
Sign up to save your podcasts
Or


சொல்வனம் | Amarnath | Novel | "Upanathigal" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 4 | நாவல்
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு
சிறு முன்னுரை
அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/04/09/உபநதிகள்-4/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
மார்கெரித் யூர்செனார்| எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 11"
எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு
பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை
பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/04/09/அதிரியன்-நினைவுகள்-11/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
பா.ராகவன் | சிறுகதை | பரிநிர்வாணம் | Pa. Ragavan | story | Parinirvanam
எழுத்தாளர் பா. ராகவன்- ஒரு சிறு முன்னுரை.
பா. ராகவன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கிறார். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதிய பாஷா பரிட்சத் விருது பெற்றவர்.
இதைத் தவிர இலக்கியப்பீட விருது, திருப்பூர் தமிழ் சங்க விருது, கம்பம் பாரதி இலக்கியப் பேரவை விருது போன்ற பல விருதுகள் பெற்றுள்ளார்.
அலகிலா விளையாட்டு, அலை உறங்கும் கடல், பூனைக்கதை, யதி, டாலர் தேசம் மற்றும் நிலமெல்லாம் ரத்தம் ஆகியன இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கனஆகும்.
இவர் எழுத்துப் பயிற்சிக்கூடம் நடத்தி வருகிறார்.
மெட்ராஸ் பேப்பரின் (www. madraspaper.com) ஆசிரியரும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://uyirmmai.com/literature/tamil-short-story-by-pa-ragavan-2/
ஒலி வடிவம்
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
Hephziba Jesudasan : Novel : Putham Veedu : ஹெப்சிபா ஜேசுதாசன் : நாவல் : புத்தம் வீடு 5 : சிறைவாசம்
எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன்- சிறு ஆசிரியர் குறிப்பு
ஹெப்சிபா ஜேசுதாசன் புலிப்புனம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பிறந்தது பர்மாவில். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று ஆசிரியையாகப் பணியாற்றினார். ஹெப்சிபா எழுதிய
புத்தம் வீடு, டாக்டர் செல்லப்பா, அனாதை
மா-னீ முதலியன புதினங்கள் ஆகும்.
ஆங்கில நூல்களும் எழுதியுள்ளார்
இவர் விளக்கு
விருதை 2002 ல் பெற்றார்
2012-ல் தனது 88வது அகவையில் காலமானார்.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | க. நா. சு | சிறுகதை | "சிட்டுக்குருவி" | Ka. Naa. Su |Short Story | Chitukuruvi
எழுத்தாளர் க.நா.சு- ஒரு சிறு குறிப்பு
க.நா.சு- என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம் (கந்தாடைநாராயணசாமி சுப்ரமண்யம்) வலங்கைமானில் 1912இல் பிறந்தார்.
க. நா.சு. சிறந்த தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும்மொழிபெயர்ப்பாளராகத் திகழ்ந்தார். தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi – Literary Magazine போன்றவற்றை நடத்தினார். மயன் என்னும் புனைபெயரில் புதுக்கவிதைகளையும் எழுதியுள்ளார். “பொய்த்தேவு” புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு.
1986ம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. இவர் நிறைய நாவல்கள் மற்றும் சிறுகதைகளும் எழுதியுள்ளார். 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. க.நா.சு. 1988ல் காலமானார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://archive.org/details/orr-12630_Sittukkuruvi
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சித்ரூபன் | நாவல் | 1/64, நாராயண முதலி தெரு- 1 | Indhumathi | 1/64, Narayana muthali theru
எழுத்தாளர் சித்ரூபன்- ஒரு சிறு முன்னுரை.
சித்ரூபன் என்ற புனைப்பெயரில் எழுதி வரும் இவர் இயற்பெயர் ராமன். சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்து, வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்ற இவரது நிறைய கதைகள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.
கிழக்கு பதிப்பகத்தின் "சென்னை தினம்” சிறுகதைப் போட்டியில் இவரின்"மனிதம்" கதை மூன்றாம் பரிசு வென்றது. இலக்கியப்பீடம் நடத்திய சிறுகதைப்போட்டி 2023-ல் இவரது "அந்நிய மோகம்" சிறப்புப் பரிசு பெற்றது. இவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று விரைவில் வெளிவர உள்ளது. இவர் எழுதிய முதல் குறுநாவல் "1/64, நாராயண முதலி தெரு" சொல்வனத்தில் தொடராக வருகிறது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/04/09/1-64-நாராயண-முதலி-தெரு/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | ராஜேஷ் வைரபாண்டியன் | சிறுகதை | பனிக்காலத்தின் பகல் | Solvanam | Rajesh Vaira Pandian | story | Panikalathin Pagal
எழுத்தாளர் ராஜேஷ் வைரபாண்டியன் - ஒரு சிறிய முன்னுரை
தூத்துக்குடி மாவட்டத்து நடுவைக்குறிச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜேஷ்வைரபாண்டியன் 2018ம் ஆண்டு வரை நிலாரசிகன் என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார். இரண்டுமுறை “சுஜாதா விருது” பெற்றிருக்கிறார். ஈர்ப்பு விதியை(Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறார். “தேரி’ இவரது முதல் நாவல்.
நிறைய கவிதை தொகுப்புகள், சிறுகதை தொகுப்புகள், ஆங்கில நூல்கள் மற்றும்ஒரு சிறார் நாவலும் எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/04/09/பனிக்காலத்தின்-பகல்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் தேஜு சிவனின் சிறுகதை "ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்"
சொல்வனம் | தேஜு சிவன் | சிறுகதை | ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான் | Theju Sivan | Oru thabala, Sarangi, K. K matrum Nan
எழுத்தாளர் தேஜு சிவன் - ஒரு சிறிய முன்னுரை
எழுத்தாளர் சந்தானகிருஷ்ணன்- ஒரு சிறு முன்னுரை
சந்தானகிருஷ்ணன் என்ற இயற்பெயருடைய எழுத்தாளர்
தேஜுசிவன் தஞ்சாவூரில் வசிக்கிறார்.
இவர் 1980 இல் எழுதத் தொடங்கி தனது சிறுகதைகளை
கணையாழி உட்பட அந்தக் காலத்தின் அனைத்து முன்னணி இதழ்களிலும்
மதுமிதா என்ற புனைப்பெயரில் எழுதினார். 25 வருட நீண்ட இடைவெளிக்குப்பிறகு மறுபடியும் தேஜூ சிவன் என்ற புனைப்பெயரில் எழுத்துலகில் கால் பதித்துள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/04/09/ஒரு-தபலா-சாரங்கி-கே-கே-மற்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும்
விமானங்கள் 6 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 6 |
எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை
ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிறகு தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவருடைய எழுத்துப் பயணம் தீவிரம் கொள்ள ஆரம்பித்தது. “கதைகள் வெளியாகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்” என்கிறார் இந்துமதி.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | விக்னேஷ் | சிறுகதை | ஒரு குழந்தையும் இரு உலகங்களும் | Solvanam | Vignesh| story
விக்னேஷ் | சிறுகதை | ஒரு குழந்தையும் இரு உலகங்களும் | Vignesh| story | Rathan
எழுத்தாளர் வி. விக்னேஷ்- ஒரு சிறு அறிமுகம்
கோவையில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் வி.விக்னேஷ் தற்சமயம் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகதைகளையும் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/04/09/ஒரு-குழந்தையும்-இரு-உலகங/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
From the publisher's feed