Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "உள்ளிருத்தல்" | Adithya Srinivas | story |"ULLiruthal"

    எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "உள்ளிருத்தல்" | Adithya Srinivas | story |"ULLiruthal"

    எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "உள்ளிருத்தல்" | Adithya Srinivas | story |"ULLiruthal"


    எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை

    திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ் தற்சமயம் கர்நாடகாவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது இயற்பெயர் திரு. க. ஸ்ரீநிவாஸ். இவர் தனது வலைப்பதிவில் தன் இலக்கிய வாசிப்பனுபவத்தையையும், படைப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/06/25/உள்ளிருத்தல்/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    19 min
  • சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 8 | நாவல்

    சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 8 | நாவல்


    எழுத்தாளர் அமர்நாத்- ஒரு

    சிறு முன்னுரை

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.



    To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/06/11/உபநதிகள்-8/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan

    17 min
  • சொல்வனம் | கமல தேவி | சிறுகதை |"மூங்கில் காடு" | Solvanam | Kamala Devi | Story | "Mungil Kadu"

    சொல்வனம் | கமல தேவி | சிறுகதை |"மூங்கில் காடு" | Solvanam | Kamala Devi | Story | "Mungil Kadu"


    எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை

    இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்

    எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.

    சக்யை (2019), குருதியுறவு (2020),

    கடுவழித்துணை (2020), கடல் (2022).


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/06/11/மூங்கில்-காடு/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    25 min
  • Solvanam | Kanthi Murugan | short story | Sitharum Kananggal | காந்தி முருகன் | சொல்வனம் | சிறுகதை | சிதறும் கணங்கள்

    Solvanam | Kanthi Murugan | short story | Sitharum Kananggal | காந்தி முருகன் | சொல்வனம் | சிறுகதை | சிதறும் கணங்கள்

    எழுத்தாளர் காந்தி முருகன் - சிறு முன்னுரை

    மலேசியாவின் கெடா மாநிலத்தில் சுங்கைப்பட்டாணி வட்டாரத்தில் 1981ல்

    பிறந்த காந்தி முருகன் கடந்த மூன்று ஆண்டுகளாக இலக்கியம் சார்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எழுத்தாளர் கே.பாலமுருகன் மற்றும் எழுத்தாளர் சிவா லெனின் இவருக்கு இலக்கிய உலகில் உறுதுணையாக உள்ளனர்

    இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு” மணல் மூட்டை “

    இவ்வருடம் வெளியீடு காணும். பைந்தமிழ் இலக்கியப் பேரவையின்

    கி.ரா விருது, மலேசிய பாரதி கற்பனைத் தளமும் தமிழ் நாட்டின் கலையரசர்

    கலைத் தமிழ்ச் சங்கம் இணைந்து வழங்கிய 2021ஆம் ஆண்டின் சர்வதேச

    சிங்கப் பெண்ணே விருது மற்றும் 2023 கவிக்கோ அப்துல் ரகுமான்

    நினைவாக நடத்தப்பட்ட ஹைக்கூ கவிதை போட்டியில் ஆறுதல் நிலை

    வெற்றி போன்றவை இவரது இலக்கிய முயற்சிக்குக் கிடைத்த

    அங்கீகாரங்களாகும்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/06/11/சிதறும்-கணங்கள்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    12 min
  • Solvanam | Baskar Arumugam | short story | Vaasam | பாஸ்கர் ஆறுமுகம் | சொல்வனம் | சிறுகதை | வாசம்

    Solvanam | Baskar Arumugam | short story | Vaasam | பாஸ்கர் ஆறுமுகம் | சொல்வனம் | சிறுகதை | வாசம்

    எழுத்தாளர் பாஸ்கர் ஆறுமுகம் -

    சிறு முன்னுரை

    இவர் மயிலாடுதுறையில் அஞ்சல் ஆய்வாளராகப் பணி புரிகிறார்.

    தொடர்ச்சியான வாசிப்பும், அதன் திறத்தலும் கொடுக்கும் நம்பிக்கையில் எழுதிப் பார்க்கிறார். தனது கூகிள் வலைப்பதிவில் மற்றும் பிரதிலிபி எனும் செயலியில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். சொல்வனம், வாசகசாலை இதழ்களில் இவரது பல சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/06/11/வாசம்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    19 min
  • Solvanam | Milagu Novel-Part 47 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 47 | இரா. முருகன் |

    Solvanam | Milagu Novel-Part 47 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 47 | இரா. முருகன் |


    Description

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/06/11/மிளகு-அத்தியாயம்-நாற்ப/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    28 min
  • இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 15 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 15

    இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும்

    விமானங்கள் 15 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 15

    எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை

    ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிறகு தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவருடைய எழுத்துப் பயணம் தீவிரம் கொள்ள ஆரம்பித்தது. “கதைகள் வெளியாகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்” என்கிறார் இந்துமதி.

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    11 min
  • ராஜேஷ் வைரபாண்டியன் | சிறுகதை | வடக்கத்தி | Kalakam | Rajesh Vaira Pandian | story | Vadakkathi

    ராஜேஷ் வைரபாண்டியன் | சிறுகதை | வடக்கத்தி | Kalakam | Rajesh Vaira Pandian | story | Vadakkathi

    எழுத்தாளர் ராஜேஷ் வை ரபாண்டியன் - ஒரு சிறிய முன்னுரை


    தூத்துக்குடி மாவட்டத்து நடுவைக்குறிச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜேஷ் வைரபாண்டியன் 2018ம் ஆண்டு வரை நிலாரசிகன் என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார். இரண்டுமுறை “சுஜாதா விருது” பெற்றிருக்கிறார். ஈர்ப்பு விதியை (Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறார். “தேரி’ இவரது முதல் நாவல்.

    நிறைய கவிதை தொகுப்புகள், சிறுகதை தொகுப்புகள், ஆங்கில நூல்கள் மற்றும் ஒரு சிறார் நாவலும் எழுதியுள்ளார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://kalakam.in/2023/06/vadakkathi/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    19 min
  • மீனாக்ஷி பாலகணேஷ் | கட்டுரை | ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’ | Meenakshi Balaganesh | article | Urvasi-Vikramorevaseeyam

    மீனாக்ஷி பாலகணேஷ் | கட்டுரை | ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’ | Meenakshi Balaganesh | article | Urvasi-Vikramorevaseeyam

    எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை


    அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்

    அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்

    பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.


    நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.


    தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/06/11/ஊர்வசி-விக்ரமோர்வசீயம்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    22 min
  • பலகை | சிறுகதை | இரா. முருகன் | Palagai | Short Story | Era Murugan |

    பலகை | சிறுகதை | இரா. முருகன் | Palagai | Short Story | Era Murugan |


    Description

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://www.sirukathaigal.com/குடும்பம்/பலகை/

    – ‘தேர் ‘ சிறுகதைத் தொகுப்பு – ஞானச்சேரி வெளியீடு – 1989


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    23 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com