
Sign up to save your podcasts
Or


இது ஒரு கொரியா நாட்டுக் கதை.
நாயும் பூனையும் எப்படி எதரிகளானர்கள்1
என்பதை விளக்கும் கதை.
இது ஒரு போலந்து நாட்டுக் கதை.
ஒரு அரசர் தன்னிடம் ரொம்ப வருஷங்களாக
வேலை பார்த்து வந்த விதூஷகனுக்கு ஓயவு
கொடுத்து கொஞ்சம் பண உதவியும் செய்கிறார்.
அவர் கொடுத்த பணம் காலியாகி,விதூஷகன்
தரித்திர நிலையை அடைகிறான்.
தன் புத்திசாலித்தனத்தால்,அரசரிடமிருந்து
பல சலுகைகளை பெறுகிறான்.
எப்படி?
கதையை கேளுங்கள்....
இது ஒரு எதியோப்பிய நாட்டுக் கதை.
ஒரு மாற்றந் தாய் ,(Step Mother) தன்னுடைய
வளர்ப்பு மகன் (Step son) அன்புக்காக ஏங்கி,
அவன் அன்பை பெற, ஒரு சிங்கத்தின் மீசையிலிருந்து
மூன்று முடிகளை (whiskers) கொண்டு வர முயற்சி
செய்து அதில் வெற்றி பெறுகிறாள்.
எப்படி?
கதையை கேளுங்கள்....
இது ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டுக் கதை.
ஒரு கொடூரமான பண்ணையாரிடம் 2சகோதரர்கள்
ஒருவர் பின் ஒருவராக வேலைக்கு சேர்கிறார்கள்.
மூத்தவன் அவருடைய கொடுமை தாங்காமல்
வீடு திரும்புகிறான்.இளைவன் அவரிடம்
வேலைக்கு சென்று அவர் கொடுமைக்கு முடிவு
கட்டி வெற்றிகரமாக வீடு திரும்புகிறான்.
எப்படி?
கதையை கேளுங்கள்......
இது ஒரு ஐரோப்பா நாட்டுக் கதை.
ஒரு அரசருடையை 7 மகன்களும் ஒரு வருடம்
தனித்தனியாக பிரயாணம் செய்கிறார்கள்.
ஒரு வருட முடிவில் ஒவ்வொருவரும் ஒரு
அதிசயத்தக்க திறனை(Skill) பெற்று
சந்திக்கிறார்கள் தங்கள் திறன்களை
பயன்படுத்தி கடத்தப்பட்ட ஒரு ராஜகுமாரியை
மீட்கிறார்கள்.அந்த ராஜகுமாரி யாரை,ஏன்
கல்யாணம் பண்ணிக் கொள்கிறாள்
என்பது தான் கதை.
இது ஒரு பர்மா நாட்டுக் கதை.
பெற்றவர்களால் படிக்க அனுப்பபட்ட
ஒரு வாலிபனுக்கு படிப்பில் நாட்டமில்லை.
வாள் வீசுவதில் திறமையை காட்டினான்.
அவன் ஆசிரியர் சிப்பாய் வேலைக்க்கு
போக சொல்கிறார். போகுமுன் அவனுக்கு
3 அறிவுறைகளை வழங்குகிறார்.
அவன் அதன்படி நடந்து ஒரு நாட்டின்
ராஜாவாக ஆகிறான்.
எப்படி?
கதையை கேளுங்கள்....
இது ஒரு அங்கோலா நட்டுக் கதை.
மாமாவின் கடனுக்காக அடிமையான
ஒரு வாலிபன் தன் குறைகளை ஒரு
ஆற்றிடம் சொல்கிறான். அந்த ஆறு
அவன் கனவில் ஒரு வழியை சொல்லுகிறது.
அவன் அதன்படி நடந்து ஒரு சுதந்திர
மனிதனாக ஆகிறான்.
எப்படி?...
கதையை கேளுங்கள்..
இது ஒரு இந்தோனிஷியா நாட்டுக் கதை.
ஒரு சிறுவனின் கம்பளி பூச்சி, அவனை
அந்த ஊர் தலைவரின் மகளை,கல்யாணம்
பண்ணிக் கொள்ள மறைமுகமாக உதவுகிறது.
எப்படி?
கதையை கேளுங்கள்....
இது ஒரு இதாலி நாட்டுக் கதை.
ஒரு ராஜா எப்போதும் மனச்சோர்வோடு
சந்தோஷமில்லாமல் இருந்தார்.
அவரை குணப்படுத்த ஒரே வழி-
மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கும்
ஒரு மனிதனின் சட்டையை
ஒரு நாள் அணிந்து கொள்வது தான்.
அந்த மாதிரி மனிதர் கிடைத்தாரா?
அரசர் குணமடைந்தாரா?
கதையை கேளுங்கள்…..
ஶ்ரீ ராமகிருஷ்ணர் இந்த 2 கதைகளின் மூலம்
நாம் கடவுள் மேல் காட்டும் பக்தி எப்படி
இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார்.
கடவுளிடத்தில் வைக்கும் தீவிரமான நம்பிக்கையும்
முழுமையான சரணாகதியும் தான் எல்லா அற்புத
செயல்களுக்கும் காரணமாக இருக்கின்ற என்பது
இந்த கதைகள் புரிய வைக்கின்றன
கதையை கேளுங்கள்,,,,
From the publisher's feed