அழகு (Beauty) , விலங்கு பொருள், நபர் அல்லது இடம் இவற்றின் பண்பு சார்ந்த இன்பம் அல்லது திருப்தியை அளிக்கும் ஒரு புலனுணர்வு அனுபவம் ஆகும். அழகியல், கலாச்சாரம், சமூக உளவியல் மற்றும் சமூகவியல் ஆகியவற்றின் பகுதியாக அழகு ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு "சிறந்த அழகு" என்பது போற்றப்படக்கூடிய ஒரு பொருளைக் குறிக்கின்றது, அல்லது ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தில் அழியாத தன்மை கொண்ட மிகச்சரியான அம்சங்களைக் கருத்தில் கொண்டுள்ளதாக அமைகிறது. அழகு என்னும் உணர்வின் அனுபவம் பெரும்பாலும் சில உறுப்படிகளின் பொருள் விளக்கமாகவும் இயற்கையுடன் இயைபும் சமநிலையும் கொண்டதாகவும் தொடர்புபடுத்தப்படுகிறது. கவர்ச்சி மற்றும் நலம் சார்ந்த உணர்வுகளுக்கு இந்நிலை வழிவகுக்கிறது.