
Sign up to save your podcasts
Or


நம்முடைய சிந்தனை, நம்பிக்கை மற்றும் நடவடிக்கை போன்றவற்றை மேம்படுத்திக்கொள்வதன் மூலம் நாம் நம் வாழ்க்கையை மிகவும் சிறப்பானதாக அமைத்துக்கொள்ள முடியும்.
நம் வாழ்க்கை விலைமதிப்பற்றது. நாம் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்தும் உணராமலும் இந்த வாழ்க்கையை அன்றாடம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் முக்கிய மான கேள்வி ஒன்று இருக்கிறது. நம் வாழ்க்கையை நாம் சாதாரணமாக வாழ நினைக்கிறோமா அல்லது மிகச் சிறப்பான வாழ்க்கையை வாழ நினைக் கிறோமா என்பதுதான் அது.
தைரியம் Courage என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர் .
எண்ணத்தின் உயரம் தான், வாழ்க்கையின் உயரமாகும்.
எனவே, நமது எண்ணம் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
தைரியம் தான் வாழ்க்கை; பயம் தான் மரணம்.
எதையும் தைரியமாக பேச வேண்டும்.
அதே நேரத்தில் தன்னை உயர்த்திக் கொள்ள, பிறரை காயப்படுத்தியும், மனது புண்படும்படியும் நடந்து கொள்ளக் கூடாது.
நாம் சிறப்பான நிலையை அடைய வேண்டும் எனில், அதற்குத் தேவை யானவை என்னென்ன என்பதைச் சொல்லும் The Diary Of a CEO என்கிற புத்தகத்தைதான் இந்த Episode இல் கேட்கப்போகின்றோம்.
Iki” (வாழ்க்கை) மற்றும் “gai” (மதிப்பு) ஆகிய இரண்டு ஜப்பானிய வார்த்தைகளில் இருந்து வந்தது தான் Ikigai எனும் வார்த்தை அதாவது நாம் உயிருடன் இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்கான ஒரு கலை என இதனை ஜப்பானியர்கள் பின்வற்றி வருகின்றனர்.
இக்கணம் இப்போது மட்டுமே இருக்கும். மீண்டும் ஒருபோதும் திரும்பி வராது’.நாம் கடந்தகாலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதற்கு பதிலாக, நிகழ்காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்
மனித மனங்கள் காயப்படுவதைத்தான் அவமானம் என்கிறோம்.
கத்தி... துப்பாக்கி... வெடிகுண்டு... அணு ஆயுதங்களைவிட மனிதர்களையும், மனித சமூகத்தையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கும், சக்திவாய்ந்த ஆயுதம் எது தெரியுமா? அவமானம்தான் அது.
வார்த்தைகளாலும், செய்கைகளாலும், ஏற்படுத்தப்படும் அவமானம்தான் மனிதர்களைச் சிதைத்துக் கொல்லும் சக்தி வாய்ந்த ஆயுதமாகக் கருதப்படுகிறது.
"வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வெகு சகஜம். நல்லதொரு உயர்வின் மகிமையை அறிந்துகொள்ள தோல்வி என்கிற அனுபவத்தையும் பெறுவது நல்லது. வெற்றி என்றதும் பிறரால் அவமானப்படுத்துவது என்பதும் வரும். இது மிகப்பெரிய பாடங்களை நமக்கு சொல்லிக் கொடுத்துவிடும்.
எமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்துதலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும்.
வெற்றிகளை பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகு வேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும்.
நம்மை அவமானப்படுத்த செயல்படும் பலபேர் இவைகளை மிக இரகசியமாகவே செய்கிறார்கள்.
வேறு யாரையாவது முன்னிறுத்தி பின்னால் நின்று இயக்குகிறார்கள். நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் நம்முடைய உயர்வு கண்டு பொறாமை படத்தொடங்குகிறார்கள்.
அவர்கள் பொறாமை மிகுதியால் எம்மை அவமானப்படுத்துகிறார்கள்.
எப்போதும் வாழ்க்கையில் நம்முடைய சுற்றம் தான் எதிரிகள் எதிரிகள் என்று எவரும் தனியாக உருவாவது இல்லை.
வாழ்வில் வெற்றி வேண்டுமெனில் அவமானப்படுங்கள் அவமானத்திற்கு அஞ்சாதீர்கள்.
அவமதித்தவர்களை மறந்துவிட வேண்டும். ஆனால் அவமானங்களை மறக்கக்கூடாது.
அதை அடுத்தடுத்த தளங்களுக்கான வெற்றிப் பயணத்தின் பாதையாக்கிக் கொள்ளவேண்டும்...
அவமானங்களை மறவாதீர் உங்கள் வெற்றிக்கான விதைகள் அவற்றில் உள்ளன”...
தத்துவம் என்பது என்ன? தத்துவம் என்பதற்கு ஆங்கிலத்தில் Philosophy என்பார்கள்.
இது ஃபிலாஸ் ஸோப்ஃபியா என்ற இரண்டு லத்தீன் சொல்லில் இருந்து உருவாகிய பெயர்.
ஃபிலாஸ் என்றால் அறிவு; ஸோஃபியா என்றால் நேசிப்பது என்று பொருள்.
அப்படியானால் தத்துவம் என்பது 'அறிவை நேசிப்பது' என்று விளக்கமே பிறக்கிறதல்லவா?
கலை - இலக்கியம் - நாகரிகம் எனப் புகழ்பெற்ற பண்டைய கிரேக்கம் தந்த மாபெரும் தத்துவஞானி சாக்ரட்டீஸ்.
இவரே தத்துவஞானிகளின் தந்தை (Father of Philosopers) என்று போற்றப்படுகிறார்.
உலக வரலாற்றில் இவரின் சிந்தனை மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தின.
``கற்பிக்கப்பட்ட எதையுமே ஏற்றுக்கொள்ளக்கூடாது, அறிவினால் சீர்தூக்கிப் பார்த்து ஏற்புடையதாக இருப்பதை மட்டுமே ஏற்க வேண்டும்” போன்ற பகுத்தறிவு சிந்தனைகளைப் சாக்ரடீஸ் பரப்பினார்.
நீங்கள் வெற்றிபெறுவதல்ல உங்களின் மகிழ்ச்சியான வாழ்கை
நீங்கள் எல்லா சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ்வது தான் உங்கள் வாழ்வின் வெற்றி மகிழ்ச்சியே மனநிறைவு.
வாழ்க்கை என்பது…ஒரு சந்தர்ப்பம் நழுவ விடாதிருங்கள் !
ஒரு கடமை – நிறைவேற்றுங்கள்!!
ஒரு இலட்சியம் – சாதியுங்கள்!!!
ஒரு சோகம் – தாங்கிக்கொள்ளுங்கள்!!!!
ஒரு போராட்டம் – வென்றுகாட்டுங்கள்!!!!!
ஒரு பயணம் – நடத்தி முடியுங்கள்!!!!!!
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.
- ஆலன் ஸ்டிரைக்
ஒப்பீடு என்பது சுயமரியாதைக்கு ஒரு விஷம், பொறாமையின் வேர்.
ஒப்பீடுகள் வாழ்க்கைக்கு மதிப்பையோ, அர்த்தத்தையோ, மகிழ்ச்சியையோ சேர்க்காது. அதையெல்லாம் எடுத்துச் சென்றுவிடும்.
மற்றவர்களோடு உங்களை ஒப்பிடுவதன் மூலம், நீங்கள் எதையும் பெற மாட்டீர்கள், ஆனால் நீங்கள் நிறைய இழப்பீர்கள்.
சரியான அளவீடுகள் இல்லாமல் ஒப்பிடுவது சாத்தியமில்லை ஆனால் நாங்கள் எப்போதும் நியாயமற்ற முறையில் ஒப்பிடுகிறோம்.
நம்மைப் பற்றி நமக்குத் தெரிந்த மோசமானதை மற்றவர்களைப் பற்றி நாம் நினைக்கும் சிறந்தவற்றுடன் ஒப்பிடுகிறோம்.
எல்லோரும் தனித்துவமானவர்கள், எனவே எந்த ஒப்பீடும் நியாயமற்றது.
தூக்கம் என்பது உங்களுக்குத் தேவைப்படும் ஓர் ஓய்வு. அந்த ஓய்வு இன்றி உங்களால் வாழ முடியாது. உங்கள் உடலைவிட மனதுக்கு நிச்சயமாக ஓய்வு தேவைப்படுகிறது. எனவேதான் உடலளவிலும் மனதளவிலும் ஓய்வு கிடைக்கும்படியாக இயற்கை தூக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தூக்கத்திலும்கூட மனம் தொடர்ந்து செயல்படுவதை தற்போது விஞ்ஞானத்தில் கண்டறிந்து இருக்கிறார்கள்
உறக்கத்தின் அவசியம் குறித்து உலக அளவில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் மூன்றாவது வெள்ளியன்று உலக உறக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
இரவில் நீண்ட நேரம் உறங்கி, பகல் பொழுதில் தனது அலுவல்களை கவனித்துக் கொள்ளும் இயற்கை முறையைத் தான் மனித சமுதாயம் நெடுங்காலமாகப் பின்பற்றி வந்தது. சமீபமாக, பகலில் இரவைப் போல உறங்கியும், இரவில் பகலைப் போல வேலை செய்யும் நிலைமை பல மடங்கு அதிகரித்துவிட்டது.
இந்த ஆண்டு உலக தூக்க தினத்தின் கருப்பொருள் 'உறக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியம்' என்பதாகும். நன்றாக சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது போலவே உடல், மன மற்றும் சமூக நல்வாழ்வைப் பேணுவதற்கு தூக்கத்தின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. நல்ல ஆரோக்கியத்திற்கான ஒரு முக்கிய நடத்தையாக தூக்கம் இன்னும் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை. அதை கொண்டு வரும் முயற்சி தான் இது.
பழிவாங்குதல் எண்ணம் ஒரு மனிதனை மிருகமாக்கி விடுகிறது.
இதனால் சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்.
ஒருவர் பழிவாங்கும் எண்ணத்துடன் இருந்தால் அவருக்குள் கோபம், வெறுப்பு, பயம் போன்ற தீய உணர்வுகள் இருக்கும். ஒருவரை பற்றி ஒழுங்காக புரிந்து கொள்ளாமல் அவரை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தி கொள்வதே பழிவாங்குவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
பழிவாங்க நினைப்பவர்கள் தங்களைவிட பலவீனமாக இருப்பவர்களை மட்டுமே பழிவாங்க துடிப்பார்கள்.
ஏனென்றால் அவர்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதுவே தனக்கு மேல் இருக்கும் அதிகாரிகள் போன்ற நபர்களை பழிவாங்க மாட்டோம்.
ஏனென்றால் அவர்களால் நமக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதற்காக. எனவே பழிவாங்குதல் எண்ணம் மிருகத்திற்கு சமமாக கருதப்படுகிறது.
அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல்தான் பழிவாங்கும் உணா்ச்சியைத் தூண்டுகிறது என்று சமூக உளவியலாளா் யான் மெக்சீ கூறுகிறாா்.
பழிவாங்கும் உணா்ச்சி அதிகம் உள்ளவா்கள், அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றும் தாம் எல்லோர் கவனத்தில் இருக்க வேண்டும் என்றும் தம் நிலையிலிருந்து தாழ்ந்துவிடக் கூடாது என்றும் நினைப்பவா்களாகவும் இருப்பாா்கள் என்று அவா் கூறுகிறாா்
From the publisher's feed
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்