'கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை கூட்டணி என்று மட்டுமே சொன்னார் அமித்ஷா' என்று எடப்பாடி இன்று பிரஸ்மீட் கொடுத்துள்ளார். ஏன் இந்த மாற்றம்?
சில நாட்களுக்கு முன்பு, ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் அமித்ஷா ஆலோசனையில் இருந்தபோது, ஃபோன் கால் மூலம் எடப்பாடியை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது 'ஐந்து டிமாண்டுகளை' முன் வைத்தார் அதை, அமித்ஷா அக்சப்ட் செய்து கொண்டார். அதன் பிற்பாடு தான் கூட்டணி உறுதியானது. அதற்கடுத்து, தொகுதி பங்கீடு சம்பந்தமாக டாப் லெவல் லீடர்ஸ்-களுடன், பேச்சுவார்த்தையும், ஒரு பக்கம் நடந்து வந்தது. அதில் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக எதிர்பார்ப்பதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ஆனால் இது எடப்பாடி தரப்புக்கு ஷாக். இருந்தாலும் முதற்கட்டமாக 150 தொகுதிகளில் அதிமுக, 84 தொகுதிகள் கூட்டணிக்கு என பேசப்பட்டுள்ளது. இதில் அமித்ஷா டீம் இந்தளவுக்கு உறுதியாக இருக்க காரணம், ஒரு தனியார் ஏஜென்சி, 'தமிழ்நாட்டில் 50 தொகுதிகள் பாஜகவுக்கு பாசிட்டிவாக' உள்ளதாக சர்வே எடுத்து பட்டியல் கொடுத்துள்ளனர். இதை வைத்து அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறது பாஜக. இந்த நிலையில் தான் பாஜக - அதிமுக கூட்டணி உறுதியானதால், தங்களை அமித் ஷா, நட்டாற்றில் விட்டு விட்டதாக ஓபிஎஸ், சசிகலா, டிடிவி மூன்று தரப்பும் அப்செட்.
அந்த மூன்று தரப்பும் தான், 'கூட்டணி ஆட்சி' என்பதை எடப்பாடிக்கு எதிராக பரப்பி விட்டுள்ளனர். இதன் மூலம் எடப்பாடி தலைமையில் அதிமுக பலவீனமாகியுள்ளது என்கிற இமேஜ் வலுப்பெறும் என்பது அந்த மூவரின் அரசியல் கணக்கு. இதை புரிந்துகொண்டுதான், இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எடப்பாடி மேலும் 'கூட்டணி ஓகே ஆனால் நோ கூட்டணி ஆட்சி' என்றும், தன் பேட்டியின் மூலம் அமித் ஷாவுக்கு மெசேஜூம் தட்டி விட்டுள்ளார் எடப்பாடி என்கிறார்கள்.