Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • S. Ramakrishnan | short story | Njabkak Kal | எஸ். ராமகிருஷ்ணன் | சிறுகதை | ஞாபகக் கல் | அரூ மின்னிதழ்

    S. Ramakrishnan | short story | Njabkak Kal | எஸ். ராமகிருஷ்ணன் | சிறுகதை | ஞாபகக் கல் | அரூ மின்னிதழ்

    எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்- ஒரு சிறு அறிமுகம்

    கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம்,

    குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்றுபல்வேறு

    தளங்களிலும் இவர் தீவிரமாக இயங்கி வருகிறார்.


    நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இரண்டு வரலாற்று நூல்களைஎழுதியிருக்கிறார்.

    இவரது சஞ்சாரம் நாவலுக்காக 2018ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருதுபெற்றதுடன்,

    கனடாவின் இயல் விருது, தமிழக அரசின் விருது, சிகேகே இலக்கிய விருது, மாக்சிம்கார்க்கி விருது , முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்தநாவலுக்கான விருது, ஞானவாணி விருது, நல்லி திசை எட்டும் விருது, விஸ்டம்விருது, கண்ணதாசன் விருது, பெரியார் விருது, துருவா விருது, எஸ்.ஆர்.வி. இலக்கிய விருது, சேலம் தமிழ் சங்க விருது, விகடன் விருது, கொடீசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, இயற்றமிழ் வித்தகர் விருது. இலக்கியச்சிந்தனைவிருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

    தேசாந்திரி என்ற தனது பதிப்பகத்தையும் திறம்பட நடத்தி வருகிறார்.

    இவர் தனது குடும்பத்துடன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.


    To read முழுவதும் வாசிக்க

    https://aroo.space/2022/10/09/nyabaga-kal/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi ThiagarajanVideo link

    18 min
  • M. Gopalakrishnan | short story | Iravu | எம். கோபாலகிருஷ்ணன் | சிறுகதை | இரவு |

    M. Gopalakrishnan | short story | Iravu

    | எம். கோபாலகிருஷ்ணன் | சிறுகதை | இரவு |

    எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன்- ஆசிரியர் குறிப்பு

    1966-ம் ஆண்டு திருப்பூரில் பிறந்த இவர் வணிகவியலில் முதுகலைப் பட்டமும், ஹிந்தி இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

    சமகால தமிழ் இலக்கியத்தின் முக்கிய இரு நாவல்களான மணல் கடிகையும், அம்மன் நெசவும் இவரது பேர் சொல்லும் படைப்புகள். 5 நாவல்கள், 7 சிறுகதைத் தொகுதிகள், 2 குறுநாவல் தொகுப்பு, 3 கட்டுரைத் தொகுப்பு, மற்றும் சில முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்களும் இவரது ஆக்கங்களில் உண்டு.

    எம்.கோபாலகிருஷ்ணன் 'கதா’ தேசிய விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான தமிழக அரசு விருது, தஞ்சை பிரகாஷ் நாவல் விருது, 'ஸ்பேரோ’ விருது மற்றும்

    வாசக சாலை விருது என்று பல விருதுகளைப் பெற்றுள்ளார்.


    To read முழுவதும் வாசிக்க

    https://www.sirukathaigal.com/குடும்பம்/இரவு/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    37 min
  • ரபீந்திர நாத் தாகூர் | மூலக்கதை | மொழிபெயர்ப்பு | பாரதியார் | “நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்

    ரபீந்திர நாத் தாகூர் | மூலக்கதை | மொழிபெயர்ப்பு | பாரதியார் | “நஷ்ட பூஷணம்” அல்லது காணாமற் போன நகைகள்
    To read: / முழுவதும் வாசிக்க
    https://solvanam.com/2021/02/27/நஷ்ட-பூஷணம்-அல்லது-காண/
    ஒலி வடிவம் :
    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    35 min
  • "Athma" | Ezuthalar | Nanjil Nadan | short story |"ஆத்மா" |எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | சிறுகதை |ஆனந்த விகடன் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் | சிறுகதை

    "Athma" | Ezuthalar | Nanjil Nadan | short story |"ஆத்மா" |எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | சிறுகதை |ஆனந்த விகடன்

    எழுத்தாளர் நாஞ்சில்நாடன் | சிறுகதை

    நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.

    நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

    நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

    நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://nanjilnadan.com/2011/02/23/ஆத்மா-விகடன்-முழு-கதை/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    17 min
  • "TheerakuRai" | Ezuthalar | Su. Venugopal | short story |"தீராக்குறை" |எழுத்தாளர் | சு. வேணுகோபால் | சிறுகதை |புதிய காற்று – பிப்ரவரி 2006

    "TheerakuRai" | Ezuthalar | Su. Venugopal | short story |"தீராக்குறை" |எழுத்தாளர் | சு. வேணுகோபால் | சிறுகதை |புதிய காற்று – பிப்ரவரி 2006

    எழுத்தாளர் சு. வேணுகோபால்- சிறு முன்னுரை.

    எழுத்தாளர் சு. வேணுகோபால்- சிறு முன்னுரை.

    சு. வேணுகோபால், குமரகுரு பன்முக கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய கதைகள் அனைத்துமே முற்போக்கு இலக்கியத்தின் பேசுபொருட்களை எடுத்தாண்டிருப்பவை. மிகக் கனமான விடயங்களைக் கூட மிகச் சாதாரணமாக, யதார்த்தமாகச் சொல்லுகின்றன.

    சு.வேணுகோபாலின் படைப்புகளில் சில.

    நுண்வெளி கிரகணங்கள், பூமிக்குள் ஓடுகிறது நதி, களவு போகும் புரவிகள், கூந்தப்பனை, வெண்ணிலை, திசையெல்லாம் நெருஞ்சி , மற்றும் பால்கனிகள், ஆட்டம், நிலம் எனும் நல்லாள்.


    இவர் பெற்ற விருதுகள் பாரதிய பாஷா பரிஷத் விருது , குமுதம் ஏர் இந்தியா விருது, கு. அழகிரிசாமி நினைவு விருது, கேரளா பண்பாட்டுக் கழக விருது, தமிழ்நாடு அரசு விருது, வலசை நாவல் விருது, தன்னறம் இலக்கிய விருது முதலியன ஆகும்.



    To read: / முழுவதும் வாசிக்க

    https://keetru.com/puthiyakaatru/feb06/venugopal.php


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice Saraswathi Thiagarajan

    18 min
  • ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 13

    ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 13


    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/archives/47135

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    14 min
  • சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 13

    சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 13

    எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை

    ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.


    இவரது மிகச்சிறந்த படைப்பான ராக் தர்பாரி ஆங்கிலத்திலும் மற்றும் 15 இந்திய

    மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


    சுக்லா 2011 ஆம் ஆண்டில் ஞானபீட விருதைப் பெற்றார். இவரது முதல் பெரியவிருது 1969 ஆம் ஆண்டில் இவரது

    ராக் தர்பாரி நாவலுக்காகக் கிடைத்த சாகித்யஅகாடமி விருது ஆகும். மேலும் வியாஸ் சம்மன் விருதைப் பெற்ற இவருக்கு 2008 ஆம் ஆண்டில், இந்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்து கெளரவித்தது.

    இவர் 2011ஆம் ஆண்டில்காலமானார்.


    எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத்- ஒரு சிறிய முன்னுரை.


    இவர் ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியில் இருந்து சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் என்று பல வகை இலக்கியப்படைப்புக்களை

    மொழியாக்கம் செய்துள்ளார்.


    இவர் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதை 1993ஆம்ஆண்டில் பெற்றார்.

    இவரது படைப்புகள்

    தர்பாரி ராகம், ராஜநர்த்தகி, கூர்ஜரத்தின் செல்வன், ஜெயசோமநாத், தேவதாசி,

    புயலும் ஒளியும், வீரசுதந்திரம்,

    சப்தபதி, கங்கை தாய் ஆகும்.

    இவர் 1999ஆம் ஆண்டில் காலமானார்


    To read: / முழுவதும் வாசிக்க

    https://archive.org/details/DarbariRagamShukla

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    29 min
  • இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 10| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 10|

    இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும்

    விமானங்கள் 10| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 10|

    எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை

    ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிறகு தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவருடைய எழுத்துப் பயணம் தீவிரம் கொள்ள ஆரம்பித்தது. “கதைகள் வெளியாகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்” என்கிறார் இந்துமதி.

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    9 min
  • Hephziba Jesudasan : Novel : Putham Veedu : ஹெப்சிபா ஜேசுதாசன் : நாவல் : புத்தம் வீடு 8 : பட்டணத்து உறவு!

    Hephziba Jesudasan : Novel : Putham Veedu : ஹெப்சிபா ஜேசுதாசன் : நாவல் : புத்தம் வீடு 8 : பட்டணத்து உறவு!


    எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன்- சிறு ஆசிரியர் குறிப்பு

    ஹெப்சிபா ஜேசுதாசன் புலிப்புனம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பிறந்தது பர்மாவில். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று ஆசிரியையாகப் பணியாற்றினார். ஹெப்சிபா எழுதிய

    புத்தம் வீடு, டாக்டர் செல்லப்பா, அனாதை

    மா-னீ முதலியன புதினங்கள் ஆகும்.

    ஆங்கில நூல்களும் எழுதியுள்ளார்

    இவர் விளக்கு

    விருதை 2002 ல் பெற்றார்

    2012-ல் தனது 88வது அகவையில் காலமானார்.

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voic : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    32 min
  • மாலன் | தோழி 1- அத்தியாயம் 7 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozkhi-7- Part1 | Kali


    மாலன் | தோழி 1- அத்தியாயம் 7 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozkhi-7- Part1 | Kali

    எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை

    வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ்தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருதுஆகியவற்றைப் பெற்றதுடன்2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://maalan.co.in/தோழி/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    14 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com