Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • Solvanam | K.S. Suthakar | Short Story | Nanku NatkaL Kondaattam | கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | நான்கு நாட்கள் கொண்டாட்டம்

    Solvanam | K.S. Suthakar | Short Story | Nanku NatkaL Kondaattam |

    கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | நான்கு நாட்கள் கொண்டாட்டம்


    எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்- சிறு அறிமுகம்

    யாழ்ப்பாணத்தில் வீமன்காமம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டு இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். முப்பது சர்வதேச சிறுகதைப்போட்டிகளிலும், இரண்டு குறுநாவல் போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளார்.

    `எங்கே போகின்றோம்?’, `சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதிகளும், `வளர் காதல் இன்பம்’ குறுநாவலும் மற்றும் 2022- ல் `பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுதியும் அச்சில் வெளிவந்துள்ளன.

    அமேசான் கிண்டில் பதிப்பாக `மெல்பேர்ண் வெதர்’, `கார்காலம்’, `ஏன் பெண்ணென்று’ குறுநாவல்கள் வெளிவந்திருக்கின்றன.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/25/நான்கு-நாட்கள்-கொண்டாட்ட/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    20 min
  • ஏசுராஜ் | சிறுகதை | நீர் வளையம் | காக்கைச்சிறகினிலே – மே 2012 | Ithayam Esuraj | Short Story | Neer VaLaiyam

    ஏசுராஜ் | சிறுகதை | நீர் வளையம் | காக்கைச்சிறகினிலே – மே 2012 | Ithayam Esuraj | Short Story | Neer VaLaiyam

    எழுத்தாளர் இதயா ஏசுராஜ்- சிறு முன்னுரை

    ஏசுராஜ் என்ற இயர்பெயர் கொண்ட இவரது புத்தகங்கள் பதினொன்றுக்கும் மேலாக வெளிவந்துள்ளன. விழி, திருவிழா என்ற இதழ்களை சிறிது காலம் நடத்தி வந்தார். இவர் இதயம் கதை மலை கதைப் போட்டியில் இரு முறை முதல் பரிசும் உரத்த சிந்தனை இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும் பெற்றுள்ளார்.

    இவரது முதல் சிறுகதை 1993ல்

    வேளாங்கண்ணி குரலொலியில் வந்த “நேசமுள்ள நெஞ்சங்கள்” ஆகும்.

    இதயா ஏசுராஜின் படைப்புகள் தினத்தந்தி, மாலை மலர், தினகரன், உரத்த சிந்தனை, மணி புறா, காக்கை சிறகினிலே போன்ற பல தளங்களில் வந்துள்ளன.

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://www.sirukathaigal.com/சிறப்புக்-கதை/நீர்-வளையம்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan

    13 min
  • Solvanam | Sankaran | சங்கரன் | கட்டுரை | நிகழ்தகவு, காலம் மற்றும் கருந்துளையின் வெப்பம்

    Solvanam | Sankaran | சங்கரன் | கட்டுரை | நிகழ்தகவு, காலம் மற்றும் கருந்துளையின் வெப்பம்

    எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார்.

    இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார்.


    ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில் இரண்டு மோனோகிராஃப்களையும் பல பிரபலமான அறிவியல் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். Seven Brief Lessons on Physics என்ற அவரது புத்தகம் 41 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர் சங்கரன் - சிறு குறிப்பு

    இளவயதிலிருந்தே வாசிப்பு ஆர்வம் கொண்ட சங்கரன் ஒரு மென்பொறியாளர். ஈரோடைச் சேர்ந்த இவர் சென்னையில் வசிக்கிறார்.

    இவரது ஆதர்ச எழுத்தாளர்கள் ஜெயமோகன், புதுமைப்பித்தன், கந்தர்வன், க நா சு ஆவர். இவர் தனது வலைப்பூவில் பதிவுகள் எழுதி வருகிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/25/நிகழ்தகவு-காலம்-மற்றும்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    22 min
  • Solvanam | Semicolon | Saroja_Ramamurthyin _Vadu_ sirukathai | செமிகோலன் | கட்டுரை | சரோஜா ராமமூர்த்தியின் ‘வடு’ சிறுகதை

    Solvanam | Semicolon | Saroja_Ramamurthyin _Vadu_ sirukathai | செமிகோலன் | கட்டுரை | சரோஜா ராமமூர்த்தியின் ‘வடு’ சிறுகதை

    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/25/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    11 min
  • ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 16

    ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 16

    ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.


    திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.

    ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.

    ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/25/தெய்வநல்லூர்-கதைகள்-16/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    29 min
  • எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வேட்டை நாய்" | M. A. Susila | translated Story | VEtai Naay

    எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வேட்டை நாய்" | M. A. Susila | translated Story | VEtai Naay

    எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா-

    ஒரு சிறு முன்னுரை

    காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா

    தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில்

    பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.

    இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்,

    நூல்திறனாய்வாளர் எனப் பல களங்களிலும் மும்முரமாக இயங்கி

    வருகிறார்.

    ‘ஓர் உயிர் விலை போகிறது’ என்ற இவரது முதல் சிறுகதைக்கு

    1979 ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப் போட்டியின் முதற்பரிசு

    பெற்றார். இப்போது பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும்

    சொந்தக்காரர். இவர் நிறைய சிறுகதைகள், நாவல், கட்டுரைகள்,

    மொழியாக்கங்களைத் தந்துள்ளார். ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்

    படைப்புகள் இவருக்கு மிகுந்த

    ஈடுபாடு உண்டு.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/25/வேட்டை-நாய்/


    ஒலி வடிவம்:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice

    : Saraswathi Thiagarajan

    35 min
  • Christi Nallaratnam | Short Story | Vetridam | கல்கி இதழ் | கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | வெற்றிடம்

    Christi Nallaratnam | Short Story | Vetridam

    | கல்கி இதழ் | கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | வெற்றிடம்


    எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினம் - ஒரு சிறு முன்னுரை

    மெல்பேர்ன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுத்துலகிற்கு புதியவர். கடந்த நான்கு ஆண்டுகளாக பல இலக்கிய தளங்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார்.


    கல்கி சஞ்சிகையில் பல சிறுகதைகளும் இருபதுக்கும் அதிகமான கட்டுரைகளும் எழுதியுள்ளார்.


    இவரது சிறுகதைகளில் வலுவான பாத்திரப்படைப்பு, மனித மென் உணர்வுகள் சார்ந்த கொந்தளிப்புகள், தனிமனித அனுபவங்களின் திரட்டு ஆகிய அம்சங்கள் முதன்மை பெறும்.


    இவர் ஒரு ஓவியரும் கூட. பல சஞ்சிகைகளிலும் மின்னிதழ்களிலும் இவரின்ஓவியங்கள் வெளிவந்துள்ளன.


    வர்த்தக வங்கி அதிகாரியான இவர் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைசங்கத்தின் உதவி செயலாளர் ஆவர்.


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    17 min
  • எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | வக்கிரம் | Pavannan | Vakkiram | short story

    எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | வக்கிரம் | Pavannan | Vakkiram | short story

    எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை.

    விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி.

    இவரது இயற்பெயர் பாஸ்கரன்.

    பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

    கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைஉடையவர்.

    இலக்கிய சிந்தனை விருது, சாகித்திய அகாதெமியின் சிறந்தமொழி பெயர்ப்பாளருக்கான விருது, தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது, புதுமைப்பித்தன் விருது,

    கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது மற்றும் எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://writerpaavannan.blogspot.com/2022/04/blog-post_10.html

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    17 min
  • சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும் | Vinothathu_menmaiyum_cheRuvagathu_thanmaiyum

    சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | வினோதத்து மென்மையும் செறுவகத்து கடுமையும் | Vinothathu_menmaiyum_cheRuvagathu_thanmaiyum

    எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை

    இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்

    எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.

    சக்யை (2019), குருதியுறவு (2020),

    கடுவழித்துணை (2020), கடல் (2022).


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/11/வினோதத்து-மென்மையும்-செற/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    13 min
  • கல்கி | ரிஷபன் | சிறுகதை | உயிர்மூச்சு!! | Rishaban | Short Story | Uyir MUchu

    கல்கி | ரிஷபன் | சிறுகதை | உயிர்மூச்சு!! | Rishaban | Short Story | Uyir MUchu

    எழுத்தாளர் ரிஷபன்- சிறு அறிமுகம்


    ஆர். சீனிவாசன் என்ற இயற்பெயர் உடைய எழுத்தாளர் ரிஷபன்

    இதுவரை அனைத்து தமிழ் முன்னணி இதழ்களிலும் சுமார் 2000 கதைகள் எழுதியுள்ளார் மற்றும் 12 நாவல்களுக்குச் சொந்தக்காரர்.

    கல்கி பொன்விழா போட்டியில் இவரது கதை மூன்றாம் பரிசு பெற்றது. ராஜம் மாத பெண்கள் இதழில் முதல் பரிசு. சாவியிலும் முதல் பரிசு .

    இவரது சிறுகதைத் தொகுப்பு நூலான 'துளிர்', மற்றும் ‘பனி விலகும் நேரம்’ முதல் பரிசுகளை வென்றன. சூர்யா சிறுகதைத் தொகுப்பு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடத்திய போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது.

    கவிதைகளும் எழுதியுள்ளார். இவரது 'ஏன்' சிறுகதை பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://kalkionline.com/magazines/kalki/short-story-breath-of-life


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan

    9 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com