
Sign up to save your podcasts
Or


Solvanam | Karthik Kirubakaran |
கார்த்திக் கிருபாகரன் | சிறுகதை | கதவு
எழுத்தாளர் கார்த்திக் கிருபாகரன்- சிறு முன்னுரை
சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்ட
கார்த்திக் கிருபாகரன் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்று
மஸ்கட்டில் பொறியியலாளராகப் பணி புரிகிறார். இவரது
சொந்த ஊர் மணப்பாறை.
சொல்வனத்தில் கதைகள் எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/02/கதவு/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
மீனாக்ஷி பாலகணேஷ் | கதை | கல்கி | ராமசாமி தூதன் நானடா |
எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை
அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.
நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.
தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://kalkionline.com/magazines/kalki/story-nanada-the-messenger-of-ramaswami
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 25
எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு
பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை
பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/11/15/அதிரியன்-நினைவுகள்-25/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எஸ்ஸார்சி | சிறுகதை | வாலு போச்சி கத்தி வந்தது | Essarci | Story | Valu Pochi Kathi Vanthathu
எழுத்தாளர் எஸ்ஸார்சி- ஒரு சிறு முன்னுரை
எழுத்தாளர் எஸ்ஸார்சி என்கிற எஸ். ராமச்சந்திரன் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும் பெற்றிருக்கிறார். இவர் 7 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுப்புகள், 5 கட்டுரைத் தொகுப்புகள், 4 கவிதைத்தொகுப்புகள், 4 மொழிபெயர்ப்புத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். எழுதுவதுடன் தற்போது “திசை எட்டும்” பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவிலும் உள்ளார். இவர் எழுதிய “நெருப்புக்கு ஏது உறக்கம்” எனும் நாவல் 2008- ல் தமிழக அரசின் பரிசு பெற்றிருக்கிறது.
இதைத் தவிர நிறைய பரிசுகளையும் விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
2023/11/15/வாலு-போச்சி-கத்தி-வந்தது/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | தெய்வநல்லூர் கதைகள்- 12 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 12
ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.
திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.
ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.
ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/11/15/தெய்வநல்லூர்-கதைகள்-12/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | சாமி கிரிஷ் | சிறுகதை | "தீர்த்தம்" | Solvanam | Sami Girish | Kadankaran
கவிஞர் சாமி கிரிஷ்— ஆசிரியர் குறிப்பு.
கவிஞர் , எழுத்தாளர் சாமி கிரிஷ் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது எழுத்தில் துருவேறிய தூரிகைகள், பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள், சருகு துளிர்காலம் ஆகிய மூன்று கவிதைத்தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி,புரவி, குங்குமம்,பேசும் புதிய சக்தி, காமதேனு ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளது. இவரது கூர்ப்பி சிறார் கதை குறும்படமாக வெளிவந்துள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/11/15/தீர்த்தம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | சொல்வனம் | நன்றே செய்வாய், பிழை செய்வாய்! | NanjilNadan | Short Story
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை "நன்றே செய்வாய், பிழை செய்வாய்!"
நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.
நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.
நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.
நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
To read: / முழுவதும் வாசிக்க
2023/11/15/நன்றே-செய்வாய்-பிழை-செய்/
சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "காத்திருப்பின் கனல்" | Solvanam | Kamala Devi |
எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை
இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்
எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.
சக்யை (2019), குருதியுறவு (2020),
கடுவழித்துணை (2020), கடல் (2022).
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/11/15/காத்திருப்பின்-கனல்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Ragu Raman | Short Story | Kamaroopam | ரகு ராமன் | சிறுகதை | காமரூபம்
சொல்வனம்: எழுத்தாளர் ரகு ராமனின்
சிறுகதை “காமரூபம்”
Ragu Raman | Short Story | Kamaroopam | ரகு ராமன் | சிறுகதை | காமரூபம்
எழுத்தாளர் ரகு ராமன்- ஒரு சிறு முன்னுரை
சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் ரகு ராமன் ஒரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பயணம், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது சிறுகதைகளும் எழுதிவருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/11/15/காமரூபம்/
ஒலிவடிவம் :
சரஸ்வதி தியாகராஜன் / Voice and : Saraswathi Thiagarajan
சொல்வனம் | இத்ரீஸ் யாக்கூப் | சிறுகதை | "கடன்காரன்" | Solvanam | Idris Yakoob | Kadankaran
எழுத்தாளர் இத்ரீஸ் யாக்கூப் - ஆசிரியர் குறிப்பு
இவர் புதுக்கோட்டையின் கட்டுமாவடியைச் சார்ந்தவர். நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று அமீரகத்தில் வேளாண்மை சார்ந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கவிதைகள், கதைகள் எழுதுவதில் ஆர்வம் உடையவர். கீற்று, சொல்வனம் இதழ்களில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. இவரது குறுநாவல் முயற்சி இப்போது பதிப்பு வேலைகளில் உள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/11/15/கடன்காரன்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed