Sadhguru speaks about the memory that water has and also talks about the significance of River Ganga at Kashi.
காசி எங்கே இருக்கிறது என்று ஒருவரைக் கேட்டால் அவர் வடக்கே கைகாட்டலாம்; இல்லையென்றால் வரைபடத்தில் ஒரு புள்ளியை சுட்டிக் காட்டலாம், ஆனால் வீடியோவில் சத்குருவோ காசி பூமியிலேயே இல்லை என்கிறார். அப்படியென்றால் உண்மையில் காசி எங்கிருக்கிறது?! வீட்டில் குடம் குடமாகத் தண்ணீர் இருக்க, அனைவரும் கோயிலில் தரும் ஒரு சொட்டு தீர்த்தத்திற்காக அலைமோதுவது ஏன்? இப்படிப் பல விடைதெரியாக் கேள்விகளுக்கு சத்குருவின் விடைகளோடு இங்கே விஜய் டிவியின் 'அத்தனைக்கும் ஆசைப்படு' நிகழ்ச்சியின் பகுதி!
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices