
Sign up to save your podcasts
Or


காக்கைமூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம்
நாக்கை ஊன்றி உள்வளைத்து ஞானநாடி ஊடுபோய்
ஏக்கைநோக்க அட்சரம் இரண்டெழுத்தும் ஏத்திடில்
பார்த்தபார்த்த திக்கெலாம் பரப்பிரம்ம மானதே.
சிவவாக்கியர் பாடல்
தங்கள் தேகம் நோய் பெறின் தனைப் பிடாரி கோயிலில்
பொங்கல் வைத்தும் ஆடு கோழிப் பூசைப்பலியை இட்டிட
நங்க சொல்லு நலிமிகுந்து நாளுந் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குல தெய்வம் உம்மை உரு குலைப்ப துண்மையே.
சிவவாக்கியர் பாடல்
காதரான காதரும் கலத்திலுள்ள சைவரும்
கூதரைப் பறைச்சிமக்கள் கூடிசெய்த காரியம்
வீதிபோகும் ஞானியை விரைந்துகல் எறிந்ததும்
பாதகங்களாகவே பலித்ததே சிவாயமே.
சிவவாக்கியர் பாடல்
பன்னிரண்டு கால் நிறுத்திப் பஞ்சவர்ணம் உற்றிடின்
மின்னியே வெளிக்குள்நின்று வேரிடத்து அமர்ந்ததும்
சென்னியாம் தலத்திலே சீவனின்று இயங்கிடும்
பன்னியுன்னி ஆய்ந்தவர் பரப்பிரம மானதே.
சிவவாக்கியர் பாடல்
ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகார ணத்திலே
நாக்குமூக்கை யுள்மடித்து நாதநாடி யூடுபோய்
ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரேல்
பார்க்கப்பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே.
சிவவாக்கியர் பாடல்
அறிவிலே புறந்திருந்து ஆகமங்கள் ஓதுறீர்,
நெறியிலே மயங்குகின்ற நேர்மைஒன்று அறிகிலீர்,
உறியிலே தயிர் இருக்க ஊர்புகுந்து வெண்ணைதேடும்
அறிவிலாத மாந்தரோடு அணுகுமாறது எங்ஙனே?
சிவவாக்கியர் பாடல்
காணப்பா பூரணத்தைக் கண்டு பேசி
கைமுறையாய் கொண்டதினால் காணும் சித்து
வீணப்பா என்று சொல்லி நினைத் தாயானால்
வேதாந்தம் சித்தாந்தம் இரண்டுங் கிட்டா
தானப்பா தாமவனாய் தன தாய் அந்தத்
தன்மையுள்ள பூரணத்தின் நன்மையாலே
தூ ணப்பா துரும்பா குந் துரும்பு தூணாம்
சொல்லாதே இந்நூல் தான் குரு நூலாமே.
அகத்தியர் பாடல்
புலத்தியருக்கு தமதனுபவ முரைத்தல்
உண்டான சேதியடா இன்னமொன்று
உரைக்கிறேன் புலத்தியனே உண்மையாக
அண்டர் தொழுஞ் செகஜோதி தன்னைக் காண
ஆராலும் கூடுமடா அப்பா கேளு
பண்டையிலே விட்டகுறைக் காரனென்றால்
பரம குருபதம் போற்றிப் பணி குவான் கேள்
கண்டனடா குருபதத்தை யென்று சொல்வான்
காசினியில் வாய்பிலுக்காய் கருதுவானே.
அகத்தியர் பாடல்
ஏறுகின்ற மூலாதா ரத்தில் நின்ற
என் மகனே புலத்தியனே யிசைந்து கேளு
மாறுமிது மிடைபின்னாய் யிரண்டு மாறி
மகாரமது முப்பொருளாய் நின்ற சூட்சம்
வேறு துறை யேதுமில்லை மவுனத் தூட்டு
வேதாந்த சுழிமுனையின் நாட்ட மாகும்
தேறுமப்பா கற்பமது மவுனத் தாலே
ஜெகசாலச் சித்தகலை மவுனந்தானே
அகத்தியர் பாடல்
க்கலியுலகினிலே
மக்களைப் பெறுவதிலும்
மிக்கநல்விவேகமூட்டணும் - பெரியார்கட்கு
தக்கமரியாதைகாட்டணும்.
தந்தைதாய்பெரியவர்க்கு
வந்தனைகள் செய்திடாது
நிந்தனைபுரிதல்தகுமா - அவர்கள் மனம்
நொந்திடில் வினைகள் போகுமா?
சித்ரமுத்து அடிகளார்
From the publisher's feed

0 Listeners