ஓயாத போராக தொடர்கிறது எடப்பாடி வெர்சஸ் செங்கோட்டையன் இடையிலான பனி போர். இதில்,
இன்று மார்ச் 17-ம் தேதி சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடந்தது. அந்த பரபரப்பை விட செங்கோட்டையன் - எடப்பாடி மோதல் தான், முக்கிய டாக்காக இருந்தது. காரணம், மார்ச் 15-ம் தேதி, பத்திரிகையாளர் ரங்கராஜ பாண்டே நிகழ்ச்சியில், பேசியதில் இருந்து இன்று சட்டமன்றத்திற்கு முன்பு அதிமுக கூட்டிய எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்காதது வரை பலவற்றை பற்ற வைத்துள்ளார் செங்கோட்டையன்.
எடப்பாடி தலைமைக்கு எதிரான வேலைகளை செங்கோட்டையன் செய்ய தொடங்கிவிட்டார். பின்னால் இருந்து 3 சக்திகள் இயக்குகிறார்கள் என எடப்பாடி-க்கு தகவல் செல்கிறது. என்ன நடக்கிறது?