
Sign up to save your podcasts
Or


S. Ramakrishnan | short story | Angal Theruvil Oru Viidu | எஸ். ராமகிருஷ்ணன் | சிறுகதை | ஆண்கள் தெருவில் ஒரு வீடு
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்- ஒரு சிறு அறிமுகம்
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம்,
குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்றுபல்வேறு
தளங்களிலும் இவர் தீவிரமாக இயங்கி வருகிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இரண்டு வரலாற்று நூல்களைஎழுதியிருக்கிறார்.
இவரது சஞ்சாரம் நாவலுக்காக 2018ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருதுபெற்றதுடன்,
கனடாவின் இயல் விருது, தமிழக அரசின் விருது, சிகேகே இலக்கிய விருது, மாக்சிம்கார்க்கி விருது , முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சிறந்தநாவலுக்கான விருது, ஞானவாணி விருது, நல்லி திசை எட்டும் விருது, விஸ்டம்விருது, கண்ணதாசன் விருது, பெரியார் விருது, துருவா விருது, எஸ்.ஆர்.வி. இலக்கிய விருது, சேலம் தமிழ் சங்க விருது, விகடன் விருது, கொடீசியா வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, இயற்றமிழ் வித்தகர் விருது. இலக்கியச்சிந்தனைவிருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
தேசாந்திரி என்ற தனது பதிப்பகத்தையும் திறம்பட நடத்தி வருகிறார்.
இவர் தனது குடும்பத்துடன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
To read முழுவதும் வாசிக்க
எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் (இரண்டாம் தொகுதி) உயிர்மை பதிப்பகம்
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
K.J. Ashokkumar | Short story |"Theiyvamaram" | கே.ஜே. அசோக்குமார் சிறுகதை | தெய்வமரம்
எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார்- ஒரு சிறு முன்னுரை
தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் கடந்த
பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார்
தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள்
என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
"சாமத்தில் முனகும் கதவு" என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே
வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் "குதிரை மரம் & பிறகதைகள்" என்ற
இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
To read: /முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2017/12/04/தெய்வமரம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Thamarai | Ki. Rajanarayanan | short story | Kathavu | தாமரை | கி. ராஜநாராயணன் | சிறுகதை | கதவு
எழுத்தாளர் கி. ராஜநாராயணன்- ஒரு சிறு முன்னுரை
கரிசல் இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணன்.
இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றினார்.
சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச்சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகளுக்குச்சொந்தக்காரர்.
2021ஆம் ஆண்டு தனது 99ஆம் வயதில் புதுச்சேரியில் கி. ரா இயற்கை எய்தினார்.
To read முழுவதும் வாசிக்க
https://puthagampesum.files.wordpress.com/2015/11/orr-6917_kadhavu-ki-ra.pdf
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
மாலன் | களவு | சிறுகதை| Malan | KaLavu | Story | Kalki
எழுத்தாளர் மாலனின் சிறுகதை "களவு"
எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை
வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ்தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருதுஆகியவற்றைப் பெற்றதுடன்2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://maalan.co.in/களவு/
(கல்கி தீபாவளி மலர் -2019 )
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
தினமணி | இந்துமதி | தாயார் அமிர்தவல்லி | Dinamani | Indhumathi | Mother Amirthavalli |
எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை
ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிறகு தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவருடைய எழுத்துப் பயணம் தீவிரம் கொள்ள ஆரம்பித்தது. “கதைகள் வெளியாகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்” என்கிறார் இந்துமதி.
To read முழுவதும் வாசிக்க
https://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2017/nov/15/அம்மா---இந்துமதி-2808403.html
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே: பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்
அகழ்
எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ்- ஒரு சிறு முன்னுரை.
சொந்த ஊர் கோவைக்கு அருகே ஒத்தக்கால் மண்டபம். தற்போது பெங்களூரில் நிதித் துறையில் பணி புரிகிறார். இதுவரை கனவு மிருகம், துரதிரஷ்டம் பிடித்த கப்பலின் கதை என இவரது இரு சிறுகதைத் தொகுப்புகளும், நள்ளிரவின் சொற்கள் எனும் கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://akazhonline.com/?p=4213
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
தேடல் | சிறுகதை | விஸ்வநாத் சங்கர் | Thedal | Short Story | Vishwath Sankar
விஸ்வநாத் சங்கர்
சொல்வனம்: எழுத்தாளர் விஸ்வநாத் சங்கரின் சிறுகதை "தேடல்"/Solvanam: Ezuthalar Vishwanath Sankar's story "Thedal"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/03/18/தேடல்/
ஒலி வடிவ : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Kovai Anandan | Short story |"Thathavin Diary" |
கோவை ஆனந்தன் | சிறுகதை | "தாத்தாவின் டைரி"
கவிஞர் கோவை ஆனந்தன்- ஒரு சிறு முன்னுரை
1979 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் குமாரபாளையயத்தில் பிறந்து கோவைதொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பை முடித்தார். இவர் கதைகள் கவிதைகள்எழுதி வருகிறார். 2003 ஆம் ஆண்டு இவரது கவிதையைப் படித்த அப்போதையஇந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் இவரைப்பாராட்டி கவிஞர் என்ற அடைமொழி கொடுத்தார். பாக்கியா, சிறுவாணி மெயில், தன்னம்பிக்கை மாத இதழ் குடும்ப நாவல்,கொலுசு போன்ற அச்சுஇதழ்களிலும்இன்னும் பல சிற்றிதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன, பொள்ளாச்சிஇலக்கிய வட்டத்தின் வெளியீடாக இவரது முதல் கவிதை தொகுப்பு வெளிவரஉள்ளது.
To read: /முழுவதும் வாசிக்க
https://padhaakai.com/2023/01/01/diary/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சக்திவேல் கொளஞ்சிநாதன் | சிறுகதை | தமிழே துணை
| Sakthivel |Short Story|Thamizhe ThuNai
எழுத்தாளர் சக்திவேல் கொளஞ்சிநாதன் - சிறு முன்னுரை
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் சக்திவேல் கொளஞ்சிநாதன்
தகவல் தொழில் நுட்பத்தில் மூதறிவியல் பட்டம் பெற்றவர்.
சென்னையில் சில காலம் பணி செய்து, தற்போது ஐந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியில் இருக்கிறார்.
இந்த இளம் எழுத்தாளர் இதுவரை சொல்வனம் இணைய இதழில் சில சிறுகதைகளும், வளரி கவிதை இதழில் சில கவிதைகளும் வெளியிட்டுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2020/09/12/தமிழே-துணை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan
கு. ப. ரா | "ராஜேந்திரன் கனவு" | சிறுகதை | Ku. Pa. Raa | Short story | "Rajendran Kanavu"
கு. ப. ராஜகோபாலன்- சிறு அறிமுகம்.
கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன்
சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கைவரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும்அவரது சிறுகதைகளின் சிறப்பினால் “சிறுகதை ஆசான்” என்றுஅழைக்கப்படுகிறார்.
கு.ப.ரா.வின் எழுத்துக்கள் அனேகமாக ஆண் _ பெண் உறவுகளைஅடிப்படையாகக் கொண்டவை. ஆனால், அதை சூட்சுமமாகவும்கலையுணர்ச்சியுடனும் சொல்வதில் வல்லவர்.
கு.ப.ரா. 79 சிறுகதைகள், 8 நாடகங்கள், 21 கவிதைகள், 1 நாவல், 8 வாழ்க்கைவரலாற்று நூல்களைத் தனது 42 வயதுக்குள் எழுதியிருக்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க https://www.sirukathaigal.com//சரித்திர-கதை/தமிழ்-மங்கை/
வசந்தம்,
மே 1943
தமிழ் மங்கை
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed