
Sign up to save your podcasts
Or


மூலம்: எழுத்தாளர் புரபி பாசுவின் வங்க மொழிக் கதை
யச் சிறுகதை
புரபி பாசு | வங்க மொழிக் கதை | மொழிபெயர்ப்பு | மதியழகன் சுப்பையா
மொழிபெயர்ப்பு
புரபி பாசுமதியழகன் சுப்பையாமொழிபெயர்ப்புவங்க மொழிக் கதை
விடுப்பு
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2009/09/03/விடுப்பு/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்
Ku. Pa. Raa | Short story | "Vidiyuma?" |எழுத்தாளர் |கு. ப. ரா | "விடியுமா?" | சிறுகதை |
கு. ப. ராஜகோபாலன்- சிறு அறிமுகம்.
கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன்
சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கைவரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும்அவரது சிறுகதைகளின் சிறப்பினால் “சிறுகதை ஆசான்” என்றுஅழைக்கப்படுகிறார்.
கு.ப.ரா.வின் எழுத்துக்கள் அனேகமாக ஆண் _ பெண் உறவுகளைஅடிப்படையாகக் கொண்டவை. ஆனால், அதை சூட்சுமமாகவும்கலையுணர்ச்சியுடனும் சொல்வதில் வல்லவர்.
கு.ப.ரா. 79 சிறுகதைகள், 8 நாடகங்கள், 21 கவிதைகள், 1 நாவல், 8 வாழ்க்கைவரலாற்று நூல்களைத் தனது 42 வயதுக்குள் எழுதியிருக்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://azhiyasudargal.wordpress.com/2010/09/30/விடியுமா-கு-ப-ரா/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
விடிந்து கொண்டிருக்கிறது | சிறுகதை | இரா. முருகன் | | Short Story | Era Murugan |
Description
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://www.sirukathaigal.com/குடும்பம்/விடிந்து-கொண்டிருக்கிறத/#more-15779
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | சிறுகதை | "வெயில் உகந்தாள்" | Aekaanthan | Short Story | M. A. Susila | Short Story | Veyil UganthaL
எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா-
ஒரு சிறு முன்னுரை
காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா
தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில்
பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.
இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்,
நூல்திறனாய்வாளர் எனப் பல களங்களிலும் மும்முரமாக இயங்கி
வருகிறார்.
‘ஓர் உயிர் விலை போகிறது’ என்ற இவரது முதல் சிறுகதைக்கு
1979 ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப் போட்டியின் முதற்பரிசு
பெற்றார். இப்போது பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும்
சொந்தக்காரர். இவர் நிறைய சிறுகதைகள், நாவல், கட்டுரைகள்,
மொழியாக்கங்களைத் தந்துள்ளார். ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்
படைப்புகள் இவருக்கு மிகவும் பிடிக்கும்.
To read: / முழுவதும் வாசிக்க
https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2021/oct/03/வெயில்-உகந்தாள்-3710494.html
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi
சொல்வனம் | Amarnath | short story | "Vazhkaiyin Artham" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | "வாழ்க்கையின் அர்த்தம்" | சிறுகதை
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு
சிறு முன்னுரை
அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ்
தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட
பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல்
சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு
இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று,
உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க /https://solvanam.com/2010/05/13/வாழ்க்கையின்-அர்த்தம்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சந்துரு மாணிக்கவாசகம் | சிறுகதை | வாரிசு |Chandru Manikavasagan| Short story| Varisu
எழுத்தாளர் சந்த்ரு மாணிக்கவாசகம்-ஒரு சிறு முன்னுரை.
பல்வேறு இதழ்களில் சிறுகதை எழுதி வரும் எழுத்தாளர் சந்த்ரு மாணிக்கவாசகம், அண்மையில் கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில் முதல் பரிசுவென்றதோடு மேலும் பல போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளார். விரைவில், சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிடவிருக்கிறார்.
அரசுதிரைப்படக் கல்லூரியில் இயக்குனர் பயிற்சி பெற்றிருக்கும் இவர், மலையாளத் திரைப்படம் ஒன்றை இயக்கியிருப்பதோடு, விரைவில் தமிழ்ப்படம் ஒன்றையும் இயக்கவுள்ளார். "நீ நான் நிலா", "அசுரகுரு" போன்ற திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவான இவர் தமிழக அரசு விருது பெற்ற குறும்படம், மத்திய, மாநிலஅரசுத் துறைகளுக்கான ஆவணப்படங்கள், விளம்பரங்கள் போன்றவற்றையும் இயக்கியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க/
https://kalkionline.com/kalki-new/stories-kalki/vaarisu
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சதங்கை இதழ்,
ஏப்ரல்-ஜூன் 1996
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை "சிவனணைந்த பெருமாளின் சிக்கல்கள்"/ NanjilNada' s "Vanthan Varuvan Varanindran"
To read: / முழுவதும் வாசிக்க
https://azhiyasudargal.wordpress.com//2013/02/23/வந்தான்வருவான்வாராநின்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Chandra Thangaraj | Short story |"Vanmam" | சந்திரா தங்கராஜ் | சிறுகதை | "வன்மம்"
எழுத்தாளர் சந்திரா தங்கராஜ்- ஒரு சிறு முன்னுரை
எழுத்தாளர் ,சந்திரா தங்கராஜ் தேனி மாவட்டம் கூடலூரில் பிறந்து தற்போதுசென்னையில் வசித்து வருகிறார்.
இவர் குமுதம், ஆனந்த விகடன் போன்ற பல இதழ்களில் பத்திரிக்கையாளராகப் பணியாற்றியதுடன் "கள்ளன்" திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
இவரது 'பூனைகள் இல்லாத வீடு', 'காட்டின் பெருங்கனவு, "அழகம்மா", "சோளம்" ஆகிய சிறுகதை தொகுப்புகளும்,
'நீங்கிச் செல்லும் பேரன்பு',
'வழிதவறியது ஆட்டுக்குட்டி அல்ல கடவுள்',
"மிளகு" ஆகிய கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.
"புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப் பரிசு" காலச்சுவடு விருது, "விகடன் விருது",
"சுந்தர ராமசாமி விருது",
விஜய் தொலைக்காட்சியின் "சிகரம் தொட்ட பெண்கள்" விருது, "பெண் இயக்குனர்" விருது, "தேவ தேவன்" விருது
எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
To read: /முழுவதும் வாசிக்க
https://www.sirukathaigal.com/குடும்பம்/வன்மம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
S. Suresh | short story "Vanmam" |
எழுத்தாளர் |எஸ்.சுரேஷ் | "வன்மம்" | சிறுகதை
எழுத்தாளர் எஸ். சுரேஷ் - சிறு அறிமுகம்
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுவதில் வல்லவர் எழுத்தாளர் எஸ். சுரேஷ்.
இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு 'பாகேஷ்ரீ' சுஜாதா உயிர்மை பரிசை பெற்றது. சொல்வனத்திலும், பதாகையிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியதோடு இவரது கட்டுரைத் தொடரான 'கவியின் கண்' பலரால் கவனிக்கப்பட்ட ஒன்று. திரையிசையில் கே.வி.மகாதேவன் பற்றி இவர் சொல்வனத்தில் எழுதிய கட்டுரை பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதைத் தவிரப் பல இசைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் தனது இசைக் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை மின் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2014/05/18/வன்மம்-2/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
உஷாதீபன் | சிறுகதை| "அவரவர் மனசு" | குங்குமம் | Writer | Usha Deepan
|short Story | "Avaravar Manasu"
எழுத்தாளர் உஷாதீபனின் சிறுகதை "அவரவர் மனசு"
எழுத்தாளர் உஷாதீபன்- ஆசிரியர் குறிப்பு
இவர் இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. வத்தலக்குண்டுவில் பிறந்த இவர் உதவிக் கணக்கு அலுவலகராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
1981-ல் எழுத ஆரம்பித்து விகடன், தாய், குங்குமம், கல்கி, சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், சதங்கை, தினமணி கதிர், செம்மலர், உயிர்எழுத்து, தாமரை, வார்த்தை என்று வார, மாத இதழ்களிலும், இணைய தள இதழ்களான திண்ணை, பதாகை, உயிரோசை, கீற்று, பதிவுகள், அதிகாலை, ஆகிய இதழ்களிலும் எழுத்து தொடர்கிறது.
முதல் சிறுகதைத் தொகுப்பு 'உள்ளே வெளியே' இதைத் தொடர்ந்து பார்வைகள், நேசம், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நினைவுத் தடங்கள், சில நெருடல்கள், திரை விலகல், வெள்ளை நிறத்தொரு பூனை, தனித்திருப்பவனின் அறை போன்ற பல இவரது குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுதிகளாகும்.
புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள் போன்றவை இவரது குறுநாவல்களாகும்.
சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதைப் பரிசு, கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, இளையதலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழா சிறுகதைப் போட்டிப் பரிசு எனப் பல பரிசுகள் பெற்றுள்ளார்.
To read: /முழுவதும் வாசிக்க/
குங்குமம் இதழ்
ஃபிப்ரவரி 17, 2023
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi
From the publisher's feed