Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • எழுத்தாளர் | ஸிந்துஜா | சிறுகதை | பதாகை| "தாது" | EzuthaLar | Cyndhujaa | Short Story | "Thaathu"

    எழுத்தாளர் | ஸிந்துஜா | சிறுகதை | பதாகை|  "தாது" | EzuthaLar | Cyndhujaa | Short Story | "Thaathu"


    எழுத்தாளர் ஸிந்துஜா

    எழுத்தாளர் ஸிந்துஜா திருவையாறைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு மேலாக எழுத்து உலகத்தில் இருக்கிறார். 

    இவர் 150க்கும் மேலாக சிறுகதைகள் எழுதியிருக்கிறார். 

    இவர் சிறு இலக்கியப் பத்திரிக்கைகளிலேயே அதிகம் எழுதியுள்ளார்.  கவிதை, இலக்கிய விமர்சனம், கட்டுரைகளும் எழுதி வருகிறார். 

    ஸிந்துஜா சிறுகதைகள், பின்தொடரும் ஒற்றைத்தடம், கரையைக் கடந்து செல்லும் நதி என்ற இவரது சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

     To read: / முழுவதும் வாசிக்க/

    https://padhaakai.com/2022/06/18/mineral/


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan 

    20 min
  • எழுத்தாளர் | வ.ஸ்ரீநிவாசன் | சிறுகதை | "சுரண்டல்"/ V. Srinivasan | short stoary | "Surandal"

     

     

     எழுத்தாளர் | வ.ஸ்ரீநிவாசன் | சிறுகதை | "சுரண்டல்"/  V. Srinivasan | short stoary | "Surandal"

    எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசன்-

     ஒரு சிறு முன்னுரை

    வ. ஸ்ரீநிவாசன் எழுதியது முதன் முதலில் 1971 ல் வெளிவந்தது. இவரது கதை, கவிதை, கட்டுரைகள்  'கணையாழி', "உயிரெழுத்து', 'நவீன விருட்சம்', 'வார்த்தை', 'சொல்வனம்' இதழ்களில் வெளியாகி உள்ளன.


    இவரது நூல்கள், 'எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது', 'காணக்கிடைத்தவை' என்கிற கட்டுரை நூல்கள், ' வாழ்க்கை பற்றிய அறிவு' ஜே. கிருஷ்ணமூர்த்தி யின் On education நூலின் மொழி பெயர்ப்பு நூலும் ஆகும்.

    இவர் 'சொல்வனம்' இணைய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். மாதம் ஒரு நூல் வழங்கும் 'சிறுவாணி வாசகர் மையத்தின் ஆலோசகர்.


    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2010/06/11/சுரண்டல்/


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    16 min
  • எழுத்தாளர் | ஐ. கிருத்திகா | சிறுகதை “சுமை” /Author |I. Kiruthiga | story | Sumai

    எழுத்தாளர் | ஐ. கிருத்திகா | சிறுகதை 

     “சுமை” /Author  |I. Kiruthiga | story | Sumai

    எழுத்தாளர் ஐ.கிருத்திகா- 

    ஒரு சிறு முன்னுரை

    திருவாரூர் அருகே மணக்கால்

    அய்யம்பேட்டையைச் சேர்ந்த

    ஐ.கிருத்திகா

    டிப்ளமோ படித்தவர். தற்போது

    கோவையில்

    வசிக்கும் குடும்பத்தலைவி. கடந்த

    இருபது

    வருடங்களாக புனைவுலகில் எழுதிவரும்

    இவரிடமிருந்து எண்பதுக்கும்

    அதிகமான

    சிறுகதைகளும், ஆறு நாவல்களும்

    வெளிவந்துள்ளன. பல முன்னணி

    இதழ்களிலும்  

    எழுதிவருகிறார். சிறுகதை

    போட்டிகளிலும் நாவல்

    போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

    இவரது ‘கற்றாழை’ சிறுகதைத் தொகுப்பை  காலச்சுவடு பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.    

     


    எழுத்தாளர் ஐ. கிருத்திகாவின் சிறுகதை 

     “சுமை” /Author I. Kiruthiga's story KaNai 

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://solvanam.com/2021/04/10/சுமை/


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    11 min
  • எழுத்தாளர் | சோ. சுப்புராஜ் | சிறுகதை | "சக்கர வியூகம்" |So. Subburaj | story |"Chakra Vyugam"

    எழுத்தாளர் சோ. சுப்புராஜின் சிறுகதை "சக்கர வியூகம்"

    எழுத்தாளர் சோ. சுப்புராஜ்- சிறு முன்னுரை. 


    சில்வியாமேரி என்ற புனைப்பெயரிலும்  எழுதும் எழுத்தாளர் சோ. சுப்புராஜ் ஒரு B.E. (Civil) கட்டிடப் பொறியாளர். 


    தமிழின் முக்கியமான வார, மாத இதழ்களில் நூற்று  ஐம்பதுக்கும் மேற்பட்டசிறுகதைகளும் சுமார் இருபது கவிதைகளும், ஐந்து குறுநாவல்களும்மாலைமதியில் இரண்டு நாவல்களும்  இதுவரை பிரசுரமாகி யிருக்கின்றன.  


    மூன்று புத்தகங்கள் - துரத்தும் நிழல்கள் மற்றும்  பரிசுக்கதைகள் பதினெட்டுஎன்னும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் ஐங்குறுநாவல்கள் என்னும்  குறுநாவல்தொகுப்பும் - வெளியாகி இருக்கின்றன.


     இவர் ஏராளமான பரிசுகளைச் சிறுகதைப் போட்டியிலும், கவிதை, நாவல், குறுநாவல் போட்டியிலும் வென்று குவித்துள்ளார். 


     To read: / முழுவதும் வாசிக்க  

     https://old.thinnai.com/?p=11004254


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan


    21 min
  • "சூதுச்சரண்"/ Boston Bala | story |பாஸ்டன் பாலாஜி | "Soothucharan"

    "சூதுச்சரண்"/ Boston Bala | story |பாஸ்டன் பாலாஜி | "Soothucharan"  

    எழுத்தாளர் பாஸ்டன் பாலாஜி-ஒரு சிறு முன்னுரை

    பாஸ்டன் பக்கம் வசிக்கும் எழுத்தாளர் பாலாஜியின் புனைபெயர் “ பாஸ்டன் பாலாஜி”. இவரது செல்லப் பெயர் “பாபா” ஆகும். 


    கால் நூற்றாண்டு முன்பு இரா. முருகனால் நடத்தப்பட்ட ராயர் காபி கிளப் சேர்ந்த  வலையகங்களில் எழுதிய இவர்

    பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதியுள்ளார். அவற்றை தமிழோவியம் வெளியிட்டது. 


    பல துறைகளில் ஆழ்ந்து வாசித்து, அனுபவம் பெற்றவர்களுடன் உரையாடி, கலந்தாலோசித்துப் பெரும்பாலும் கட்டுரைகள் மட்டுமே இப்பொழுது எழுதுகிறார்.


    இன்றைய தலைமுறைக்குச் சமமாக எழுதிவரும் எழுத்தாளர் R. பொன்னம்மாளின் மகனே இவர்.

    Video link

    https://youtu.be/TnlAJ0AQEKw

    To read: / முழுவதும் வாசிக்க 

    https://snapjudge.blog/2005/04/29/சூதுச்சரண்/

    ஒலிவடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன் / Voice  :  Saraswathi Thiagarajan

    9 min
  • சூன்யவெளி | ஐ.கிருத்திகா | திண்ணை | சிறுகதை | SoonyaveLi | I. Kruthiga | ThiNNai |Short

    சூன்யவெளி | ஐ.கிருத்திகா | திண்ணை | சிறுகதை |  SoonyaveLi | I. Kruthiga | ThiNNai |Short Story


    எழுத்தாளர் ஐ.கிருத்திகா- 

    ஒரு சிறு முன்னுரை

    திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டையைச் சேர்ந்த

    ஐ.கிருத்திகா டிப்ளமோ படித்தவர். தற்போது கோவையில் வசிக்கும் குடும்பத்தலைவி. கடந்த இருபது வருடங்களாக புனைவுலகில் எழுதிவரும் இவரிடமிருந்து எண்பதுக்கும் அதிகமான சிறுகதைகளும், ஆறு நாவல்களும் வெளிவந்துள்ளன. பல முன்னணி இதழ்களிலும்  எழுதிவருகிறார். சிறுகதை போட்டிகளிலும் நாவல் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்


    To read: / முழுவதும் வாசிக்க  

    https://puthu.thinnai.com//சூன்யவெளி/


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

     

    17 min
  • ரொமேஷ் குணசேகர | குவர்னிகா பத்திரிகை| சிறுகதை | “Red Ink”| மொழிபெயர்ப்பு | சொல்வனம் |எழுத்தாளர் சங்கரநாராயணன் |"சிவப்பு மை"

    ரொமேஷ் குணசேகர | குவர்னிகா பத்திரிகை| சிறுகதை | “Red Ink”|

    மொழிபெயர்ப்பு | சொல்வனம் |எழுத்தாளர் சங்கரநாராயணன் |"சிவப்பு மை"  


    ரொமேஷ் குணசேகர

    ரொமேஷ் குணசேகர இலங்கைப் பின்னணி கொண்ட பிரிட்டிஷ் எழுத்தாளர். தனது படைப்புகளில் இலங்கையின் விடுதலையைத் தொடர்ந்த அரசியல், சமூக பதற்றங்களைத் தொட்டுச் செல்பவர். இவருடைய முதல் நாவலான “ரீஃப்”(Reef) 1994-ஆம் ஆண்டிற்கான புக்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. Guernica எனும் இதழில் வெளியான “Red Ink” என்ற இவரது சிறுகதையை  திரு.எஸ்.சங்கர்நாராயணன்  மொழிபெயர்ப்பில் வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2009/11/23/சிவப்பு-மை/

    ஒலி வடிவம், காணொளி: 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    9 min
  • Ku. Pa. Raa | Short story | "SiRithu VeLicham" |எழுத்தாளர் |கு. ப. ரா | "சிறிது வெளிச்சம்" | சிறுகதை |

    Ku. Pa. Raa | Short story | "SiRithu VeLicham" |எழுத்தாளர் |கு. ப. ரா | "சிறிது வெளிச்சம்" | சிறுகதை |

    கு. ப. ராஜகோபாலன்- சிறு அறிமுகம். 

    கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன் 

    சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கைவரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும்அவரது சிறுகதைகளின் சிறப்பினால் “சிறுகதை ஆசான்” என்றுஅழைக்கப்படுகிறார்.

    கு.ப.ரா.வின் எழுத்துக்கள் அனேகமாக ஆண் _ பெண் உறவுகளைஅடிப்படையாகக் கொண்டவை. ஆனால், அதை சூட்சுமமாகவும்கலையுணர்ச்சியுடனும் சொல்வதில் வல்லவர். 

    கு.ப.ரா. 79 சிறுகதைகள், 8 நாடகங்கள், 21 கவிதைகள், 1 நாவல், 8 வாழ்க்கைவரலாற்று நூல்களைத் தனது 42 வயதுக்குள் எழுதியிருக்கிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க   https://azhiyasudargal.blogspot.com/2017/04/blog-post_14.html


    ஒலி வடிவம் : 

    சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    18 min
  • |எழுத்தாளர் |லாவண்யா சுந்தரராஜன் | "சிராப்பள்ளி " | சிறுகதை |ஆவநாழி இதழ்- 15

    |எழுத்தாளர் |லாவண்யா சுந்தரராஜன் | "சிராப்பள்ளி " | சிறுகதை |ஆவநாழி இதழ்- 15 


    கவிஞர் லாவண்யா சுந்தரராஜன்- சிறு அறிமுகம்


    திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்து தற்சமயம் பெங்களூரில் வசிக்கும் கவிஞர்லாவண்யா சுந்தரராஜன் மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரிகிறார்.


    இவரது நான்கு கவிதை தொகுப்புகள் நீர்க்கோலவாழ்வை நச்சி, இரவைப் பருகும்பறவை, அறிதலின் தீ, மண்டோவின் காதலியும்,

    இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் புறாக்களை எனக்கு பிடிப்பதில்லை, முரட்டுப்பச்சை

    மற்றும் ஒரு நாவல் காயாம் பூவும் வெளிவந்துள்ளன. 

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://drive.google.com/file/d/1nCmVXrXDDcV2TMTTyrEKf2eRav6RpLW4/view?fbclid=IwAR1ncHxKYaXEQAexJDV5BdtdRXPUTJLe94CYsyIl_FIP0gYZdjiPEwPkMZ4 


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

     

     

    22 min
  • |எழுத்தாளர் |லாவண்யா சுந்தரராஜன் | "திருச்சிராப்பள்ளி " | சிறுகதை |ஆவநாழி இதழ்- 15

    |எழுத்தாளர் |லாவண்யா சுந்தரராஜன் | "திருச்சிராப்பள்ளி  " | சிறுகதை |ஆவநாழி இதழ்- 15 


    கவிஞர் லாவண்யா சுந்தரராஜன்- சிறு அறிமுகம்


    திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்து தற்சமயம் பெங்களூரில் வசிக்கும் கவிஞர்லாவண்யா சுந்தரராஜன் மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரிகிறார்.


    இவரது நான்கு கவிதை தொகுப்புகள் நீர்க்கோலவாழ்வை நச்சி, இரவைப் பருகும்பறவை, அறிதலின் தீ, மண்டோவின் காதலியும்,

    இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் புறாக்களை எனக்கு பிடிப்பதில்லை, முரட்டுப்பச்சை

    மற்றும் ஒரு நாவல் காயாம் பூவும் வெளிவந்துள்ளன. 

    To read: / முழுவதும் வாசிக்க  

    https://drive.google.com/file/d/1nCmVXrXDDcV2TMTTyrEKf2eRav6RpLW4/view?fbclid=IwAR1ncHxKYaXEQAexJDV5BdtdRXPUTJLe94CYsyIl_FIP0gYZdjiPEwPkMZ4 


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

     

     

    21 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com