
Sign up to save your podcasts
Or


Solvanam | Milagu Novel-Part 46 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 46 | இரா. முருகன் |
Description
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/05/28/மிளகு-அத்தியாயம்-நாற்பத-6/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Therisai Siva | Short Story | Vethalappatti | தெரிசை சிவா | சிறுகதை | வெத்தலப்பட்டி |
தெரிசை சிவா -ஒரு சிறு முன்னுரை
கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனம்கோப்பு பிறந்த ஊர். தற்போது துபாயில் வசிக்கும் இவர் இதற்கு முன்பு குட்டிக்கோரா, திமில் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இசை, சினிமா என சராசரி தேடுதல்களில் ஆரம்பித்து முகநூல் மற்றும் இலக்கிய வாசகர் வட்டங்களில் முனைப்புடன் இயங்கி வருகிறார். இவரது "சடலசாந்தி" சிறுகதை வாசகர்கள் மத்தியில் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றது. அமானுஷ்யங்களையும் அறிவியலையும் அசாதாரண சம்பவங்களால் கோர்த்து எழுதியிருக்கும் "ருபினி" என்ற புதினம் இவரது முதல் புனைவு நாவலாகும்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/05/28/வெத்தலப்பட்டி/
ஒலிவடிவம் :
சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Siva Krishnamoorthy | Manakkan | சொல்வனம் | சிவா கிருஷ்ணமூர்த்தி | சிறுகதை | மாணாக்கன் |
எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தி - ஆசிரியர் குறிப்பு
எழுத்தாளர் சிவா(சிவகுமார்) கிருஷ்ணமூர்த்தி தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மரபிலக்கியம் சார்ந்த ரசனைக்கட்டுரைகளை எழுதிவருகிறார். சிவா கிருஷ்ணமூர்த்தியின் கதைகள் ஐரோப்பியநிலப்பரப்பில் நிகழ்பவை.
இவரது முதல் சிறுகதை 'ஸ்குரில்' 2011-ஆம் ஆண்டு'சொல்வனம்' இதழில் வெளியானது. இவரது முதல் சிறுகதை தொகுப்பு'வெளிச்சமும் வெயிலும்' 2018-ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் 'சொல்வனம்', 'பதாகை' இணைய இதழ்களின் ஆசிரியக்குழுவில் உள்ளார். 'லண்டன் இலக்கியவட்டத்திலும்' முக்கிய உறுப்பினராக உள்ளார்.
To read: /முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/05/28/மாணாக்கன்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சித்ரூபன் | குறு நாவல் | 1/64, நாராயண முதலி தெரு 4 | Chithroopan | 1/64, Narayana muthali theru 4
எழுத்தாளர் சித்ரூபன்- ஒரு சிறு முன்னுரை.
சித்ரூபன் என்ற புனைப்பெயரில் எழுதி வரும் இவர் இயற்பெயர் ராமன். சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்து, வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்ற இவரது நிறைய கதைகள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.
கிழக்கு பதிப்பகத்தின் "சென்னை தினம்” சிறுகதைப் போட்டியில் இவரின்"மனிதம்" கதை மூன்றாம் பரிசு வென்றது. இலக்கியப்பீடம் நடத்திய சிறுகதைப்போட்டி 2023-ல் இவரது "அந்நிய மோகம்" சிறப்புப் பரிசு பெற்றது. இவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று விரைவில் வெளிவர உள்ளது. இவர் எழுதிய முதல் குறுநாவல் "1/64, நாராயண முதலி தெரு" சொல்வனத்தில் தொடராக வருகிறது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/05/28/1-64-நாராயண-முதலி-தெரு-4/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | எழுத்தாளர் | ஸிந்துஜா | சிறுகதை | "மூட்டம்" | Solvanam | Cyndhujhaa | Muuttam
எழுத்தாளர் ஸிந்துஜா
எழுத்தாளர் ஸிந்துஜா திருவையாறைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு மேலாக எழுத்து உலகத்தில் இருக்கிறார்.
இவர் 150க்கும் மேலாக சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.
இவர் சிறு இலக்கியப் பத்திரிக்கைகளிலேயே அதிகம் எழுதியுள்ளார். கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரைகளும் எழுதி வருகிறார்.
ஸிந்துஜா சிறுகதைகள், பின்தொடரும் ஒற்றைத்தடம், கரையைக் கடந்து செல்லும் நதி என்ற இவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2023/05/28/மூட்டம்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan
Ambai | short story | Katil Oru Maan |
சொல்வனம் | எழுத்தாளர் | அம்பை |சிறுகதை | "காட்டில் ஒரு மான்"
எழுத்தாளர் அம்பை - சிறு முன்னுரை.
தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவரான அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லக்ஷ்மி (C. S. Lakshmi) 1944 -ம் ஆண்டு பிறந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பும், பெங்களுரூவில் முதுகலைப் படிப்பும் கற்ற அம்பை, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.
பதின்பருவத்திலேயே எழுத ஆரம்பித்த அம்பையின் கதைகளில் பெண்களின்உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் மிக அழகாக வெளிப்படுகின்றன. இவர், பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதாரணமாக தொட்டுச் செல்பவர். இவர் தமது இயற்பெயருடன் ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.
”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக இவர் செயல்பட்டு வருகிறார். சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக இவருக்கு 2021- ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | மெளனி | அழியாச்சுடர்| | Mouni | Short story | Azhiyachudar
எழுத்தாளர் மௌனி- ஒரு சிறு குறிப்பு.
மாயவரத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்து கும்பகோணத்தில் படித்த இவரதுஇயற்பெயர் மணி.
கணிதத்தில் பட்டம் பெற்று திருமணத்திற்கு பிறகு 14 ஆண்டுகள் கும்பகோணத்தில் வசித்தார். பின்னர் சிதம்பரம் வந்து இறுதிவரை அங்கேயேவாழ்ந்தார்.
மெளனி 24 சிறுகதைகளும், 2 கட்டுரைகளும் எழுதி உள்ளார்.
இவருக்கு இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.
நன்றி : இச்சிறுகதை 1936ல் மணிக்கொடி இதழில் வெளியானது. கலைஞன்பதிப்பகம் வெளியிட்ட 'இந்த நூற்றாண்டின் சிறுகதைகள்' என்ற விட்டல் ராவ்தொகுத்த தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும்
விமானங்கள் 13 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 13
எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை
ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிறகு தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவருடைய எழுத்துப் பயணம் தீவிரம் கொள்ள ஆரம்பித்தது. “கதைகள் வெளியாகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்” என்கிறார் இந்துமதி.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 16
எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை
ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இவரது மிகச்சிறந்த படைப்பான ராக் தர்பாரி ஆங்கிலத்திலும் மற்றும் 15 இந்திய
மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சுக்லா 2011 ஆம் ஆண்டில் ஞானபீட விருதைப் பெற்றார். இவரது முதல் பெரியவிருது 1969 ஆம் ஆண்டில் இவரது
ராக் தர்பாரி நாவலுக்காகக் கிடைத்த சாகித்யஅகாடமி விருது ஆகும். மேலும் வியாஸ் சம்மன் விருதைப் பெற்ற இவருக்கு 2008 ஆம் ஆண்டில், இந்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்து கெளரவித்தது.
இவர் 2011ஆம் ஆண்டில்காலமானார்.
எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத்- ஒரு சிறிய முன்னுரை.
இவர் ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியில் இருந்து சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் என்று பல வகை இலக்கியப்படைப்புக்களை
மொழியாக்கம் செய்துள்ளார்.
இவர் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதை 1993ஆம்ஆண்டில் பெற்றார்.
இவரது படைப்புகள்
தர்பாரி ராகம், ராஜநர்த்தகி, கூர்ஜரத்தின் செல்வன், ஜெயசோமநாத், தேவதாசி,
புயலும் ஒளியும், வீரசுதந்திரம்,
சப்தபதி, கங்கை தாய் ஆகும்.
இவர் 1999ஆம் ஆண்டில் காலமானார்
To read: / முழுவதும் வாசிக்க
https://archive.org/details/DarbariRagamShukla
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 7 | நாவல்
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு
சிறு முன்னுரை
அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/05/28/உபநதிகள்-ஏழு/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed