
Sign up to save your podcasts
Or


சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 18
எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை
ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இவரது மிகச்சிறந்த படைப்பான ராக் தர்பாரி ஆங்கிலத்திலும் மற்றும் 15 இந்திய
மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சுக்லா 2011 ஆம் ஆண்டில் ஞானபீட விருதைப் பெற்றார். இவரது முதல் பெரியவிருது 1969 ஆம் ஆண்டில் இவரது
ராக் தர்பாரி நாவலுக்காகக் கிடைத்த சாகித்யஅகாடமி விருது ஆகும். மேலும் வியாஸ் சம்மன் விருதைப் பெற்ற இவருக்கு 2008 ஆம் ஆண்டில், இந்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்து கெளரவித்தது.
இவர் 2011ஆம் ஆண்டில்காலமானார்.
எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத்- ஒரு சிறிய முன்னுரை.
இவர் ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியில் இருந்து சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் என்று பல வகை இலக்கியப்படைப்புக்களை
மொழியாக்கம் செய்துள்ளார்.
இவர் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதை 1993ஆம்ஆண்டில் பெற்றார்.
இவரது படைப்புகள்
தர்பாரி ராகம், ராஜநர்த்தகி, கூர்ஜரத்தின் செல்வன், ஜெயசோமநாத், தேவதாசி,
புயலும் ஒளியும், வீரசுதந்திரம்,
சப்தபதி, கங்கை தாய் ஆகும்.
இவர் 1999ஆம் ஆண்டில் காலமானார்
To read: / முழுவதும் வாசிக்க
https://archive.org/details/DarbariRagamShukla
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும்
விமானங்கள் 14 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 14
எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை
ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிறகு தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவருடைய எழுத்துப் பயணம் தீவிரம் கொள்ள ஆரம்பித்தது. “கதைகள் வெளியாகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்” என்கிறார் இந்துமதி.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் சிறுகதை "அமெரிக்கக்காரி"
எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "அமெரிக்கக்காரி" | A. Muttulingam | Short story| "Americakari"
எழுத்தாளர் அ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை.
ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது‘அக்கா’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.
நிறைய சிறுகதைத் தொகுப்புகள் , நாவல்கள், கட்டுரைகளுக்கு இவர்சொந்தக்காரர்.
இவருடைய கதைகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப்பரிசுகள் கிடைத்துள்ளன. இலங்கை சாகித்திய அகாதமி பரிசு வென்ற இவருக்கு2022ல் கி. ரா. விருதும் கிடைத்தது.
கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பிற்கு வித்திட்டவர் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://azhiyasudargal.blogspot.com/2013/04/blog-post_8.html
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சுஜாதா:சிறுகதை:நகரம்:Suujatha:Story:Nagaram
ஒலி வடிவம், :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சுஜாதா : சிறுகதை: ஃபிலிமோத்ஸவ் : Suujatha: Story: filmothsav
எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதை "ஃபிலிமோத்ஸவ்"
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | சார்பினோ டாலி | சிறுகதை | "கொலைப் பசி" | Charbino Dolli| story |"Kolaip Pasi"
எழுத்தாளர் சார்பினோ டாலி- ஒரு சிறுமுன்னுரை.
நாகர்கோவிலைச் சொந்த ஊராகக் கொண்டுள்ள இந்த இளம் எழுத்தாளர் சொல்வனம், வனம் இதழில் சிறுகதை எழுதுகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://vanemmagazine.com/கொலைப்-பசி-சார்பினே-டாலி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Sushil Kumar | short story | "Eeral" | சுஷில் குமார் | "ஈரல்" | வனம் | சிறுகதை
எழுத்தாளர் சுஷில் குமார்- ஒரு அறிமுகம்
குமரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட
எழுத்தாளர் சுஷில் குமார் குலசேகரன் புதூரில் பிறந்தார்.
தற்போது கோவையில் வசித்து வருகிறார்.
இங்கு ஈஷா வித்யா கிராமப் பள்ளிகளின் கல்வி ஒருங்கிணைப்பாளர் (Academic Coordinator)
ஆகப் பணிபுரிகிறார்.
சுஷில் குமார் எழுதி வெளியிடப்பட்டுள்ள சிறுகதைத் தொகுதிகள்
"சப்தாவர்ணம்", "மூங்கில்" ஆகும். இவர் மொழிபெயர்ப்பு கதைகளையும்
கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.
இவரது மொழிபெயர்ப்பு நூலான "தெருக்களே பள்ளிக்கூடம்"
என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
To read: / முழுவதும் வாசிக்க https://vanemmagazine.com/ஈரல்-சுஷில்-குமார்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 17
எழுத்தாளர் இரா முருகன்-
சிறு முன்னுரை
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://puthu.thinnai.com/archives/47263
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 14"
எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு
பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை
பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/05/28/அதிரியன்-நினைவுகள்-14/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed