'பாமகவின் தலைவர் நானே பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டேன்' என்று பதில் அறிக்கையை கொடுத்த அன்புமணி. இதில் கோபத்தின் உச்சத்துக்கே போன ராமதாஸ், 'எனக்கே அரசியல் பாடம் எடுக்கிறாரா?' என கொதித்துள்ளார். அவசர அவசரமாக ஞாயிற்றுக்கிழமை, முக்கியமான நிர்வாகிகளை வரவழைத்து, அன்புமணிக்கு எதிராக கையெழுத்து வாங்கவும் முயற்சித்துள்ளார் ராமதாஸ். அதே நேரம், 'மே 11 வன்னியர் சங்க மாநாடு' நடக்க இருப்பதால், அது வரையிலுமாவது, இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் பெரிதாகாமல் இருக்க, பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது சீனியர்கள் மற்றும் குடும்பத்தினர் அடங்கிய சமாதான குழு. இதில் முக்கியமாக அன்புமணி பின்னால் டெல்லி ஆட்டம் இருக்குமோ? என ராமதாஸ் சந்தேகிக்கிறார். இவை எல்லாவற்றையும் க்ளோசாக வாட்ச் செய்தபடி இருக்கிறார் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், ஜெயக்குமாரை சுற்றி அதிமுகவுக்கு புயல்.