Ramanan's Podcast

Ramanan's Podcast

By RamananArtsBooks
Download on the App Store

Ramanan's Podcast episodes

  • பகட்டு உலகின் Plastic மனிதர்கள்

    பகட்டு உலகின் பிளாஸ்டிக் மனிதர்கள்

    பகட்டான வாழ்க்கையும், அடுத்தவர்கள் முன்பு ஆடம்பரமாக வாழ்ந்து காட்டவேண்டும் என்ற நிலை இன்று பலிடம் தோன்றியுள்ளது.

    உங்கள் ஆசையும் முயற்சியும் இருக்கும் நிம்மதியைப் பறித்து விடக் கூடாது. வாழ்ந்து கொண்டிருக்கும் நல்ல சூழலைக் கெடுத்துவிடக் கூடாது.

    வேடிக்கை பார்க்கும் வாழ்க்கை வாடிக்கையாக மாறும்போது கொண்ட வியப்பு எல்லாம் விரக்தியாய் மாறும் என எதிர்ப்பார்த்தில்லை.


    9 min
  • உங்களோடு நீங்களே பேசிக்கொள்வது Self Talk மன நோயல்ல... ஆரோக்கியமான மனநிலை

    மனம் பல்வேறு எண்ணங்களாலும், நினைவுகளாலும் நிறைந்தது. 

    அது ஓய்வாக இருக்கும்போதுகூட எதையாவது சிந்தித்துக்கொண்டிருக்கும். 

    நம்மையும் அறியாமல் மனதின் உள்ளே ஓர் உரையாடல் நடந்துகொண்டே இருக்கும்.

    உங்களோடு நீங்களே பேசிக்கொள்வது ( Self Talk ) மன நோயல்ல...  ஆரோக்கியமான மனநிலை... அதிக அறிவாற்றல் கொண்ட செயல்பாடு' என்கிறது சமீபத்திய ஆய்வு.

    11 min
  • பயம் இல்லாதவர்கள் வெற்றி அடைவார்கள்

    வாழ்க்கையில் எவர் ஒருவருக்கு, தொடர் வெற்றிகள் வந்து கொண்டே இருக்கின்றதோ அவர் தைரியசாலியாக வாழ்ந்து விடுகிறார்கள். அதுவே, எவர் ஒருவருக்கு வாழ்க்கையில் தொடர் தோல்வி ஏற்படுகிறதோ, கட்டாயம் அவர்களது மனதில் பயம் ஏற்பட்டு விடும். ஆனால், இதையே சற்று மாற்றி கூறிப் பாருங்கள்! மனபயம் ஏற்பட்டாலே தோல்வியைத் தழுவுவார்கள். பயம் இல்லாதவர்கள் வெற்றி அடைவார்கள். வாழ்க்கையில் சாதனை புரிவதற்கு மிகவும் முக்கியமான ஒரு பண்பு தைரியம் !!

    13 min
  • பெற்றோரியம் என்றால் என்ன ?

    குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவு நிலைகள் எவ்வாறு இருக்க வேண்டும் ?

    கல்வியே எங்கள் மூலதனம். எமது இளம் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றிகான தீர்வுகள்இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளில் எதிர் கொண்டுள்ள சவால்கள் அதனை எதிர் கொள்ளும் முறைகள் பெற்றோரியத்தில் முக்கியமானவை

    9 min
  • மனஅழுத்தம் ( Strees ) நம்மை என்ன செய்யும்?

    மனிதனாய் பிறக்கும் அனைவருக்குமே மன அழுத்தம் இருக்கும். 

    ஏனென்றால், இன்றைய சூழலில் மனிதர்களிடம் பேசுவதை மறந்து இயந்திரங்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

    நாம் எல்லோருமே மகிழ்ச்சியாக, பிரச்னைகளே இல்லாத ஒரு வாழ்வை தேடிச் சென்று கொண்டிருக்கிறோம். 

    அப்படியில்லாமல், பிரச்னைகளும் இருக்கும் அதுதான் வாழ்க்கை என்று உணர வேண்டும். 

    சில பிரச்னைகளுக்குத் தீர்வு உண்டு. சில பிரச்னைகளுக்குத் தீர்வில்லை. சில பிரச்னைகளுடன் வாழப் பழகவேண்டும். 

    எப்போதும் தனிமையாக இல்லாமல், யாராவது ஒருவரிடமாவது மனம் விட்டுப் பேச வேண்டும் அப்படி இருந்தால் மன அழுத்தங்களை குறைக்க முடியும்.

    மனஅழுத்தம் ( Strees ) நம்மை என்ன செய்யும்? என்ன வேண்டுமானாலும் செய்யும். 

    தூக்கமின்மையில் தொடங்கி, உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் என ஒவ்வொன்றாக பல பிரச்னைகளை அள்ளி அள்ளிக் கொடுத்து, இதய நோய்கள் வரை கொண்டு வந்து நிறுத்திவிடும். 

    இது உடல்ரீதியான பிரச்னை என்றால், மனம் நொறுங்கிப்போய் மனநல பாதிப்புகள் ஏற்பட்டு உயிர் துறக்கக்கூட காரணமாகிவிடும்.

    சிகிச்சைகள் அளவுக்கு முக்கியத்துவம் தரக்கத்தது மன அழுத்தம் குறித்தான விழிப்புணர்வும். மன அழுத்தம் பற்றிய விழிப் புணர்வைப் பேரளவில் முன்னெடுத்துச் செல்வது இன்றைய காலகட்டத்தின் இன்றியமையாத தேவை.


    6 min
  • 'அருள்' Blessing இல்லை என்றால் வெற்றியும் மகிழ்ச்சியும் இல்லை!

    ஓர் உயிர் துன்பப்படும் வரை காத்திருக்காமல், அது என்றுமே ஆனந்தமாய் வாழ உங்களால் முடிந்தவற்றைச் செய்யுங்கள், பிரபஞ்சம் உங்களுக்கு "அருளை" அள்ளி வழங்கும்.

    8 min
  • குப்பைகளால் நிரம்பி வழிகிறது உலகம்

    உலகமே குப்பைகளால் நிரம்பி வழிகிறது. ஆனால், யாரோ உற்பத்தி செய்யும் கழிவுகள், வேறு யாருடையதோ பொறுப்பாகிறது. எல்லாவற்றையும் வியாபாரமாக்கும் மனிதனின் இழிநிலை, மனிதகுலத்தின் மாண்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.   இன்று உலகளாவிய கழிவு மற்றும் கழிவு நெருக்கடி தோன்றியுள்ளது,

    உலக அளவில் உள்ள பெருங்கடல்களில் 171 லட்சம் கோடி 'பிளாஸ்டிக்' கழிவுகள் மிதந்து கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    கழிவகற்றல் கடினமான பணி. கழிவுகளின் வகையும் தொகையும் அதைச் சவாலானதாக ஆக்கியுள்ளன.  

    எமது எதிர்காலச் சந்ததிகளின் வளமான வாழ்வு குறித்துப் பேசுவதாக இருந்தால், முதலில் நாம், எமது கழிவுகள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் திறந்த மனதுடனும் நேர்மையாகவும் ஓர் உரையாடலை மேற்கொண்டாக வேண்டும். 

    அதைச் செய்யத் தவறினால், எதிர்காலச் சந்ததிகளுக்கு நாம் துரோகம் இழைத்தவர்கள் ஆவோம்.  

    9 min
  • உங்கள் உயிரியல் கடிகாரம் (Biological Clock) எப்படி இயங்குகிறது

    இந்த வாழ்க்கைமுறை நோய்களுக்கெல்லாம் காரணம், நமது உடலின் 'உயிரியல் கடிகார'மும் (Biological Clock) 'சர்காடியன் இசைவு'ம் (Circadian Rhythm) பாதிக்கப்படுவதுதான் என்கிறது சமீபத்திய ஆய்வு. 2017-ம் ஆண்டு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹால், மைக்கேல் ரோஸ்பாஷ் மற்றும் மைக்கேல் யங் ஆகியோரின் ஆராய்ச்சியும் நமது உடலின் ஒவ்வொரு செல்களிலும் இயங்கும் உயிரியல் கடிகாரம் மற்றும் அதன் சர்காடியன் இசைவைப் பற்றியதுதான்.

    13 min
  • பெற்றோர், பிள்ளைகள் உறவு

    பெற்றோர், பிள்ளைகள் உறவு என்பது எந்தவொரு எதிர்பார்ப்போ, சுயநலமோ, உடன்படிக்கைகளோ அற்ற ஒர் உறவாகும். 

    மற்ற உறவுகளைப் போன்று இடையில் கோர்க்கப்பட்டதல்ல. 

    அது ஆரம்பத்திலிருந்தே அன்பாலும்,  அரவனைப்பாலும் கட்டப்பட்ட சங்கிலியாகும். இந்த உறவு தான் அவன் மரணிக்கும் வரை தனக்கான அடையாளத்தை ஏற்படுத்தி ஆறுதல் தரக்கூடிய ஒன்றாகும். 

    எல்லாக் கவலைக்,  கஷ்டங்களின் போதும் ஒரு தடவையாவது கடந்து போகும் ஒர் உறவு என்றால் அது பெற்றோர், பிள்ளைகள் உறவுதான்.

    ஆனால் அது எப்பபோதும் சாத்தியமா என்ற கேள்வி தவிரக்க முடியாமல் எழுகின்றது. 

    சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டுகின்றனர்.  

    அவர்களுக்கு மத்தியில் தங்களுடைய அன்பை சிலரை விட சிலருக்கு அதிகமாகக் காட்டுகின்றனர். சிலரை உயர்த்தியும் சிலரைத் தாழ்த்தியும்  பேசுவார்கள்.

    குடும்பத்தில் உங்கள் பெற்றோர் உங்களுக்கும் உங்களின் சகோதர சகோதரிகளிடமும் பாரபட்சமாக இருந்தார்களா? இருகின்ரார்களா?அப்படி இருப்பின் எப்படி இருகின்றார்கள்?

     பிள்ளைகள் பெற்றோரிடம் முதலில் எதிர்பார்ப்பது அன்பான , ஆறுதலான வார்த்தைகளை மட்டுமே .

     ஆகவே உங்கள் அன்பையும், கண்டிப்பையும் எல்லா பிள்ளைகள் மீதும் சம அளவில் செலுத்துங்கள்.

    12 min
  • கேள்வி கேட்பதென்பது ஒரு கலை.

    கேள்வி கேட்பதென்பது ஒரு கலை. அதற்குப் பதில் சொல்வதென்பது அதை விட பெரிய கலை. 

    பல அறியப்படாத விஷயங்கள் அறியப்பட, அனைவரின் மனதிலும் புரியப்பட காரணமாக அமைந்தது கேள்விகள் தான். அதனால் தான் கேள்விகளாலே ஒரு வேள்விகள் செய்வோம் என்பார்கள். 

    கேள்விகளால் மனதில் உள்ள ஐயங்கள் களையப்பட்டு, மனம் அமைதியடைந்து நம்மையும் அடுத்த இலக்கை நோக்கி வெற்றிநடை போட வைக்கிறது.

    'ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை. பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதினாலே'என கேள்வியின் முக்கியத்துவத்தை கவிஞர் வாலி பாடல் மூலம் அழகாக உணர்த்துகிறார். 

    கவியரசு கண்ணதாசனிடம் ஒருமுறை ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் என்ன வித்தியாசம் என கேள்வி கேட்ட பொழுது, சர்வாதிகாரத்தில் கேள்வி கேட்பது கடினம். ஜனநாயகத்தில் பதில் சொல்வது கடினம் என்றார்.

    11 min

About Ramanan's Podcast

From the publisher's feed

வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்