
Sign up to save your podcasts
Or


சொல்லுகிறேன் வாருதிபோற் கபநீர்வீழும்
சோதிக்கி லண்ணாக்கிற் குறியைக்கேளு
மல்லுகிறேன் சுழிமுனையின் ராகுகேது
மைந்தனே சங்கொடுசக் கரம்போல்நிற்கும்
அல்லுகிறேன் பேருரவி மதிதானென்பார்
ஆச்சரிய மிடையின்னா யமர்ந்தநாக்கு
கொல்லுகிறே னென்றுசொல் ஜனங்களைத்தான்
கூட்டியல்லோ கபத்தையுள்ளே வளர்க்குந்தானே.
சட்டை நாதர் பாடல்
வாகான முச்சுடரின் மேலே நின்று
உள்ளுணர்ந்து மனதறிவாம் ஞானக் கண்ணால்
உற்றுப்பார் வெட்டவெளி உருவ மாமே
உருவமென்ற தேகமது பிளந்து தானால்
உன் தேகம் காயசித்தி விண்ணிற் பாரு
பருதிமதி ஆனந்த சித்த ராகப்
பரவெளியில் வாழ்ந்திருப்பார் நீயும் பாரு
அகத்தியர் பாடல்
பாருநீ ஆதார மூல பீடம்
பரிவாக ஆறுமுக வேலர் போற்றும்
சாருநீ பிரணவத்தால் நாதன் றன்னைச்
சார்பாக நடுவனையி லாதியந்தம்
சேருநீ ஆயிரத்தெட்டுருவை யோதச்
சிவனோடு சத்தியங்கே நடனமாடும்
காருநீ பின்னொன்றும் நினைக்க வேண்டாம்
கருதியதோர் மாயை தன்னைப் பூசை பண்ணே
அகத்தியர் பாடல்
காணாமல் கருத்தழிந்த மடையர் மெத்த
கர்மவிணை தீராத கழுதை மாண்பர்
வீணான வாய்மொழிகள் மெத்தப் பேசி
வேதமென்ன சித்தாந்தமென்ன
மன்ன வென்பான்
கோனான குருபதத்தைக் காணாமாந்தர்
குவலயத்தில் மெத்த உண்டு கண்டுதேறு
தேனான மதிய முதம் பானம் பண்ணி
திரமான சிந்தையடா நாதமாமே.
அகத்தியர் பாடல்
எண்ணாமல் எண்ணி எண்ணி மனது நொந்து
இடைந்து மிகக் கரைந்த ஒரு பாவிமார்கள்
கண்ணான கண்பார்த்து கனலைத் தூண்டி
கற்பூர தீபமதிற் கருத்தை வைத்து
பண்ணான ரேசக பூரகமும் பண்ணி
பதிவான கும்பகத்திற் பதிய மாட்டார்
தண்ணான தன் பெருமை தனையே எண்ணி
தானவனாமென்ற துறை தனைக் காணாரே
அகத்தியர் பாடல்
அடுத்து மெள்ள மூப்பூவின் விபரம் கேட்பான்
அதன் பிறகு வேதை முகம் என்னவென்பான்
நடுத்தரமாய் சரக்குவகை பஸ்பம் கேட்பான்
தலமான செந்தூர முறையைக் கேட்பான்
கடுத்ததொரு மெழுகுவகை என்னவென்பான்
கருவான சரக்கு வைப்பு முறை தான் கேட்பான்
விடுத்து மிகச் சொல்லாவிட்டால் போம் போம்
என்பான்
விதியுண்டானால் வருமென்று எண்ணான் பாரே.
அகத்தியர் பாடல்
அடுத்து மெள்ள மூப்பூவின் விபரம் கேட்பான்
அதன் பிறகு வேதை முகம் என்னவென்பான்
நடுத்தரமாய் சரக்குவகை பஸ்பம் கேட்பான்
தலமான செந்தூர முறையைக் கேட்பான்
கடுத்ததொரு மெழுகுவகை என்னவென்பான்
கருவான சரக்கு வைப்பு முறை தான் கேட்பான்
விடுத்து மிகச் சொல்லாவிட்டால் போம் போம்
என்பான்
விதியுண்டானால் வருமென்று எண்ணான் பாரே.
அகத்தியர் பாடல்
அடுத்து மெள்ள மூப்பூவின் விபரம் கேட்பான்
அதன் பிறகு வேதை முகம் என்னவென்பான்
நடுத்தரமாய் சரக்குவகை பஸ்பம் கேட்பான்
தலமான செந்தூர முறையைக் கேட்பான்
கடுத்ததொரு மெழுகுவகை என்னவென்பான்
கருவான சரக்கு வைப்பு முறை தான் கேட்பான்
விடுத்து மிகச் சொல்லாவிட்டால் போம் போம்
என்பான்
விதியுண்டானால் வருமென்று எண்ணான் பாரே.
அகத்தியர் பாடல்
தேகமென்ற அகமறியார் சித்தர் கோடி
சிவவேடங் காணாத திருட்டு சித்தர்
ஆகமென்ற நூல் முறையைப் பற்றி நின்று
அலைவார்கள் வாய்புலம்பி அருளைக் காணார்
பாகமென்ற சுவையறிவார் பாதகர்கள் மெத்த
பாலறியாப் பாலருந்தும் பாவிமார்கள்
ஏகபர வஸ்துவென்பான் யோகமென்பான்
எட்டிரண்டும் அறியாத குருடர் தானே.
அகத்தியர் பாடல்
ஒடுமே வலியோங்குங் குடைச்சலும்
காடு வசம்பு கருது மமுக்கரா
தேடு மதுரந் தேர்ந்த ரோகணியும்
நீடு மல்லி நெருங்கு மனிச்சையே
ஏகு மெண்ணெ யெழிலான வாமணக்
பாகு மொன்றாய்க் கலந்துமே காச்சியே
பாகு மேனியில் பகரவே பூசிடியில்
போகு மேல்வலி பொருந்தப் பறக்குமே.
தேரையர் பாடல்
From the publisher's feed

0 Listeners