மு.க ஸ்டாலினை இரண்டாவது முறையாக, அவர் வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அப்போது, பாஜக செய்த துரோகங்களை பட்டியலிட்டுள்ளார்.
அதற்கு, 'பாஜக என்றாலே அப்படித்தானே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என ஃபிரண்ட்லி அட்வைஸ் கொடுத்திருந்தார் மு.க ஸ்டாலின்.
கூடுதலாக சில அரசியல் ரீதியிலான டீல்கள் பேசப்பட்டது.
முன்னதாக, பாஜக கூட்டணி வேண்டுமென வைத்திலிங்கமும், வேண்டாம் என்று பண்ருட்டி ராமச்சந்திரனும் கூற, அனல் வீசியது பன்னீரின் ஆலோசனைக் கூட்டம். இதற்கடுத்து, மீண்டும் சி.எம் மு.க ஸ்டாலினை, ஓபிஎஸ் சந்திப்பதை விரும்பாமல், மீட்டிங்கை புறக்கணித்த வைத்தியலிங்கமும் மனோஜ் பாண்டியனும். இப்படி உட்கட்சிப் புகைச்சல்களைக் கடந்து மோடி,எடப்பாடிக்கு எதிராக மூன்று அஸ்திரங்களை கையில் எடுத்துள்ளார் பன்னீர். அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். இன்னொரு பக்கம், முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்ய பன்னீரை வைத்து கணக்கு போடும் ஸ்டாலின். அடுத்து, வைகோவுக்கு மு.க ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி.
அனல் வீசும் அரசியல்.