Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • புதியமாதவி | கட்டுரை | நாஞ்சில் நாடனின் சிறுகதை உலகம் | Puthiyamaadhavi | article | Nanjil Nadanin Sirukathai Ulagam

    புதியமாதவி | கட்டுரை | நாஞ்சில் நாடனின் சிறுகதை உலகம் | Puthiyamaadhavi | article | Nanjil Nadanin Sirukathai Ulagam

    எழுத்தாளர் புதியமாதவி- சிறு முன்னுரை.


    மும்பையைச் சேர்ந்தவரும் முதுகலைப் பட்டதாரியுமான இவர் தமிழ்சிற்றிதழ்களிலும் இணைய இதழ்களிலும் அதிகமாக சமகால அரசியல், பெண்ணியம் குறித்து தொடர்ந்து எழுதி வருபவர்.


    சூரியப்பயணம், ஹேராம், ஐந்திணை போன்ற பல கவிதை நூல்களும், மற்றும் நிறைய

    சிறுகதைத் தொகுப்புகள், இரு நாவல்கள், கட்டுரை தொகுப்புகள், மொழியாக்கங்கள் என்ற பலவற்றிற்கு சொந்தக்காரர்.


    கவிஞர் சிற்பி இலக்கிய விருது, மணல்வீடு களரி இலக்கிய விருது, செளமா இலக்கிய விருது, கவண் கவிதை விருது போன்ற பல விருதுகள் வாங்கி குவித்துள்ளார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/08/27//நாஞ்சில்-நாடனின்-சிறுகதை/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    37 min
  • கணேஷ் ராம் | சிறுகதை | நாய்கள் ஜாக்கிரதை | Solvanam | Ganesh Ram | Short Story | Nayagal Jakirathai

    கணேஷ் ராம் | சிறுகதை | நாய்கள் ஜாக்கிரதை | Solvanam | Ganesh Ram | Short Story | Nayagal Jakirathai

    எழுத்தாளர் கணேஷ் ராம்- சிறு முன்னுரை

    வங்கியில் பணி புரியும் இவர் 35 ஆண்டுகளுக்கு முன் வங்கியின் நாடக ஆசிரியராக இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். தூர்தர்ஷனில் நாடகம் மற்றும் பாக்யா இதழில் சிறுகதையும் எழுதும் வாய்ப்பு வந்தது.

    வங்கிகளுக்கு இடையேயான நாடகப் போட்டியில் இவரது வங்கிக்கு விருது பெற்றுத் தந்தது

    இவர் எழுதிய நாடகம்.

    பிலாய் தமிழ் மன்றத்திற்கு சில நாடகங்களை எழுதினார்.

    குவிகம் அழகிய சிங்கரின் நண்பரான இவர் எழுத்தாளர் வண்ணதாசனைப் பற்றி - "வண்ணதாசனும் கல்யாண்ஜியும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். நவீன விருட்சம், சிறகு, பூபாளம் போன்றவற்றில் வெளியான இவரது கட்டுரைகள் மற்றும் கவிதைகள் தவிர, இவர் 15 சிறுகதைகள், 4 அல்லது 5 நாடகங்கள் மற்றும் ஒரு குறு நாவல் எழுதியிருக்கிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/08/27/நாய்கள்-ஜாக்கிரதை/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    24 min
  • ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | தெய்வநல்லூர் கதைகள்- 9 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 9

    ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | தெய்வநல்லூர் கதைகள்- 9 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 9

    ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.


    திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.

    ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.

    ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com//2023/08/27/தெய்வநல்லூர்-கதைகள்-9/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    13 min
  • சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 13 | நாவல்

    சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 13 | நாவல்


    எழுத்தாளர் அமர்நாத்- ஒரு

    சிறு முன்னுரை

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.



    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/08/27/உபநதிகள்-பதின்மூன்று/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    21 min
  • மீனாக்ஷி பாலகணேஷ் | கட்டுரை | தனிமையின் பிடியில் புரூரவஸ் | Meenakshi Balaganesh | article | Thanimaiyin Pidiyil Purooravas

    மீனாக்ஷி பாலகணேஷ் | கட்டுரை | தனிமையின் பிடியில் புரூரவஸ் | Meenakshi Balaganesh | article | Thanimaiyin Pidiyil Purooravas

    எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை


    அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்

    அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்

    பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.


    நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.


    தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/08/27/தனிமையின்-பிடியில்-புரூர/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    24 min
  • Solvanam | K.S. Suthakar | Short Story |Yazh PaRavai| கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | யாழ் பறவை|

    Solvanam | K.S. Suthakar | Short Story |Yazh PaRavai|

    கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | யாழ் பறவை|


    எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்- சிறு அறிமுகம்

    யாழ்ப்பாணத்தில் வீமன்காமம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டு இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். முப்பது சர்வதேச சிறுகதைப்போட்டிகளிலும், இரண்டு குறுநாவல் போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளார்.

    `எங்கே போகின்றோம்?’, `சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதிகளும், `வளர் காதல் இன்பம்’ குறுநாவலும் மற்றும் 2022- ல் `பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுதியும் அச்சில் வெளிவந்துள்ளன.

    அமேசான் கிண்டில் பதிப்பாக `மெல்பேர்ண் வெதர்’, `கார்காலம்’, `ஏன் பெண்ணென்று’ குறுநாவல்கள் வெளிவந்திருக்கின்றன.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/08/27/யாழ்-பறவை/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    33 min
  • அழகியசிங்கர் | கட்டுரை | நவீனத் தமிழ் இலக்கியத்தில் அசோகமித்திரனின் பங்கு…. | Azhagiyasingar | article | Ilakkiyathil_Asokamithiranin_pangu....

    அழகியசிங்கர் | கட்டுரை | நவீனத் தமிழ் இலக்கியத்தில் அசோகமித்திரனின் பங்கு…. | Azhagiyasingar | article | Ilakkiyathil_Asokamithiranin_pangu....

    எழுத்தாளர் அழகியசிங்கர்- ஆசிரியர் குறிப்பு.


    கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர் ஆன அழகியசிங்கரின்இயற்பெயர் சந்திரமௌலி.

    ‘எழுத்து', தொடர்ந்து 'பிரக்ஞை' வரிசையில் விருட்சம் இதழ் வளர்ந்தது.

    1993ல் 'விருட்சம்', 'நவீன விருட்சம்' ஆகி கதை, கவிதை, கட்டுரைகள், நூல்விமர்சனம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல்சுவை இதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது.

    அழகியசிங்கரின் சிறுகதைகள் மனித வாழ்க்கையின் அவலங்களை, உணர்ச்சிகளை, சமூகப் போக்குகளை மென்மையாகப் பேசுகின்றன. இவரது 'அங்கிள்' என்ற சிறுகதைக்குக் 'கதா' விருதும் 'யுகாந்தர்' என்ற மொழிபெயர்ப்பு நூலுக்குத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருதும் கிடைத்துள்ளது. இவரது பல கதைகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும், பஞ்சாபியிலும், பிற மொழிகளிலும் பெயர்கப்பட்டுள்ளன.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/08/27/__trashed-13/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    15 min
  • Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 20"

    Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 20"

    எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

    பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

    பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

    இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/08/27/அதிரியன்-நினைவுகள்-20/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    25 min
  • இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 15

    இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் |Indira Parthasarathy | Novel | Kuruthipunal 15

    இந்திரா பார்த்தசாரதி- ஒரு சிறு முன்னுரை

    இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் எனப் பல படைப்புகள் படைத்துள்ளார். இவர் எழுதிய "நந்தன் கதை" , ராமானுஜர், ஔரங்கசீப் என்னும் நாடங்களும், "ஏசுவின் தோழர்கள்" போன்ற படைப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் தனது குருதிப்புனல் நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றதுடன் தமிழக அரசு விருது, சரஸ்வதி சம்மான், பாரதீய பாஷா பரிஷத், மற்றும் 2010-ல் பத்ம ஸ்ரீ விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    16 min
  • இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 14 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal

    இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 14 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal

    இந்திரா பார்த்தசாரதி- ஒரு சிறு முன்னுரை

    இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் எனப் பல படைப்புகள் படைத்துள்ளார். இவர் எழுதிய "நந்தன் கதை" , ராமானுஜர், ஔரங்கசீப் என்னும் நாடங்களும், "ஏசுவின் தோழர்கள்" போன்ற படைப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் தனது குருதிப்புனல் நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றதுடன் தமிழக அரசு விருது, சரஸ்வதி சம்மான், பாரதீய பாஷா பரிஷத், மற்றும் 2010-ல் பத்ம ஸ்ரீ விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.


    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    21 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com