செங்கோட்டையனின் டெல்லி பயணத்தையொட்டி , ஐந்து விதமான அனுமானங்கள் வட்டமடிக்கின்றன. முக்கியமாக, எடப்பாடிக்கு பதிலாக செங்கோட்டையனை வைத்து, அதிமுக-வை லீட் செய்வது என்கிற ஒரு முடிவும் இருக்கிறது. இது அமித் ஷா-வின் பிளான் பி என்கிறார்கள்.
வெளியே சசிகலா, பன்னீர்செல்வம் என நெருக்கடி. உள்ளே செங்கோட்டையன் மூலமாக செக் என டெல்லி ஆட்டத்தால் உறக்கமிழந்து தவிக்கிறார் எடப்பாடி என்கிறார்கள்.
அதேநேரம் இதை சமாளிக்க, கவனத்தோடு தம் அடிகளை எடுத்து வைத்து , ஆட்டத்தை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் எடப்பாடி என்கிறார்கள் அவர் ஆதரவாளர்கள். சூடு பிடிக்கும் அரசியல் கேம்.