து 2011ல் ஓய்வு பெற்றவர். 1979 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.

    இவரது பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

    இவரது  நாவல்கள் கடலும் வண்ணத்துப்பூச்சிகளும், அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்

    ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி ஆகும்.

    2020-ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது,

    2023 ஆம் ஆண்டுக்கான மா.அரங்கநாதன் விருதும் பெற்றுள்ளார்.

    To read: /முழுவதும் வாசிக்க/

    https://akazhonline.com/?p=5941


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    11 min
  • எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | காணிக்கை | Pavannan | Ananda Vikatan | KaNikkai

    எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | காணிக்கை | Pavannan | Ananda Vikatan | KaNikkai

    விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி.

    இவரது இயற்பெயர் பாஸ்கரன்.

    பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

    கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைஉடையவர்.

    இலக்கிய சிந்தனை விருது, சாகித்திய அகாதெமியின் சிறந்தமொழி பெயர்ப்பாளருக்கான விருது, தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது, புதுமைப்பித்தன் விருது,

    கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது மற்றும் எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://writerpaavannan.blogspot.com/2022/04/blog-post_10.html

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    23 min
  • சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | கள்ளம் கரவு திருட்டு மோசணம் | கட்டுரை | Solvanam | NanjilNadan | Article

    சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | கள்ளம் கரவு திருட்டு மோசணம் | கட்டுரை | Solvanam | NanjilNadan | Article

    எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் கட்டுரை

    "கள்ளம் கரவு திருட்டு மோசணம்"

    நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.

    நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

    நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

    நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/01/14/கள்ளம்-கரவு-திருட்டு-மோச/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan


    45 min
  • ஸிந்துஜா | சிறுகதை | அடையாளம் | Cyndhujhaa | Short Story | AdaiyaaLam

    ஸிந்துஜா | சிறுகதை | அடையாளம் | Cyndhujhaa | Short Story | AdaiyaaLam

    எழுத்தாளர் ஸிந்துஜா

    எழுத்தாளர் ஸிந்துஜா திருவையாறைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு மேலாக எழுத்து உலகத்தில் இருக்கிறார்.

    இவர் 150க்கும் மேலாக சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

    இவர் சிறு இலக்கியப் பத்திரிக்கைகளிலேயே அதிகம் எழுதியுள்ளார். கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

    ஸிந்துஜா சிறுகதைகள், பின்தொடரும் ஒற்றைத்தடம், கரையைக் கடந்து செல்லும் நதி என்ற இவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2024/01/14/அடையாளம்/


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan

    17 min
  • Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 13

    எழுத்தாளர் G. சியாமளா கோபுவின் நாவல் "மோகமே மௌனமாய்..........."

    Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 13

    எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை

    நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.

    இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

    இவரது மோகமே மௌனமாய்,

    அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

    காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    16 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com