அமித்ஷா ஏறக்குறைய கூட்டணியை உறுதிப்படுத்தினாலும், இன்னும் அதை உறுதிப்படுத்தாதவராக இருக்கிறார் எடப்பாடி. பின்னணியில் நான்கு புது டிமாண்ட்களை முன் வைத்துள்ளார். அதே நேரம், 'எடப்பாடி-யை நம்ப வேண்டாம்' என போட்டுடைத்து இருக்கிறார் அண்ணாமலை. இதையொட்டி, அண்ணாமலையே பாஜக தலைவர் பதவியில் நீடிக்க வாய்ப்புகள் அதிகம். இன்னொரு பக்கம் திமுக கூட்டணிக்குள்ளும் குழப்பங்கள். குறிப்பாக சிபிஎம் கம்யூனிஸ்ட் கட்சி சில செக்குகளை வைத்துள்ளது. மதுரை மாநாட்டின் மூலமும் சில சிக்னல்கள் காட்டப்பட்டுள்ளது. இதை சரிகட்டவே, ஸ்டாலினும் காரல் மார்க்ஸ்க்கு சிலை அமைத்து தரப்படும் என அறிவித்துள்ளார்.
பரபரப்பாக செல்கிறது கூட்டணிகளைச் சுற்றிய கேம்.